'ராணுவ மோதல்களால் ஒருபோதும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது' - பிரதமர் மோடி

நான்குநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் பின்லாந்து அதிபர்அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்
'ராணுவ மோதல்களால் ஒருபோதும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது' - பிரதமர் மோடி
Published on

இந்தியா வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன் டெல்லியில் நடைபெற்ற சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"இந்தியா மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் சட்டத்தின் ஆட்சி, உரையாடல் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றில் வலுவான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. ராணுவ மோதல்களால் ஒருபோதும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இது உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல்களுக்கும் பொருந்தும். போர்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் நீடித்த அமைதியை அடைவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம்

இன்று உலகம் நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற ஒரு காலக்கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் முதல் மேற்கு ஆசியா வரை உலகின் பல பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. இத்தகைய உலகளாவிய சூழலில், உலகின் இரண்டு முக்கிய இராஜதந்திர சக்திகளான இந்தியாவும் ஐரோப்பாவும், நமது உறவின் ஒரு பொற்காலத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன. நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பானது உலகளாவிய ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழுமை ஆகியவற்றிற்குப் புதிய பலத்தைத் தருகிறது" என தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com