search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polling booth"

    • அனைத்து தொகுதிகளிலும் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
    • ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் திமுக., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    பல்லடம்:

    பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக., வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய திமுக., அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் திமுக., வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் குமார், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார் வரவேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் திமுக., வடக்கு மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், திமுக., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய வேண்டும்,கோவை பாராளுமன்ற தொகுதியில் பல்லடம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திமுக .,கூட்டணி வேட்பாளருக்கு அதிக வாக்குகள் பெற பாடுபட வேண்டும்.

    அனைத்து தொகுதிகளிலும் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு ஒன்றிய திமுக., நிர்வாகிகள் சாமிநாதன், துரை முருகன், ராஜேஸ்வரன், ரங்கசாமி, பிரகாஷ், சுரேஷ், பானுமதி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் நாளை நடக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் குறித்து காதர்பாட்சா முத்துராமலி்ங்கம் எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார்.
    • தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரத்திற்கு வருகிற 17-தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு முதுகுளத்தூரில் உள்ள சர்வ விநாயக சாய் மகாலில் நடக்கிறது. பரமக்குடி தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 11 மணிக்கு பரமக்குடி ஏபிஷா மகாலில் நடக்கிறது.

    திருவாடனை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மதியம் 2 மணியளவில் ஆர்.எஸ்.மங்கலம் குட்லு மகாலில் நடக்கிறது. ராமநாதபுரம் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மாலை 4 மணியளவில், ராமநாதபுரம் பாரதிநகர் வைஸ்ராய் மகாலில் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சர், தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள். அவரவர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்துக்கு நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் தாய்ப்பால் புகட்டும் அறை, விளையாட்டு பொருட்கள், முதலுதவி வசதியுடன் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    பாட்னா:

    7 கட்டங்களாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் நாளை 19-ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னா தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 37,38 மற்றும் 40-ம் எண் கொண்ட வாக்குச்சாவடிகளில் மக்களை வாக்குப்பதிவுக்கு ஈர்க்கும் வகையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் அறை, குழந்தைகள் காப்பகம் போல் விளையாட்டு பொருட்கள் மற்றும் முதலுதவி போன்ற சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்டது. #LSpolls #GirForest #GirForestpollingbooth #100pcvote #BharatdasBapu
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதிக்கு அருகாமையில் பாரத்தாஸ் பாப்பு என்பவர் வசித்து வருகிறார். அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    பாரத்தாஸ் பாப்பு இன்று இங்கு வந்து வாக்களித்தார். இதனால், 2019- பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்ட தனிப்பெருமை இந்த  வாக்குச்சாவடி கிடைத்துள்ளது.



    தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத்தாஸ் பாப்பு, ’ஒரு ஓட்டாக இருந்தாலும் வாக்குச்சாவடி அமைப்பதற்காக அரசு பணத்தை செலவிடுகிறது. என் இடத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார். #LSpolls #GirForest  #GirForestpollingbooth  #100pcvote #BharatdasBapu
    சுரண்டை அருகே வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து தேர்தல் அலுவலரிடம் தகராறில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள ரெட்டைகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 57) தொழிலாளி. இவர் நேற்று ஓட்டு போடுவதற்காக ரெட்டைகுளம் கிராமத்தில் உள்ள ஒரு துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது அவர் வரிசையில் நிற்காமல் உள்ளே சென்றதால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதைக் கேட்காமல் அவர் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள தேர்தல் அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    மேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடமும் தகராறு செய்தார். இது குறித்து சுரண்டை போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தார்.
    தமிழகத்தில் இன்று பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். #TNElections2019 #ElderlyVoters
    ஈரோடு:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



    ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் முருகேசன் என்ற முதியவர், வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணனும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #TNElections2019 #ElderlyVoters
    ×