என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assemmbly"

    • விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
    • 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக இடையே தான் போட்டி.

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.

    மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

    பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடக்க கட்டத்தில் உள்ளது. இறுதி முடிவு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
    • காவலர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆணையர், எஸ்.பி. மட்டுமே முடிவு செய்ய முடியும்.

    சென்னை:

    சட்டசபையில் காவலர்களுக்கு அளிக்கப்படும் வார விடுமுறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது:

    * தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    * உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 67,233 நபர்களுக்கும் வார விடுமுறை வழங்கப்படுகிறது.

    * முக்கியமான சட்டம், ஒழுங்கு பராமரிப்பு காலங்களில் மட்டும் வார விடுமுறை வழங்க முடிவதில்லை.

    * காவலர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆணையர், எஸ்.பி. மட்டுமே முடிவு செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
    • சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கின. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    தொடர்ந்து, சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய வரும் 9-ந்தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்

    சட்டம ஒழுங்கு குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். ஆனால், சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

    அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பு தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

    • கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார்.
    • அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத்துறைகளின் செயல்பாடுகள் பற்றி கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி கூடி 3 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முறைப்படி முடித்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் கூடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதே போல் அடுத்த மாதம் பொங்கலுக்கு முன்பே ஜனவரி முதல் வாரத்தில் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    எந்த தேதியில் சட்டசபையை கூட்டுவது என்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து சபாநாயகரி டம் தெரிவிப்பார். பொங்கலுக்கு முன்பு கூட்டுவதா? அல்லது அதற்கு பிறகா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிய வரும்.

    கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். அதில் அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.

    தி.மு.க. அரசின் 1½ ஆண்டு செயல் திட்டம் குறித்தும், மேலும் அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் அதில் கவர்னர் வெளியிடுவார்.

    இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் நீட் தேர்வு விலக்கு சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தும் அரசின் நிலைபாடு குறித்தும் கவர்னர் உரையில் இடம் பெறும் என தெரிகிறது.

    கவர்னர் வாசித்து முடித்ததும் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசிப்பார். இதைத் தொடர்ந்து அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

    இதைத் தொடர்ந்து மறுநாளில் இருந்து விவாதம் தொடங்கும். இதில் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பேசுவார்கள்.

    இதற்கு அமைச்சர்களும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் விரிவாக பதில் அளித்து பேசுவார்கள்.

    சமீபத்தில் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அமைச்சர்களின் இருக்கைகளும் சட்டசபையில் மாற்றி அமைக்கப்படுகிறது.

    இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படுகிறது. அவர் 10-வது அமைச்சராக அமருவார். அவருக்கு இடதுபுறம் தங்கம் தென்னரசு, வலது புறம் ரகுபதி அமருவார்கள்.

    கவர்னர் உரை மீதான விவாதத்தில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப உள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை, நெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி பரபரப்பாக பேசுவார்கள் என்பதால் சட்டசபையில் அனல் பறக்கும் விவாதங்கள் இடம் பெறும்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணிகள் என 2 பிரிவாக உள்ளதால் அவர்களுக்கு இடையேயான மோதலும் இந்த கூட்டத்தில் வெளிப்பட வாய்ப்புண்டு.

    மொத்தத்தில் வர இருக்கிற சட்டசபை கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    • சட்டசபை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.
    • அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து சபை நிகழ்வுகள்படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரி 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

    சட்டசபை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.

    சபாநாயகரின் ஒப்புதலுடன் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உரை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரோடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு

    பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளிப்பது, 110 விதியின் கீழ் அறிவிப்புகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சமூக வலைதளம் மூலமாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து சபை நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×