search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR birthday"

    • பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
    • பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்து வந்தார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

    வருகிற 19 மற்றும் 21-ந் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (19-ந்தேதி) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புறையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஏ.இ.கோவில் சந்திப்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடந்தது.

    அதில் 10,107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் 'கேலோ' இந்திய விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார்.

    இதனால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி கூட்டம் வருகிற 31-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

    ஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதால் முழு அளவிலான போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்களான நகர செயலாளர் அப்துல்சமது தலைமையில் தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் கொடியேற்றினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளரான முருக்கோடை ராமர், நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் நீங்கள் எப்படி கொடியேற்றலாம்? நீங்கள் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டக்கூடாது, கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உங்களுக்கு தெரியாதா? என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர். இதனால் ஓ.பி.எஸ். அணியினர் அவர்களுடன் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

    எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    • தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர்.
    • ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

    சென்னை :

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர்."

    தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர். ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற அவரது பாடல் போல இன்னும் மக்கள் மனதில் ஆழமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர். எளிய மக்கள் அனைவராலும் "புரட்சித் தலைவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டவர், அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணி செய்தவர்.

    தமிழக முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, தெய்வத்திரு டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவோம்! என கூறியுள்ளார்.

    • எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார்.
    • எம்.ஜி.ஆரின் பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் எம்.ஜி.ஆர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார். தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்த அவர் தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    • தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
    • எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடும் முழுதகுதி படைத்தவர்கள் நாம்தான் என்று சண்முகநாதன் பேசினார்.

    தூத்துக்குடி:

    எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மைதானத்தில் நடந்தது. மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

    மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, வெற்றி செல்வன், முன்னாள் கவுன்சிலர் செண்பக செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி கிழக்கு பகுதி செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சேவியர் வரவேற்றார்.

    தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை நிறுவிய எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடும் முழுதகுதி படைத்தவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுள்ள நாம்தான்.

    எம்.ஜி.ஆர். செய்த நல்ல திட்டங்களாலும், நல்ல ஆட்சியினாலும், அவரது ஆட்சியை தருவேன் என்றே இன்றைய கால அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், இணைச் செயலாளர் செரினா, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர், சார்பு அணி செயலாளர்கள் வக்கீல் சேகர், நடராஜன், டேக்ராஜா, தனராஜ், பிரபாகர், அருண்ஜெபக்குமார், பில்லா விக்னேஷ், சுதர்சன்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ,. எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ, வழங்கினர்.

    பல்லடம்:

    பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், கரைப்புதூர் ஊராட்சி, என்.எஸ்.கே. நகர் கிளையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு சேலை,வேட்டிகளும், 500 பேருக்கு அன்னதானமும் வழங்கபட்டது. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலாளர் மிருதுளா நடராஜன் தலைமை வகித்தார். நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ,. எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ, வழங்கினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே. பி. பரமசிவம், மாவட்ட அவைத் தலைவர் சிவாச்சலம், வக்கீல் கே.என்.சுப்பிரமணியம், இளைஞர்அணி மோகன்ராஜ், தண்ணீர்பந்தல் நடராஜன், கரைப்புதூர் விஸ்வநாதன், பாசறை சதிஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்-மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் அறிவுறுத்தலின்படி எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடந்தது. ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர்-வழக்கறிஞர் முத்துமுருகன் ஏற்பாட்டில் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் கவிஞர் ராமநாதன், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைசாமி, ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பாரதி நகரில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் நாரல் ஊராட்சி செயலாளர் நாரல் சுரேஷ், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்துப்பாண்டியன், சத்துணவு பாஸ்கர், கழுகூரணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூபதி, புத்தேந்தல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி, தெற்குதரவை கிளை செயலாளர் திருமுருகன், சண்முகநாதன், சக்கரைக்கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆர்.எஸ்.மடை யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் நகர் சார்பில் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 1000 பேருக்கு அன்னதானம்
    • பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினர்

    செய்யாறு:

    செய்யாறு நகர அண்ணா திமுக சார்பில் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா நேற்று ஆரணி கூட்ரோடு, கொடநகர் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், அரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் அருணகிரி, ரவிச்சந்திரன், மெய்யப்பன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ் நகர நிர்வாகிகள் தணிகாசலம், இளையராஜா, சுரேஷ், எழில், பிரகாஷ், வெங்கடேசன், கோபி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று செய்யாறு ஒன்றிய அண்ணா திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கி எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி, சேலை பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்.

    • 2 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் மற்றும் அன்னதானம் வழங்கி வருகிறார்.
    • நிர்வாகிகள் வெங்கிடு, ராகவன், சிவகுமார், சின்னத்தம்பி, உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் ஆண்டுதோறும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் மற்றும் அன்னதானம் வழங்கி வருகிறார். அதேபோல் இந்த ஆண்டும் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாலிபாளையம், கே.பி.என். காலனி, பெரியார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 குடும்பங்களுக்கு ஆயிரம் லிட்டர் பால், மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் முத்து அவிநாசி அப்பன், நிர்வாகிகள் வெங்கிடு, ராகவன், சிவகுமார், சின்னத்தம்பி, உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    • தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
    • தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை குறிப்பிடும் வகையில் 106 கிலோ பிரமாண்ட கேக்கும் வெட்டப்பட்டது. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கோகுலஇந்திரா, வளர்மதி, பொன்னையன் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், வக்கீல் சதாசிவம், பெரும்பாக்கம் ராஜசேகர், டாக்டர் சுனில், முகப்பேர் இளஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வி.எஸ்.பாபு, ஈஸ்வரன், சைதை கடும்பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தில் பணிபுரிந்து மரணம் அடைந்த சந்திரசேகரன், குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. கொடியை கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் மங்காராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதன் பின்னர் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கும் சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட 15-வது வார்டு அதிமுக மாவட்ட கவுன்சிலரும், ஒன்றிய கழக இணைச் செயலாளருமான எம்.அம்மினி மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில், பாசறை மாவட்ட தலைவர் ஜி.ராஜீவ் காந்தி, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.ராஜா, ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளர் கே.புஷ்பராஜ், கிளைச் செயலாளர் சி.கே.சீனிவாசன், தமிழ்மன்னன், சரவணன், முருகன், நாகப்பன், ஜெகதீஷ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை:

    அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106- வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு, கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, மற்றும் கிளை நிர்வாகிகள், தொ ண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அதே போல் நிர்வாகி கள், அவரவர்கள் பகுதிக்குட் பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை கழகங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட தலைவரின் உருவப்படத்திற்கு மலர் மாலையிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×