search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK respect"

    • கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை:

    அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106- வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு, கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, மற்றும் கிளை நிர்வாகிகள், தொ ண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அதே போல் நிர்வாகி கள், அவரவர்கள் பகுதிக்குட் பட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை கழகங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட தலைவரின் உருவப்படத்திற்கு மலர் மாலையிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமங்கலம் அருகே மருது சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பங்கேற்றார்.

    திருமங்கலம்

    மருது சகோதரர்களின் குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் உள்ள அவர்களது சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மருது சகோதரர்களுக்கு அரசு சார்பில் விழா நடத்தி, திருப்பத்தூரில் மணிமண்டபம் கட்டிக் கொடுத்தவர் ஜெயலலிதா. அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு துரோகத்தின் விளைவாக தங்க கவசத்தை சாத்த சிலர் தடை ஏற்படுத்தினார்கள். ஆனால் நீதிமன்றம் மாவட்ட வருவாய் அலு வலர் தங்க கவசத்தை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு சென்று தேவருக்கு சாத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இது தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படு கிறது. இந்த விஷயத்தில் குழப்பத்தை விளைவிக்க நினைத்தவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிவரக் கோட்டையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மருது பாண்டியர்கள் சிலை அமைக்க அரசாணை கொடுத்தார். அவருக்கு தேவரின் ஆசி நிச்சயம் உண்டு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன், நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், தமிழ்செல்வம், திருப்பதி, தமிழழகன், அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, சிங்கராஜ் பாண்டியன், விஜயன், லதா ஜெகன், கண்ணன், ஆதி என்ற ராஜா, உச்சம்பட்டி செல்வம், ஆண்டிசாமி, சுமதி சாமிநாதன், வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேசன், வாகைக்குளம் சிவபாண்டி, சிவசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×