search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coalition"

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம் என்றும், கூட்டணி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்றும் முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில், டெல்லியில் பா.ஜனதா கட்சியின் முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆட்சியின் மீது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். தேவேகவுடா, குமாரசாமி ஆகியோருக்கு, சித்தராமையாவை பிடிக்கவில்லை.

    தன்னை ஆட்சி செய்ய காங்கிரஸ் தலைவர்கள் விடுவதில்லை என்றும், அவர்கள் சொல்படி தான் நடப்பதாகவும் கூறி குமாரசாமி கண்ணீர் வடிக்கிறார். இதுபோன்ற, காரணங்களால் எம்.எல்.ஏ.க்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அதனால் இந்த கூட்டணி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது. எப்போது கவிழும் என்றும் சொல்ல முடியாது.

    அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் பா.ஜனதாவுக்கு வருவார்களா? என்பது தெரியவில்லை. பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம். எத்தனை எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள் என்பது தெரியவில்லை.

    நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க அனைவரும் டெல்லி வந்துள்ளோம். கட்சியின் தலைமை உத்தரவுப்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லியில் தங்கி இருக்கிறோம். கட்சி தலைமை கூறினால் நாங்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்ல தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
    ஹாசனில் நடந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேவேகவுடா, கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டு கவிழ விட மாட்டோம் என்று கூறியுள்ளார். #Devegowda
    ஹாசன் :

    ஹாசன் டவுன் சென்னப்பட்டணா பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு பரபரப்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி இன்னும் ஓரிரு நாட்களில் கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர்.

    ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை. நானும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டும் கவிழ விடமாட்டோம். எனக்கு யாரை கண்டும் பயம் இல்லை. விவசாயிகளின் கடன், கூடிய விரைவில் படிபடியாக தள்ளுபடி செய்யப்படும்.

    பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசுகிறார். அவைதான் முக்கியம் என்று கூறுகிறார். அவர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். நான் 56 வருடமாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் என்னை வளர்த்து விட்டது ஹாசன் மக்கள் தான்.



    ஜனதாதளம் (எஸ்) கட்சி, ஒரு குடும்ப கட்சி என்று கூறுகின்றனர். இந்த கட்சி ஒன்றும் எனது சொத்து இல்லை, இது அனைவருக்கும் பொதுவான கட்சி. குமாரசாமி முதல்-மந்திரி ஆன பின்பு தான் கர்நாடகத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. கூட்டணி ஆட்சி என்றால் சிறிய, சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைதொடர்ந்து பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பேசினார். அப்போது அவர், ‘‘மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு தான் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் காட்டு யானைகளின் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படும். அதிகமாக அரசு பள்ளிகள் திறக்கப்படும். ஹாசனில் இருந்து பேலூருக்கு விரைவில் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.600 கோடி செலவிடப்பட உள்ளது. அதை மத்திய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் என பங்கிட்டுக் கொள்ளும்’’ என்று கூறினார்.
    தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். #devegowda #Congress

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். -காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அவ்வப்போது கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகளால் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

    தற்போது தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக ஜே.டி.எஸ். கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து காங்கிரசுக்கு ஜே.டி.எஸ். கட்சி தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    3 மாநில தேர்தல் வெற்றிக்குப்பின் காங்கிரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் கூட்டணி கட்சியாக எங்களை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. இந்தப் போக்கு நீடித்தால் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும்.

    எங்கள் தோழமை கட்சி மீது எந்த குற்றச்சாட்டும் கூற விரும்பவில்லை என்றாலும், காங்கிரஸ் எங்களை நடத்தும் விதம் அதிருப்தியளிக்கச் செய்வதாக உள்ளது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.  #devegowda #Congress 

    வருகிற தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டுமென்று அவசிய மில்லை. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வுக்கு அவசியமில்லை என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார். #rajanchellappa

    மதுரை:

    மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சம் செலவில் செல்லூர் பகுதியில் 3 பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைக்கு செல்லூர் பகுதியில் 3 பேவர் பிளாக் சாலை ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து தர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கமாகும். இந்த இயக்கத்தில் தொண்டராக இருப்பது பெருமை.

    அ.தி.மு.க.வின் எம்.ஜி. ஆர்., இரட்டை இலையை மறந்து வேறு கட்சிக்கு எந்த தொண்டனும் செல்ல மாட்டார்கள். ஆனால் எங்களிடம் பிரிந்து சென்ற சிலர் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வந்துள்ளது. அதற்கு காரணம் அவர்கள் ஏற்றுள்ள தலைமையின் சுய நலமும் தான்.

    மதுரையை பொறுத்த வரை அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் பணி செய்து வருகிறார்கள்.

    கஜா புயல் பாதிப்புக்கான நிவாரண தொகை மத்திய அரசு உடனே அறிவிக்க வலியுறுத்தி நாடாளு மன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

    தமிழ்நாடு என்றாலே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது. மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இதே நிலைதான்.

    எனவே தான் நாங்கள் அம்மா பிரதமராக வர வேண்டும் என பாடுபட்டோம். அந்த முயற்சி நடக்காமலே போய்விட்டது. விரைவில் எம்.பி.க்கள் தேர்தல் வர உள்ளது.

    வருகிற தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணி அமைத்து தான் போட்டியிட வேண்டுமென்று அவசிய மில்லை. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வுக்கு அவசியமில்லை.

    1 1/2 கோடி தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம் அ.தி.மு.க. மக்கள் செல்வாக்கு உள்ளது. எனவே தனித்து நின்று எந்த தேர்தலையும் சந்திப்போம்.

    தெலுங்கானாவில் கூட சந்திரசேகரராவ் தனித்து நின்று வெற்றி பெற்று உள்ளார். அ.தி.மு.க.வும் தனித்து நின்று போட்டியிடும். தேவைப்படும் பட்சத்தில் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து அ.தி.மு.க. மேலிடம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பேவர் பிளாக்சாலை திறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ஜெயவேல், ஒச்சாத்தேவர், ஆறுமுகம், சோலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். #rajanchellappa

    தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது. அதற்கான வாய்ப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #dmk #pmk

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு எதிராக தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

    இந்த அணியில் பா.ம. க.வை சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகின்றன. ஆனால் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருப்பதால் இரு கட்சிகளும் ஒரே அணியில் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. நெருடலும் இல்லை. கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க தி.மு.க.வினர் முயற்சித்து வருவதாக கூறுவது தவறு. சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக சேர்த்து கொள்வார்கள். அதற்காக சுற்றி வளைத் தெல்லாம் பேச மாட்டார்கள்.

    என்னை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது. அதற்கான வாய்ப்பு இல்லை.

    விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக பேசினால் தான் சாதி ஓட்டுக்களை வாங்க முடியும் என்று பா.ம.க. கருதுகிறது. அதனால்தான் விடுதலை சிறுத்தைகளை பழித்து பேசுவதை குறிக்கோளாக வைத்துள்ளார்கள்.

    திட்டமிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பா.ம.க. இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #dmk #pmk

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார். #UddhavThackeray #BJP #ShivSena
    மும்பை:

    சிவசேனா கட்சி சார்பில் தசரா பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தசரா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் அங்கு நடந்தது. கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து திரளாக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    தொண்டர்கள் மத்தியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் வீழ்ச்சி, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, இந்துத்துவா கொள்கை, அயோத்தி ராமர் கோவில் விவகாரம், பணம் மதிப்பிழப்பு விவகாரம், பெண்கள் பாதுகாப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய மற்றும் மராட்டியத்தில் ஆளும் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று மோடி கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை மறந்து விட்டார். மோடி பிரதமரான பிறகு அயோத்திக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நான் நவம்பர் (அடுத்த மாதம்) 25-ந் தேதி அயோத்தி செல்கிறேன். அப்போது ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் தாமதம் ஏன்? என்று பிரதமரை கேள்வி கேட்பேன். நாங்கள் பிரதமருக்கு எதிரிகள் அல்ல. ஆனால் மக்களின் உணர்வில் விளையாட நாங்கள் விரும்பவில்லை.



    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பெற்ற வெற்றியை மோடி அலை என்று கூறி பெரிது படுத்தினார்கள். ஆனால், அதுபோன்ற அலை தற்போது நாட்டில் எங்கும் இல்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி வைக்காது. தேர்தலை சந்திக்க சிவசேனா தொண்டர்கள் தயாராக வேண்டும். டெல்லியில் நாங்கள் காவி கொடியை ஏற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டதுடன், தற்போது மத்திய, மராட்டிய அரசுகளில் அக்கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில் உத்தவ் தாக்கரேயின் பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #UddhavThackeray #BJP #ShivSena
    மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே உள்ள மர்ம கூட்டணி அம்பலமாகியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல், தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தன் சம்பந்தியின் ‘பார்ட்னர்’ வருமான வரித்துறை சோதனையில் சிக்கிக்கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, தன்னை எப்படியாவது ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றிவிடுங்கள் என்று சுயநலத்தின் உச்சமாக விண்ணப்பம் வைத்திருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கும் முற்றிலும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்க முதுகெலும்பின்றி, வருமான வரித்துறை சோதனையில் மிரண்டு, நடுங்கி பா.ஜ.க.விடம் மண்டியிட்டு, ஆதரவு தெரிவித்துள்ள முதல்-அமைச்சரும், தமிழ்நாட்டின் சுயமரியாதையை டெல்லி துரைத்தனத்திடம் மொத்தமாக அடகு வைத்திருக்கும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும் தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்கள்.

    தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பினாமி கம்பெனியாகச் செயல்படுகிறது என்பது தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. “எங்களுக்குள் அரசு ரீதியான உறவு மட்டுமே இருக்கிறது” என்று இதுவரை வாய்கிழியப் பேசி வந்த அ.தி.மு.க பா.ஜ.க.வினரின் முகமூடி இப்போது கிழிந்து தொங்குகிறது. கண்ணை மூடிக்கொண்டு மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்ததன் மூலம் “பா.ஜ.க. - அ.தி.மு.க.” இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகிவிட்டது.

    திடீரென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு 4 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சருடைய சம்பந்தியின் பார்ட்னரின் நிறுவனங்களில் வருமான வரித்துறையை ஏவி சோதனை செய்த உள்நோக்கம் பா.ஜ.க.விற்கு நிறைவேறிவிட்டது. ஆகவே, அ.தி.மு.க. எம்.பி.க்களை வளைத்துப்போடுவதற்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எடுத்த “பிரத்யேக முயற்சி” தான் இந்த வருமான வரித்துறை சோதனையே தவிர ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை அல்ல என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    இதுவரை தமிழ்நாட்டு நலன்களை வஞ்சிப்பதில் அ.தி.மு.க. - பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்துச் செய்த துரோகம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்திருப்பதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக நம்பகத்தன்மை வாய்ந்த வருமான வரித்துறையை துஷ்பிரயோகம் செய்து அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு, மத்திய பா.ஜ.க. அரசை ஆதரித்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசையும் மறைந்திருந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதால், தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்; ஊழல் அ.தி.மு.க.வுடனோ வேறு எந்த வழியிலோ தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வை ஒரு போதும் தி.மு.க. அனுமதிக்காது; எப்போது தேர்தல் வந்தாலும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
    ஏமன் நாட்டில் சவூதி அரேபியாவின் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Yeman #Hezbollah
    சனா:

    ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு எதிராக சவூதி தலைமையிலான கூட்டுப்படை சண்டையிட்டு வருகிறது.

    இந்நிலையில், ஏமனின் வடக்கு பகுதியில் சவூதி எல்லைப்பகுதியில் சவூதி அரசின் கூட்டுப்படைகள் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 41 கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்பட்டதாகவும், அதில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகவும் சவூதி கூட்டுப்படை தளபதி துர்கி அல்-மாலிகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Yeman #saudicoalition #Hezbollah
    தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் குற்றம் சாட்டியுள்ளார். #congress #jds #prakashjavadekar

    பெங்களூரு:

    பெங்களூரு மல்லேஸ் வராவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்தில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதீய ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து விட்டதாக ராகுல்காந்தி கூறுகிறார். உண்மையில் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா தான் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து உள்ளது. இதனை ராகுல் மாற்றி கூறியுள்ளார். 40 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாரதீய ஜனதாவுக்கு தற்போது 104 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துள்ளனர். ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்துள்ளனர்.

    தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளனர்.

    தேர்தலுக்கு முன்பு மதசார்பற்ற ஜனதா தளத்தை பாரதீய ஜனதாவின் பீ டீம் என்று காங்கிரஸ் கூறியது. தேர்தலுக்கு பிறகு காங்கிரசின் பீ டீமாக மதசார்பற்ற ஜனதா தளம் செயல்படுகிறது என்ற உண்மையை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.


    இந்த புதிய கூட்டணியால் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை செய்யப்படாமல் கோப்புகள் மூடப்படும். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று குமாரசாமி கூறியிருந்தார். இப்போது அவர் அதை செய்வாரா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #congress #jds #prakashjavadekar

    ×