search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தராமையா"

    • 2019 தேர்தல் பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது.
    • தற்போது காங்கிரஸ் கர்நாடகா மாநில ஆளுங்கட்சியாக உள்ளது.

    இந்தியாவின் தென் மாநிலங்களில் கடந்த 2019 தேர்தலில் பா.ஜனதா மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை இழந்தது.

    சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று மக்களவை தேர்தலில் வெற்றி பெற அம்மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த முறை பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இரண்டு கட்சிகளும் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.

    இந்த முறை மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என சித்தராமையான தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "கர்நாடகா மாநிலத்தில் வாக்களார்களிடம் நல்ல வரவேற்று உள்ளது. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளை பற்றி எனக்குத் தெரியாது. கர்நாடகா மாநிலத்தை பொருத்தவரை நாங்கள் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.

    தற்போது வழங்கப்பட்டு வரும் உத்தரவாத திட்டங்கள், அடுத்த முறை ஆட்சி அமைத்தால் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்படாது. உத்தரவாத திட்டங்கள் தொடரும். அதற்காக பட்ஜெட்டில் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது." என்றார்.

    கர்நாடகா மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 26-ந்தேதியும், 2-வது கட்ட வாக்குப்பதிவு மே 7-ந்தேதியும் நடக்கிறது.

    • எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது.
    • 'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது.

    இது தொடர்பாக, நாடு முழுவதிலும் இருந்து எனக்கு தகவல்கள் வருகின்றன.

    எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது. அதனால்தான் '400க்கு மேல்' என உளவியல் ரீதியாக போலி தோற்றத்தை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர்.

    'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
    • அரசியல்வாதிகளுக்கு கருத்தியல் தெளிவு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

    மைசூரு மாவட்டத்திலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் எம். லட்சுமணனுக்கு வாக்கு கேட்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த எஸ்சி-எஸ்டி செயல்வீரர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டத்தில், கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது சித்தராமையா கூறியதாவது:-

    நாம் கருத்தியல் தெளிவு பெறும்போது அரசியல் அதிகாரம் நம்மை வந்தடையும். மக்கள் பாஜக- ஆர்எஸ்எஸ்-ல் விழுந்து விடக்கூடாது. சூத்திரர்கள்-தலித்கள் மற்றும் பெண்கள் ஆர்எஸ்எஸ் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

    மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார். தற்போது அவர் நாங்கள் மோடியுடன் பிரிக்கமுடியாத பந்தம் எனக் கூறுகிறார். மேலும், அரசியல்வாதிகளுக்கு கருத்தியல் தெளிவு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். பா.ஜனதா மற்றும் ஆர்எஸ்ஸ் சமூக நீதிக்கு எதிரானது. ஆகவே, அவர்கள் எப்போதும் இடஒதுக்கீட்டை விரும்பியதில்லை.

    இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல. அது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமை. சமூகத்தில் ஜாதி முறை இருக்கும்வரை இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். சுதந்திரம் மற்றும் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு, சூத்திரர்களாகிய நமக்கு படிக்கும் உரிமை இருந்ததா? பெண்களுக்கு உரிமைகள் உண்டா?.

    ஒரு பெண் தன் கணவன் இறந்த உடனேயே தன்னை உயிரோடு எரித்துக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. மனுஸ்மிர்தியால் ஈர்க்கப்பட்ட இத்தகைய மனிதாபிமானமற்ற நடைமுறைகள் நமது அரசியல் சாசனத்தால் தடை செய்யப்பட்டன. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து மனுஸ்மிர்தியை மீண்டும் கொண்டு வர விரும்புகிறார்கள். இதை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    • கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசுக்கு தெரிவித்தோம்.
    • வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பிரதமர் ஏன் இங்கு வரவில்லை?

    பெங்களூரு:

    கர்நாடாக மாநிலத்தின் பெங்களூரு நகரில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, தேர்தல் கட்டுப்பாடுகளால் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தல் என்றதும் பிரதமர் மோடி ஓடோடி வருகிறார். வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

    கர்நாடகத்தில் 226 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் அறிவித்தோம்.

    மாநில அரசு சார்பில் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் கோரி கடிதம் எழுதினோ.

    இதுவரை கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக பிரதமர் மோடி ஒரு பைசா கூட வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

    • தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்தில் வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்
    • இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான அனைத்து செலவையும் காங்கிரஸ் அரசு ஏற்கும்

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று (மார்ச் 1) குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். கர்நாடகா காவல்துறையினர் உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தடயவியல் நிபுணர்கள், வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.

    குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்த பின் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், "தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்தில் வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். துணை முதல்வர், உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர்.


    மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவர? கும்பலா? என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாஜக ஆட்சியின் போதும் இதுபோன்ற குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது, ஆகவே பாஜக இதை அரசியலாக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான அனைத்து செலவையும் காங்கிரஸ் அரசு ஏற்கும் என்றும் அவர் அறிவித்தார்.

    • குண்டு வைத்த நபர் பேருந்தில் வந்துள்ளார்.
    • டைமர் செட் செய்து வெடிகுண்டடை வெடிக்கச் செய்துள்ளார்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். கர்நாடகா போலீசார் உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தடவியல் நிபுணர்கள், வெடி குண்டுகளை செயலழிக்க வைக்கும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.

    பா.ஜனதா தலைவர்கள் சித்தராமையான தலைமையிலான அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர், சித்தராமையாக இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்த சம்பவத்தை கர்நாடாக அரசு நடத்திருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இந்த நியைியில் சித்தராமையாக இது தொடர்பாக தெரிவிக்கும்போது "தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்து வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். துணை முதல்வர், உள்துறை மந்திரி சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். நான் மருத்துவமனைக்கும், சம்பவ நடைபெற்ற இடத்திற்கும் செல்ல இருக்கிறேன்.

    மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவர? கும்பலா? என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பா.ஜனதா இதை அரசியலாக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே குண்டு வைத்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவரின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஒரு பையுடன் 30 முதல் 39 வயதிற்கு உட்பட்ட ஒருவர் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

    • ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வெடித்து 9 பேர் காயம்.
    • உபா மற்றும் குண்டு வெடிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை.

    பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. முதலில் சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்டது. பின்னர் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது உறுதி செய்யப்பட்டது.

    குண்டு வெடிப்பு தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் பா.ஜனதாவினர் கர்நாடகா அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில், இந்த சம்பவத்தை தடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கார்நாடகா மாநில பாரதிய ஜனதா தலைவர் வி.ஓய. விஜேந்த்ரா கூறுகையில் "இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்க வேண்டம். முதலமைச்சர் சித்தராமையா இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." என்றார்.

    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு.
    • 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக தகவல்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

    இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம், கை கழுவும் இடத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பையில் வெடித்ததாக உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக எம்.பி தேஜஸ்வி சூர்யா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்,"முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. ஆனால், இது சிலிண்டர் இல்லை. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல்.
    • குரல் எழுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தல்.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜனதா- மதசார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜனதாவினர் குற்றஞ்சாட்டினர்.

    மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை கர்நாடகா சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா உள்ளிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    உடனடியாக முதல்வர் சித்தராமையா எழுந்து "நான் உங்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அரசு நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளது. ரிப்போர்ட் வந்த பிறகு நாங்கள் யாரையும் விடமாட்டோம். தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ஆடியோ அனுப்பப்பட்டுள்ளது. அதன் ரிப்போர்ட் கிடைத்தபின், நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

    • பாஜகவிற்கு தான் பாகிஸ்தான் எதிரி நாடு எங்களுக்கு அண்டை நாடுதான்
    • ஜின்னாவின் சமாதிக்குச் சென்று அவரைப் போல் மதச்சார்பற்ற தலைவர் வேறு யாரும் இல்லை என்று கூறிய எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னம் விருதை பாஜக கொடுத்துள்ளதே

    பாஜகவிற்கு தான் பாகிஸ்தான் எதிரி நாடு எங்களுக்கு அண்டை நாடுதான் என கர்நாடக காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் கூறியுள்ளார்.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜனதா- மதச்சார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜனதாவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

    இது தொடர்பான விவாதத்தில் பேசிய பி.கே.ஹரிபிரசாத், "பாஜகவை பொறுத்தவரை பாகிஸ்தான் எதிர் நாடாக இருக்கலாம், ஆனால் எங்களை பொறுத்தவரை பாகிஸ்தான் அண்டை நாடுதான். லாகூரில் உள்ள ஜின்னாவின் சமாதிக்குச் சென்று அவரைப் போல் மதச்சார்பற்ற தலைவர் வேறு யாரும் இல்லை என்று கூறிய எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னம் விருதை பாஜக கொடுத்துள்ளதே. அப்போது பாகிஸ்தான் எதிரி நாடாக இல்லையா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிராக நான்கு முறை போர் நடத்திய பாகிஸ்தானை "எதிரி தேசம்" என்று காங்கிரஸ் கட்சி கூறவில்லை. ஆகையால் "தேச விரோதமாக காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டுள்ளது என்று பாஜக விமர்சித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில் "நாங்கள் குரலை ஆடியோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வரும்போது, சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டது உண்மையாக இருந்தால், அந்த நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களை காப்பாற்றும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.

    • மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சயீத் நசீர் ஹுசைன் வெற்றி.
    • அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டதாக பா.ஜனதா குற்றச்சாட்டு.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜனதா- மதசார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜனதாவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

    சயீத் நசீர் ஹுசைன்

    இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற வளாகத்திற்குள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதாவினர் வலியுறுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சித்தராமையாக கூறுகையில் "நாங்கள் குரலை ஆடியோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வரும்போது, சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டது உண்மையாக இருந்தால், அந்த நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களை காப்பாற்றும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.

    • இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • பா.ஜ.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த 12-ந் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விவாதம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதமும், 1 கோடிக்கு மேல் வருவாய் வரும் கோவில்களில் 10 சதவீதத்தையும் வரியாக வழங்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்று இருந்தது.

    இதற்கு பா.ஜ.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் வருவாயை அரசு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மேல்சபையில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, இந்து வழிபாட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 7 பேரும், எதிராக 18 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா தோல்வி அடைந்தது.

    மேல்சபையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால் முதல்-மந்திரி சித்தராமையா அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

    ×