நான் பலவீனமான முதல்வர் அல்ல: என்னுடைய அரசு உணர்வுப்பூர்வமானது- சித்தராமையா

என்னுடைய அரசு, அதற்கான திசையை இழக்கவும் இல்லை. மோசமானதும் இல்லை.நான் பயனற்ற முதலமைச்சர் இல்லை. நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.
நான் பலவீனமான முதல்வர் அல்ல: என்னுடைய அரசு உணர்வுப்பூர்வமானது- சித்தராமையா
Published on

கர்நாடக மாநில சட்டசபையில் சித்தராமையா ஆட்சி குறித்து எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியது. இதற்கு சித்தராமையா பதில் அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

அரது தனது இலக்கை இழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். என்னுடைய அரசு, அதற்கான திசையை இழக்கவும் இல்லை. மோசமானதும் இல்லை. நான் பயனற்ற முதலமைச்சர் இல்லை. நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

எங்களுடைய அரசு உணர்வுப்பூர்வமானது. முன்னதாக இருந்த பாஜக அரசு உணர்வுப்பூர்வமற்றது. அன்னபாக்கிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசியை எடியூரப்பா குறைத்தார். விவசாயிகள் உரங்களை கேட்டபோது, துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்குக்கூட சென்றனர்.

பாஜக அரசு நலத்திட்டம் தொடர்பாக திட்டங்களை நிறுத்தியது. பாஜக அரசால் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. நாங்கள் மனிதாபிமான, உணர்வுப்பூர்வமான அணுகுமுறையை கடைபிடிக்கிறோம்.

கொரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் சமராஜாநகரில் 36 பேர் உயிரிழந்தனர். பாஜக அரசு 3 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்தது. இதுதான் உங்கள் உணர்ச்சிவசப்படும் தன்மையா?.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com