search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜனதா"

    • நிலுவையில் உள்ள வழக்கு குறித்து பேட்டி அளித்தவர்.
    • மற்றொரு நீதிபதி மீது, அரசியல் கட்சிக்காக பணிபுரிவதாக குற்றம் சாட்டியவர்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவருக்கு இன்னும் பதவிக்காலம் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தெரிவித்து விட்டதாகவும், மரியாதை நிமித்ததமாக தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானத்தை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    "நான் தலைமை நீதிபதியை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். மரியாதை நிமித்தமாக அவர் சந்திக்க இருக்கிறேன். நான் ஏற்கனவே ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுப்பி விட்டேன்.

    எனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால் அந்த இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதில் இருந்து பின்வாங்கிவிட்டேன். இரண்டு மணிக்கு எனது வீட்டில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த இருக்கிறேன். 2 மணிக்கு அங்கே வாருங்கள் (பத்திரிகையாளர்களை பார்த்து)" என்றார்.

    கங்கோபாத்யாய் மேற்கு வங்காளம் மாநிலத்தின் தம்லுக் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடலாம் என யூக செய்திகள் வெளியாகியுள்ளது. 2009-ல் இருந்து தம்லுக் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது.

    பா.ஜனதாவுக்கு செல்வதற்கு முன்னதாக மம்தா பானர்ஜியின் வலது கை என அறியப்பட்ட சுவேந்து அதிகாரி தம்லுக் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அபிஜித் கங்கோபாத்யாய், மற்றொரு நீதிபதியை அரசியல் கட்சிக்காக வேலை பார்ப்பதாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அந்த வழக்கு தொடர்பாக பேட்டி அளித்திருந்தார். அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

    பல்வேறு வழக்குகளில் மாநில அரசுக்கும் இவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் 9 முறை ம.பி. சென்றுள்ளார்
    • அமித் ஷா கடந்த ஏழு மாதங்களில் ஐந்து முறை மத்திய பிரதேசம் சென்றுள்ளார்

    ஐந்து மாநில தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை பா.ஜனதாவுக்கும், காங்கிரஸுக்கும் இடையில்தான் நேரடி போட்டி. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இரண்டு கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. என்றாலும், ஆளும் பா.ஜனதா கட்சியே தேர்தல் பணியில் முன்னணி வகிக்கிறது.

    பிரதமர் மோடி 9 முறை மத்திய பிரதேசம் சென்றுள்ளார். பொதுக்கூட்டம், கட்சி நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார். பா.ஜனதா கட்சி ஆகஸ்ட் 17-ந்தேதியே முதற்கட்டமாக 39 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தற்போது வரை 136 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களில் ஐந்து முறை மத்திய அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசம் சென்றுள்ளார்.

    அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மூன்று முறை தேர்தல் பிரசாரம் தொடர்பாக மத்திய பிரதேசம் சென்றுள்ளார். ஜபால்புரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி இதுவரை ஒரேயொரு தேர்தல் பேரணியில் மட்டும் கலந்து கொண்டுள்ளார்.

    பா.ஜனதாவினர் மக்களிடையே நேரடியாக மிகப்பெரிய அளவில் சென்றடைந்துள்ளனர். அக்கட்சி ஜன் ஆஷிர்வாத் யாத்திரை மூலம் 223 தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளது. இந்த யாத்திரை செப்டம்பர் 3-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 25-ந்தேதி வரை நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சி ஜன் ஆக்ரோஷ் யாத்திரை மூலம் 230 தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறது. இந்த யாத்திரை செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி, கடந்த 5-ந்தேதி முடிவடைந்தது.

    • பிரதமருக்கு பா.ஜனதா அலுவலகத்தில் பிரமாண்ட வரவேற்பு
    • காலில் விழுந்தபோது, அவ்வாறு விழக்கூடாது என கண்டிப்பு

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஏகபோக ஆதரவுடன் நிறைவேறியது.

    இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதற்கு, பிரதமர் மோடியை அனைவரும் பாராட்டு வருகின்றனர். நேற்று பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி போட்டோ எடுத்துக் கொண்டார்.

    இன்று காலை டெல்லி பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தாார். அப்போது, பா.ஜனதா மகளிர் அணி சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வாழ்த்தி குரல் எழுப்பினர்.

    அப்போது தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி சட்டென பின் நகர்ந்தார். அத்துடன் நோ... நோ... காலில் விழக்கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார்.

    வானதி சீனிவாசன் பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

    • ராகுல் காந்தியின் பாத யாத்திரையை போதுமான அளவில் காட்டவில்லை என காங். விமர்சனம்
    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை

    இந்தியா கூட்டணி 14 தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னேற்றம் காண வேண்டும் என்றால், ராகுல் காந்தியைத்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சம்பித் பத்ரா கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சி, அதன் சொந்த நலனுக்காக உண்மையிலேயே யாரையாவது புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தால், அவருடைய பெயர் ராகுல் காந்தி. உங்களுடைய தலைவருக்கு வலிமை இல்லை. நீங்கள் யாரையெல்லாம் புறக்கணிப்பீர்கள்?. புறக்கணித்து, முன்னேற வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய தலைவரை புறக்கணியுங்கள்.

    இந்தியாவில் எதிர்க்கட்சிகளால் தாக்கப்படாத அமைப்புகளே இல்லை. நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என அனைத்து அமைப்புகள் மேலும் தாக்குதல். காங்கிரஸ் கட்சி அன்பை பற்றி பேசுகிறார்கள். ஆனால் வெறுப்பை வீசுகிறார்கள். ஹிட் லிஸ்ட் பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டு, தாக்கப்படுவார்கள். அவர்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்.

    இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

    • ஜம்மு-காஷ்மீரில் இரண்டு நாட்களாக துப்பாக்கிச் சண்டை
    • ரஜோரி, அனந்த்நாக் சண்டையில் வீரர்கள், போலீசார் வீரமரணம்

    ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனந்த்நாக் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு உயர் அதிகாரிகள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் கூறுகையில் ''நம்முடைய வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துடன் ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை மன்னிக்கமாட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    நேற்று வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு பா.ஜனதாவின் தலைமை கழகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா தலைவர்கள் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதா கட்சியில் இணைய பேஸ்புக் மூலம் தன்னை தொடர்பு கொள்ளலாம்
    • உங்களை கட்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்து ஆராய்வோம்

    பா.ஜனதா தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா கூறிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சம்மனை எதிர்நோக்கி இருக்கும் ஊழல் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், என்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனப் பேசியதாக தெரிகிறது.

    தற்போது, மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தான் அப்படி கூறவில்லை என்று தெரிவித்த போதிலும், திரிணாமுல் காங்கிரஸ் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

    பா.ஜனதா கட்சி சலவை இயந்திரமாக மாறி வருவதாகவும், அரசியல் லாபத்திற்காக சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி வருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    அனுபம் ஹஸ்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பெரிய தங்க பிரேஸ்லெட், செயின்கள், ஏஜென்சிகளின் கண்ணில் இருந்து தப்பித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், ஒருவேளை அமைப்புகளின் சம்மன்களை பெறலாம். ஊழல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை இந்த மேடையில் இருந்து அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    நீங்கள் என்னுடைய பேஸ்புக் பக்கத்திற்கு சென்று என்னை தொடர்பு கொள்ளலாம். பா.ஜனதாவில் இணைவது குறித்து என்னிடம் பேசுவதற்கு கூச்சமாக இருக்கிறது என்று நினைத்தால், என்னைத் தொடர்பு கொண்டு, உங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். கட்சிக்கு உங்களை எப்படி பயன்படுத்துவம் என்பது குறித்து ஆராயப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    குடும்ப அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியால், நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது என பா.ஜனதா தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #BJP #Amitshah
    கவுகாத்தி

    பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ‘‘ஜவர்ஹலால் நேரு, இந்தியா, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல், காந்தி, வருங்காலத்தில் உள்ள பெயரை நான் குறிப்பிடவில்லை.

    காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியாது. இதுபோன்ற கட்சிகளால் நாட்டின் ஜனநாயத்தை வளர்த்து, அதற்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. உள் ஜனநாயகம் இல்லாதபோது, எப்படி நாட்டின் ஜனநாயத்தை வலிமைப் படுத்த முடியும். ஒரேயோரு குடும்பம் பட்டும் 55 வருடம் நாட்டை ஆண்டுள்ளது. ஆனால், நாடு அடைந்தது என்ன?’’ என்றார்.
    ×