search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க"

    • 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது
    • மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது

    பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.

    தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வாம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜோக்குமார் அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன்,ராமநாதன் அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் துணைத்தலைவர்கள் முத்துக்குமார், பால்ராஜ் முத்துலட்சுமி, பால சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், இளைஞர் அணி தலைவர் முப்புடாதி, மகளிர் அணி தலைவி மகாலட்சுமி மற்றும் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் குருசாமி, இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு கனிம வள கொள்ளையை தடுக்க கோரி செங்கோட்டை தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை செங்கோட்டை நகர பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

    அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது.

    கடலூர்:

    திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரிய துறையை கண்டித்து பாஜக சார்பில் ஒப்பாரி வைக்கும் போராட்டம்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கோழியூர் 8- வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்வதும்,அப்பகுதியில் இறப்புகள் நேர்ந்தால் அவர்கள் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது.

    அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக பல கட்ட போராட்டங்கள் மனுக்கள் கொடுத்தும் திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரியத்துறை சார்ந்த அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 8-ம் தேதி கோழியூர் 8- வது வார்டில் உள்ள மின் கம்பத்தின் முன்பு அப்பகுதி மக்களோடு சேர்ந்து பாஜக நகரத் தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் அவ்விடத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    • மின் கட்டணத்தை உயா்த்துவதாக அறிவித்துள்ளதை கண்டித்து நடந்தது.
    • நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவா் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஊட்டி:

    தமிழக அரசு மின் கட்டணத்தை உயா்த்துவதாக அறிவித்துள்ளதை கண்டித்து நீலகிரி மாவட்ட பாஜக சாா்பில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகத்துக்கு நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவா் மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட பொதுச் செயலாளா் ஈஸ்வரன், குமாா், பரமேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமன், விவசாய அணி செயலாளா் சௌந்தரபாண்டியன் மற்றும் சபீதா போஜன், பிரவீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அப்போது, மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா்.

    • மாநாடு குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஒளிரும் விளம்பர பதாகைகளுடன் வீதிகளில் நடந்து செல்லும் ‘ரோபோடிக்’ பிரசாரம் தொடங்கியுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த பல்லடத்தில் வருகிற 17-ந்தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தாமரை மாநாடு நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இந்த நிலையில் மாநாடு குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 'எல்.இ.டி. வாக்கர்ஸ்' என்ற பெயரில்ஒளிரும் விளம்பர பதாகைகளுடன் வீதிகளில் நடந்து செல்லும் 'ரோபோடிக்' பிரசாரம் தொடங்கியுள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செந்தில்வேல், துணை தலைவர் குணசேகரன் ஆகியோர் இந்த நூதன பிரசாரத்தை தொடங்கிவைத்தனர்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் நரேன் பாபு, சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ் பாண்டி, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இதில் கலந்து கொண்ட வாலிபர்கள் ஒளிரும் விளம்பர பதாகைகளை முதுகில் அணிந்து கொண்டு பழைய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூதன பிரசாரத்தை மேற்கொண்டனர்.

    • ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    கோவை:

    ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி வருகிற 13-ந் தேதி பாரதீய ஜனதா சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள வேண்டும். கேரளத்திற்கு ஒப்பந்தப்படிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.5 டிஎம்சி தண்ணீர் கிடைப் பதில்லை. தண்ணீர் கிடைக்கா ததற்கு காரணம் ஆனை மலையாறு மற்றும் நல்லாறு திட்டம் நிறைவேற் றப்படாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் நீண்ட கால கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், தற்போதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

    இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 13-ந் தேதி பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா சார்பில்ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றகோரிக்கை வைத்து மாவட்டத்தலைவர் வசந்தராஜன்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன ்சத்திரத்திற்கு தண்ணீர்கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக கோரியும  கோரிக்கை வைக்கப்பட உள்ளது.  

    • தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மனு அளித்தனர்.
    • மழைநீர் மற்றும் கழிநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக மனுவில் கூறியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 51-வது வார்டு இந்திராநகர், திரு.வி.க.நகர், ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் மற்றும் கழிநீர் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    ஆகையால் பருவ மழைக் காலத்திற்கு முன்பாக உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் முறையான வடிகால் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், பொதுச்செயலாளர் உமரிசத்தியசீலன், மாவட்ட துணைத்தலைவர்கள் வாரியார், தங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தெற்கு மண்டல தலைவர் மாதவன், வடக்கு மண்டலம் வினோத், மேற்கு மண்டலம் சிவகணேஷ், 51-வது, வார்டு தலைவர் சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ரஞ்சனா, செல்வராணி, காளிராஜா, முருகன், தெற்கு மண்டல பொதுச்செயலாளர் மகேஷ் பாலகுமார் துணை தலைவர் பொய் சொல்லான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் தி.மு.க அரசை கண்டித்து இன்று பா.ஜ.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • திண்டுக்கல்-திருச்சி ரோடு கல்லறை மேடு பகுதியில் மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் தி.மு.க அரசை கண்டித்து இன்று பா.ஜ.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்-திருச்சி ரோடு கல்லறை மேடு பகுதியில் மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பெட்ரோல்ட-டீசல் விலையை குறைக்கவேண்டும்.

    கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கவேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொலை, கொள்ளை, கற்பழிப்பை தடுக்கவேண்டும். மாணவ-மாணவிகளின் கல்விக்கடனை ரத்து செய்யவேண்டும்.

    மணல் கொள்ளையை தடுக்கவேண்டும். குடும்ப தலைவியின் மாத உரிமைத்தொகை ரூ.1000 உடனடியாக வழங்கவேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கவேண்டும்,

    இளைஞர்களை சீரழிக்கும் போைத பொருட்களை தடை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள் சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. இளைஞர் அணியினர் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
    • கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர்அணி சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இதற்கிடையில் தடையை மீறி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் பேரணி செல்வதற்காக பா.ஜ.க. இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் கன்னியாகுமரி பழைய பஸ்நிலைய ரவுண்டானா சந்திப்பில் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் பா.ஜ.க. இளைஞர் அணியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக போலீசார் நடத்திய சமரசப் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல முயன்றதாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • திங்கள்நகர் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டது.ஒரே நாளில் 2 போராட்டங்களும் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தலைமையில் இரு தரப்பினரிடமும் தனித்தனி யாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை பா.ஜ.க. பிரமுகர் ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று திங்கள் நகரில் இன்று காலை முதல் மாலை வரை உண்ணா விரத போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    இது போன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டது.ஒரே நாளில் 2 போராட்டங்களும் அறிவிக்கப்பட்டதால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தலைமையில் இரு தரப்பினரிடமும் தனித்தனி யாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அதன்பிறகு இருதரப்பு போராட்டங்களும் கைவி டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருந்த போதும் திங்கள் நகர் சுற்று வட்டார பகுதிகளில் அதிரடிப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    பெரும்பாலான மாநிலங்களில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. அதற்கு எதிரானது பா.ஜ.க., என ஜே.பி.நட்டா பேசினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் இன்று பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய  ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார். அப்போது அவர் வீரவேல், வெற்றி வேல் கோஷத்துடன் தனது உரையை தொடங்கிய அவர், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    அண்ணாமலை எனர்ஜிடிக் தலைவர். உயர்ந்த கலாச்சாரம் கொண்டது தமிழ்நாடு. தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் என சுதந்திர போராட்டத்தில் பலர் தமிழகத்தில் இருந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிர் நீத்துள்ளனர்.அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும்  எனது வணக்கங்கள்.

    தி.மு.க.வின் நடவடிக்கை குறித்து பேசினீர்கள். தி.மு.க. என்றால் ஊழல் , குடும்ப உறுப்பினர்களை கொண்ட கட்சி. பெரும்பாலான மாநிலங்களில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. அதற்கு எதிரானது பா.ஜ.க., ஜனநாயக கட்சி பா.ஜ.க., தமிழ் கலாச்சாரம் உலக அரங்கில் உள்ளது.விபூதி, ஆசிர்வாதம் பெறக்கூடாது என தி.க., சொல்கிறது. ஆனால் வெற்றிவேல் அதனை முறியடித்தது.

    தமிழ் கலாச்சாரம், பண்டிகையை மாற்ற தி.மு.க. முயற்சித்து வருகிறது. 1.3 பில்லியன் மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற பிரதமர் போராடி வருகிறார். உலக அரசியலில் இந்தியா உயர்ந்து நிற்கிறது.

    ஏழை எளிய மக்கள் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட கூடாது என பிரதமர் பாடுபடுகிறார்.மோடியை எதிர்ப்பவர்கள் தேசத்தை எதிர்க்கிறார்கள்.ஏராளமான வசதிகள் விவசாய துறைக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விவசாய உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யுங்கள். 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

    மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு வழங்கி உள்ளது.பா.ஜ.க. தொண்டர்கள் கொரோனா காலத்தில் கடுமையாக போராடி உள்ளனர். எந்த ஒரு மனிதனையும் பசியோடு உறங்க விடவில்லை. மருந்தில்லாமல் உறங்க விடவில்லை.

    கடுமையாக பா.ஜ.க.வினர் பணியாற்றி உள்ளனர். ஆனால்  கொரோனா காலத்தில் தி.மு.க. தனிமை படுத்திக் கொண்டுள்ளது. கணினி முன்பு அமர்ந்து கொண்டுள்ளது.முன்பு கருணாநிதி வெள்ள  தண்ணீரில் நின்று போஸ் கொடுத்தார்.

    தற்போது ஸ்டாலின் வெள்ளத்தில் நின்று போஸ் கொடுத்துள்ளார். ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நீங்கள் பாக்கியசாலி. அதனால் தான் பா.ஜ.க.வில் உள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
    விழாவில் பங்கேற்ப தற்காக திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திருப்பூரில் குவிந்தனர்.
    திருப்பூர்:

    நாடு முழுவதும் பா.ஜனதா கட்சிக்கு சொந்த அலுவலக கட்டிடம் இல்லாத மாவட்டங்களில் சொந்த கட்டிடம் கட்டும் திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 17 மாவட்டங்களில் சொந்த கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    நாடு முழுவதும் அனைத்து மாவட்ட அலுவலகங்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் கட்டிட வரைபடத்தை டெல்லி தலைமை வடிவமைத்து கொடுத்துள்ளது. அதன்படி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தலைவர் அறை, வரவேற்பறை, கூட்ட அரங்கு, நிர்வாகிகள் அறை, முக்கிய பிரமுகர்கள் ஓய்வு அறை, விசாலமான பார்க்கிங் வசதி  உள்ளிட்ட வசதிகள் கொண்டதாகவும் கட்டப்படுகிறது.

    தமிழகத்தில் திருப்பூர்,  ஈரோடு, நெல்லை, திருப்பத்தூரில் கட்டிட பணிகள் முடிவடைந்ததையடுத்து அந்த அலுவலக கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதற்கான விழா திருப்பூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12-15 மணிக்கு கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் வந்தார். 12-45 மணியளவில் பல்லடம் வந்த அவருக்கு பா.ஜ.க. சார்பில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன்பிறகு மதியம் 2-30 மணிக்கு திருப்பூர் வீரபாண்டி பல்லடம் மெயின்ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்த பா.ஜ.க.மாநில செயற்குழு கூட்டத்தில் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார்.

    இதில் தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு ஜே.பி. நட்டா ஆலோசனைகள்  வழங்கினார்.

    இதையடுத்து மாலை 4 மணிக்கு திருப்பூர் பல்லடம் மெயின்ரோடு வித்தியாலயம், செல்வலட்சுமி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நெல்லை, திருப்பத்தூர், ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகங்களையும் திறந்து வைத்தார்.
      
    பின்னர் புதிய மாவட்ட அலுவலகம் பின்புறம்  உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார். 

    இந்நிகழ்ச்சிகளில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள்,  மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    ஜே.பி.நட்டா வருகையையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாநகர போலீஸ் துணைகமிஷனர்கள் அரவிந்த், ரவி ஆகியோர் தலைமையில் 6 உதவி கமிஷனர்கள், 8 இன்ஸ்பெக்டர்கள்  உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.பி. நட்டா வாகனத்தில் செல்லும் வழித்தடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விழா நடைபெறும்  மேடையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    விழாவில் பங்கேற்ப தற்காக இன்று பகல் 11மணியில் இருந்து திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திருப்பூரில் குவிந்தனர்.  ஜே.பி.நட்டாவை  வரவேற்று திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. 

    பல இடங்களில் வரவேற்பு வளைவுகள், பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் திருப்பூர் விழாக்கோலமாக காட்சியளித்தது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் வகையில் தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்ப பா.ஜ.க.நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று ஜே.பி. நட்டா வருகை நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×