search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanpur"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் ஹவுராவில் இருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். #PoorvaExpressderail
    லக்னோ:

    ஹவுராவில் இருந்து புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டது. இந்த  ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை இன்று அதிகாலை ஒரு மணிக்கு அடைந்தது.

    அப்போது ரெயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #PoorvaExpressderail
    உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார். #YogiAdityanath #DefenceExpo
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் ராணுவ கண்காட்சி 2018 கடந்த புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்த கண்காட்சி நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச மாநில தொழிற்துறை மந்திரி சதிஷ் மஹானா எடுத்துள்ளார்.



    இந்நிலையில், கான்பூரில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார்.

    அப்போது அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் பல்வேரு சாதனங்கள் இயங்கும் செயல் முறைகளை கேட்டறிந்தார். #YogiAdityanath #DefenceExpo
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். #LeatherFactory #Fire
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஜாஜ்மாவ் பகுதியில் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
    இன்று இரவு அந்த தோல் தொழிற்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து 6-க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. தோல் தொழிற்சாலையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #LeatherFactory #Fire
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் இறந்ததற்கு பொறுப்பேற்று, மாநில சுகாதார துறை மந்திரி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. #Kanpur #GovernmentHospital
    கான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது.

    இங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விசாரணையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் முதியவர்கள் உயிரிழந்தனர் என அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

    இந்நிலையில், கான்பூர் மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் இறந்ததற்கு பொறுப்பேற்று, மாநில சுகாதார துறை மந்திரி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ஏற்கனவே கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் பலியாகி உள்ளனர். தற்போது கான்பூர் மருத்துவமனையில் ஏசி பழுதால் நோயாளிகள் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மாநில சுகாதார துறை மந்திரி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.  #Kanpur #GovernmentHospital
    மனைவியை காதலனுக்கு தாரை வார்க்கும் சம்பவங்களை சினிமாவில் மட்டுமே பார்த்து இருக்கிறோம். அதுபோல் உண்மையிலேயே உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
    கான்பூர்:

    லக்னோவில் கோசைன் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் லக்னோவின் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் சாந்திக்கும் சனிக்வான் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்ற வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடந்தது. ஒரு மாதம் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சாந்தி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு கணவரை சந்திக்க வரவில்லை. இதையடுத்து சுஜித் சாந்தி வீட்டுக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    ஏன் என்று கேட்ட போது சாந்தி ரவியுடன் காதல் வலையில் வீழ்ந்ததை தெரிவித்தார். ஆனால் தனது கருத்தை கேட்காமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர். காதலனை மனதில் வைத்துக் கொண்டு உங்களுடன் வாழ பிடிக்கவில்லை என்று நிலைமையை எடுத்துக் கூறினார்.


    இதைக் கேட்ட சுஜித் மனம் இறங்கினார். மனைவியை காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது முடிவை தெரிவித்தார். போலீசார் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டனர்.

    நேற்று சனிக்வான் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு மனைவி சாந்தியையும், காதலன் ரவியையும் சுஜித் வரவழைத்தார். அவர்களது உறவினர்களும் வந்தனர். அவர்கள் முன்னிலையில் மனைவியை காதலனிடம் ஒப்படைத்தார். இருவரும் கோவிலிலேயே திருமணம் செய்து கொண்டனர். #Tamilnews
    ×