search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Butcher shop"

    • பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் .
    • ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரதம் முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். கடலூர் துறைமுகத்தில் எப்போதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் . இந்த நிலையில் இன்று ஆவணி மாதம் கடைசி நாள் என்பதாலும், நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

    பின்னர் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதில் பெரிய வகை பாறை மீன் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ.400 முதல் 450 வரையிலும், பெரிய வகை நெத்திலி கிலோ ரூ.200 கனவாய் வகை மீன் கிலோ ரூ.150-க்கும், பெரிய வகை இறால் கிலோ ரூ.500-க்கும், நண்டு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • மதுரையில் 5-ந் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் அரசாணையின்படி புத்தர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×