search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawyer"

    • முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜராகி உள்ளார்.
    • ஏஜி நூரானி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

    முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், வரலாற்றாளர், மற்றும் நூலாசிரியருமான ஏஜி நூரானி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 93 ஆகும்.

    சட்டத்துறை ஆய்வாளரான ஏஜி நூரானி- தி காஷ்மிர் குவெஸ்டியன், பத்ருதின் தியாப்ஜி, மினிஸ்டர்ஸ் மிஸ்கன்டக்ட், பிரெஸ்நீவ்ஸ் பிளான் ஃபார் ஏசியன் செக்யூரிட்டி, தி பிரெசிடென்ஷியல் சிஸ்டம், தி டிரையல் ஆஃப் பகத் சிங் மற்றும் கான்ஸ்டிடியூஷனல் குவெஸ்டியன்ஸ் இன் இந்தியா என ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

    மேலும், பல்வேறு தனியார் நாளேடுகளில் கட்டுரை எழுதி வந்துள்ளார். 1930 ஆம் ஆண்டு பாம்பாயில் பிறந்த ஏஜி நூரானி 1960 முதல் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்தார். தான் பிறந்த ஊரிலேயே உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ஏஜி நூரானி தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி சார்பில் ஆஜராகியுள்ளார்.

    ஏஜி நூரானி உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • கட்சிகாரங்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இருவரிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
    • மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.

    தலைநகர் டெல்லியின் சகார்பூர் [Shakarpur] பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  வழக்கறிஞர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்களது கட்சிக்காரர்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களுக்கிடையில் நீதிமன்ற வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது.

    இது கைகலப்பாக மாறவே அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.

    இதுகுறித்து துணை பாதுகாப்பு ஆணையர் பேசுகையில், இந்த விவகாரம் வழக்கறிஞர்களின் பார் அசோசியேசன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றத்துக்காக சட்டப்பிரிவு 126/169 பாரதீய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா சட்டம் [ முன்னதாக சிஆர்பிசி 107/150] கீழ் நடவடிக்கை எடுக்கப்டும் என்று உறுதியளித்துள்ளார்.

    • 1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான ஸ்டார்மர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார்
    • ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.

    பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள  650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று 14 வருடங்கள் களைத்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு மிகவும் பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிராமராக பதிவியேற்க உள்ளார்.

    61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் தனது இளமைப் பருவத்தில் ப்ளூட், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞராக இருந்துள்ளார். தனது இளம் வயதிலேயே சோசியலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட கெய்ர் தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின் இளம் சோசியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்கிறார்.

    லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கெயர் ஸ்டேமர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்றார். 1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான ஸ்டேமர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார். ஆப்பிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடினார்.

    1990 களில் மெக் லைப்ல் என்ற நிறுவனம் சுற்றுசூழல் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்தவர்களுக்காக வாதாடினார். பின்னர் 2008 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸ் அரசு வழக்கறிங்கர்களுக்கான இயக்குனர் பதவியில் அமர்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டிலே அவரின் முழுமையான அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. 2015 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு லண்டலில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு மிகவும் நெருக்கமானவராக கெய்ர் ஸ்டார்மர் இருந்தார்.

    கடந்த 2019 பாரளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிட்டு கெய்ர் வெற்றிபெற்றார். கெய்ரின் வெற்றியுடன் தொழிலாளர் கட்சியின் புதிய சகாப்தம் தொடங்கியது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெக்ஸிட் என்ற திட்டத்தின்மூலம் பிரிட்டன் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது. ஆனால் அதற்கு எதிரின நிலைப்பாட்டை கொண்டவர் கெய்ர். கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியிடன் கிநைட்ஹூட் மற்றும் சர் பட்டம் பெற்றார். கெய்ர் ஸ்டார்மர் எப்போதும் தான் ஒரு உழைப்பாளி வர்க்கப் பின்னணி கொண்ட நபர் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது. 

    • சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்துள்ளார்.
    • சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வழக்கறிஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது சிறுவனை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுவனை உயிருடன் காவல்துறையினர் மீட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கல்யாண்பூர் காவல் உதவி ஆணையர் அபிஷேக் பாண்டே, "பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் மருந்தகம் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் தனது வகுப்பு தோழியுடன் ஒரு கடையில் கூலட்ரிங்க்ஸ் குடித்துள்ளார். இதனை பார்த்த பெண்ணின் தந்தை அந்த சிறுவனை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி சென்று கொடுமைப்படுத்தியுள்ளார்.

    அந்த சிறுவனை கொலை செய்து விடுவேன் என்றும் பெண்ணின் தந்தை மிரட்டியுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

    சிறுமியின் தந்தையான வழக்கறிஞர் பிரஜ் நரேன் நிஷாத் மற்றும் அவரது சகோதரர் தேஜ் நரேன் மீது கடத்தல், கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    அதே சமயம் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகப் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது போஸ்கோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர்களின் கடும் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பிரீதம். சம்பவத்தன்று இவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிக்மகளூர் நகர போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வக்கீல் பிரீதமை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வக்கீல் மீது தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரையும் சஸ்பெண்டும் செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே வெளியே செல்லாமல் வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரெண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீசாரை கண்டித்து சிக்மகளூர் பார்கவுன்சில் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    • கடையில் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் கடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
    • காயமடைந்த ஹரிகரன் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் ஹரிகரன் (வயது 24). இவர் கோயமுத்தூரில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஹரிகரன், வெங்கிட்டாபுரத்தில் உள்ள முடி திருத்தும் கடைக்கு முடி வெட்ட சென்றுள்ளார்.

    அங்கு கடையில் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் கடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கிருந்த விக்னேஷ் என்பவரது மீது ஹரிகரன் கால் தவறுதலாக பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், ஹரிகரனை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    உடனே அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பினர். இதற்கிடையே ஹரிகரன், மேற்கு பல்லடம் பகுதிக்கு சென்றபோது அங்கு நண்பர்களுடன் இருந்த விக்னேஷ், ஹரிகரனிடம் மீண்டும் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார்.

    இதில் காயமடைந்த ஹரிகரன் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கு பல்லடத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்னேஷ் (28), முருகன் என்பவரது மகன் கேசவன் (23), ஆறுமுகம் என்பவரது மகன் பரமசிவம் (23), ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை ரோடு பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு பெரிய கடை வீதிக்கு சென்றார்
    • கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    திருச்சி

    திருச்சி அல்லித்துறை சிவன் கோவில் பகுதி சேர்ந்தவர் பொன்.முருகன். இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் திருச்சி மதுரை ரோடு பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு பெரிய கடை வீதிக்கு சென்றார். பிறகு சிறிது நேரம் கழித்து பொருட்களை வாங்கிக்கொண்டு காரை எடுக்க வந்த போது கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் 4 டயர்களும் பஞ்சர் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து பொன். முருகன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
    • மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்

    திருச்சி

    திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 28). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் குட்செட் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் அவரது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரவிக்குமார் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் வக்கீலை கத்தியால் குத்தியவர் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (25)என்பது தெரியவந்தது பின்னர் அவரை போலீசார் கைது செய்து கைது ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளியில் "லிப் ரீடிங்" முறையில் விடாமுயற்சியுடன் கல்வியை பயின்றார்
    • 2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்

    கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரூவை சேர்ந்தவர் 27 வயதான சாரா சன்னி (Sarah Sunny).

    இவருக்கு மரியா சன்னி எனும் சகோதரியும் பிரதிக் குருவில்லா எனும் சகோதரனும் உள்ளனர். பிரதிக் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மரியா பட்டய கணக்காளராக பணிபுரிகிறார்.

    இவர்கள் மூவருக்கும் சிறு வயது முதலே இரண்டு செவிகளிலும் கேட்டல் குறைபாடு உண்டு. இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை இவர்கள் அடைந்தனர்.

    இவர்களது பெற்றோர், கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரத்யேக பள்ளிகளில் இவர்களை படிக்க வைக்காமல், இத்தகைய குறைபாடுகள் உள்ளவர்களையும் பிற குழந்தைகளுடன் படிக்க அனுமதிக்கும் பள்ளிகளிலேயே இவர்களை சேர்த்தனர்.

    பள்ளியில் சாரா "லிப் ரீடிங்" (lip reading) எனும் உதடுகளின் அசைவை உணரும் வழிமுறை மூலமாக கல்வி கற்று கொண்டார். பெங்களூரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சட்ட கல்வியில் சேர்ந்தார். அங்கும் அதே முறையில் பயின்றார்.

    2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்.

    இந்நிலையில், சில நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பாக தனது கட்சிக்காரருக்காக வாதாடினார்.

    சாராவிற்காக ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளரை (sign language interpreter) வைத்து கொள்ள உச்ச நீதிமன்றம் உதவியது. சைகை மொழி மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் இவர் தனது வாத பிரதிவாதங்களை வைக்க, அதனை தலைமை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

    இந்திய சட்ட வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய குறைபாடு உள்ள ஒருவர் வாதாடியது இதுவே முதல் முறை.

    சன்னிக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவில் எதிர்காலத்தில் சட்டத்துறையில் கல்வி பெறவும், வழக்கறிஞராக பணியாற்றவும் இவரை போன்ற பலர் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

    • வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    • நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்றது

    கரூர்

    மத்திய அரசு இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் 3 முக்கிய பிரிவான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சியை சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துகளில் பல்வேறு மக்கள் விரோத சட்டவிரோத சரத்துகளும் புதிதாக திணிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் கருத்துகளை கேட்காமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினை உடனே திரும்ப பெற கோரியும் நேற்று கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு கரூர் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பார்த்திபன், செயலாளர் தமிழ்வாணன், நன்மாறன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதை கண்டித்து செங்கோட்டையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவா் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை:

    மத்திய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதை கண்டித்து செங்கோட்டையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவா் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் முத்துக் குமாரசாமி, செயலாளா் அருண், பொருளாளா் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா். மூத்த வக்கீல் கிருஷ்ண மூர்த்தி வரவேற்று பேசினார்.

    இதில் வக்கீல்கள் சங்கரலிங்கம், ஆதிபால சுப்பிரமணியன், இளங்கோ, சிதம்பரம், சத்தியசங்கர், நல்லையா, சுபசேகர், ஆசாத், வெங்கடேஷ், முகம்மது சிராஜ், ராம லிங்கம், குமார், வீரபாண்டியன், வைரவன், ராஜா, சிவ சுந்தரவேலன், முத்துராஜ், மாலதி, இசக்கி இந்திரா, கலீலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.

    அவிநாசி:

    அவிநாசி செம்பியநல்லூா் ஊராட்சி முத்தம்மாள் நகரை சோ்ந்த லட்சுமணன் மகள் சரண்யா (வயது 25), வக்கீல். இவருக்கும் திருப்பூரை சோ்ந்த கட்டடப் பொறியாளா் சங்கருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து பெற்றோா் வீட்டில் வசித்து வந்த சரண்யா, கடந்த ஜூலை மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

    இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும், சப்-கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.இதற்கிடையில், இவ்வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவிநாசி சிஐடியூ., கட்டட கட்டுமான தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய சரண்யாவின் மாமனாரான திருப்பூா் கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணி (65), இவரது மகள் கோபிசெட்டிபாளையம் அங்காளம்மன் நகரைச் சோ்ந்த லாவண்யா (26), இவரது கணவா் மெளலி சங்கா்(28) ஆகியோரை போலீசார் இரவு கைது செய்தனா்.

    தலைமறைவாக உள்ள சரண்யாவின் கணவா் சங்கரை போலீசார் தேடி வருகின்றனா்.

    ×