என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajya Sabha election"

    • தி.மு.க. - 4, அ.தி.மு.க.-2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. எனவே இந்த 6 பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2- ந்தேதி தொடங்கியது.

    இந்த தேர்தலில், எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க சார்பில் 2 பேரும் வெற்றி பெறுவார்கள். அந்த அடிப்படையில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. தனது மற்றொரு எம்.பி. பதவியை கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்கியது. எனவே அந்த இடத்திற்கு கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாகும். மொத்தம் தி.மு.க. - 4, அ.தி.மு.க.-2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

    வேட்புமனுக்கள் பரிசீலனையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சைகள் 7 பேர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாததால் சுயேட்சைகள் 7 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் வெற்றி பெற்றதாக 12-ந்தேதி மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

    • புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
    • நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி இம்மாதம் (ஜூன்) 19-ந்தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.

    தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கடந்த 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இன்றுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

    வரும் 12-ந்தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிருந்தால் வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும்.

    • பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19-ந்தேதி நடைபெறுகிறது.
    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோரை அறிவித்து இருந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19-ந்தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோரை அறிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால்

    சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    • தி.மு.க. வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்சபைக்கு (ராஜ்ய சபா) தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இருந்து 4 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. வேட்பாளராக பி.வில்சன் எம்.பி., எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் போட்டியிடுகிறார்கள்.

    இவர்கள் 4 பேரும் இன்று காலையில் தலைமைச் செயலகம் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். வேட்பு மனு தாக்கல் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்கள் 4 பேருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    வேட்புமனு தாக்கலின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேலம் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் அடுத்தடுத்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதால் மாநிலங்களவைத் தேர்தல் நடவடிக்கைகளை சூடுபிடித்துள்ளன.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்கான 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் கர்நாடகாவில் இருந்து மீண்டும் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனும், மகாராஷ்டிராவில் இருந்து மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

     இந்த பட்டியல் வெளியான சிறிது நேரத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 10 பேர் இடம் பெற வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ்  கட்சி வெளியிட்டது.  

    இதில் தமிழகத்தில் இருந்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

    மேலும் சட்டீஸ்கரில் இருந்து ராஜீவ் சுக்லாவும், ஹரியானாவில் இருந்து அஜய் மக்கானும், கர்நாடகாவில் இருந்து ஜெயராம் ரமேஷ், ராஜஸ்தானில் இருந்து முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும், உள்ளிட்டோரும் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    மாநிலங்களவையில் காலியாக உள்ள மொத்தம் 57 இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி 15 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 31 கடைசி நாள் ஆகும்.

    ×