search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Contempt Of Court"

    • அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற மன்ற பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • சட்ட பிரிவுகளின் பெயர்கள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு

    அரியலூர்,

    மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் வழக்குரைஞர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றறவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை மாற்றறம் மற்றும் திருத்தம் கொண்டு வர சட்ட மசோதாவை தாக்கல் செய்தது, தொடர்ந்து ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.போராட்டத்துக்கு அரியலூர் வழக்குரைஞர்கள் அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், அரசு வழக்குரைஞர்கள் கதிரவன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செந்துறை குற்றவியல் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். வழக்குரைஞர் சங்க பொறுப்பாளர்கள் காரல்மார்க்ஸ்,ஜெயபால், செல்வநம்பி, சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

    • புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கோர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கோர்ட்டில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. அதை உடனடியாக நிரப்ப வேண்டும். வக்கீல்களுக்கு, வழக்காளிகளுக்கும் எதிராக செயல்படும் முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை வக்கீல்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இருந்தது. அதன்படி வக்கீல்கள் இன்று கோர்ட்டை புறக்கணித்து போரா ட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் செயலா ளர் சக்திவேல், பொருளாளர் லட்சுமி நாராயணன், இணை செயலாளர்கள் திருமலைவாசன், சம்பத், பாலசுந்தரம், சதீஷ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ், சந்தோஷ், சூர்யா, கவியரசன் மற்றும் மூத்த வக்கீல்கள் பக்தவச்சலம், சுப்பிர மணியன், பாலசுந்தரம், பாலமுருகன், கண்ணன், ராஜேந்திரன், திருகண்ண செல்வன், சுப்பிரமணி, முகுந்தன், ராஜ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்க ணிப்பு போரா ட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டது.

    • நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
    • தண்டனை பெற்றவர்கள் 9ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் முன் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.

    மதுரை:

    திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்த மாதம் 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என அவர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும் என்று கூறினர்.

    இவ்வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் 2 கல்வித்துறை அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் வரும் 9ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் முன் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.

    • கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும்.
    • படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோர்ட்டில் வக்கீல்கள், தங்களின் பணிகளை புறக்கணித்து போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும். மற்ற படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். இதனை கண்டி த்தும் கோர்ட்டுகளில் அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதிக்க வலியுறுத்தியும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்தும் திண்டி வனம் வக்கீல்கள் இன்று பணி களை புறக்கணித்தனர்.

    கோர்ட்டு வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்தை விட்டு வெளியில் வந்த னர். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷ ங்கள் எழுப்பினர்.

    அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த மயிலம் போலீசார், வக்கீ ல்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடைபெ ற்றது. இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீ சார் வரவழைக்கப்ப ட்டு சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்களை அப்புறப்ப டுத்தினர்.

    வக்கீல்கள் செய்த திடீர் சாலைமறியலால் சென்னை - திருச்சி நெடுஞ்சா லையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    • அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
    • மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொணடு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

    மதுரை:

    திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    அப்போது, நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என அவர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். நீதிபதி கூறியதாவது:-

    ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகுதான் எது சரி? எது தவறு? என ஆலோசனை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அந்த உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவதில்லை.

    எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும்.

    நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொணடு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

    இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

    • 19-ந் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தினர்.
    • இதனை கண்டித்து, சேலம் நீதிமன்ற வக்கீல்கள் ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி 19-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தினர்.

    இதனை கண்டித்து, சேலம் நீதிமன்ற வக்கீல்கள் ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி 19-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, நாளை கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்த இருந்த நிலையில், விடுமுறை தினம் என்பதால் இன்று சேலம் நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

    • கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களை வழக்கறிஞர்கள் நேற்று புறக்கணித்தனர்.
    • குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களை குளித்தலை வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் குளித்தலையில் 10 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 185 வழக்கறிஞர்கள், கிருஷ்ணராயபுரத்தில் 2 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25 வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.

    கரூர்

    உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலையைக் கண்டித்து கரூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்தனர்.

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களை வழக்கறிஞர்கள் நேற்று புறக்கணித்தனர்.

    கரூர் நீதிமன்றத்தை கரூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் 75 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 570 வழக்கறிஞர்கள், அரவக்குறிச்சி நீதிமன்றத்தை அரவக்குறிச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் 15 வழக்கறிஞர்கள்,

    குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களை குளித்தலை வழக்கறிஞர் சங்க தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் குளித்தலையில் 10 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 185 வழக்கறிஞர்கள், கிருஷ்ணராயபுரத்தில் 2 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25 வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.

    உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என எச்.ராஜா தரப்பு இன்று தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
    சென்னை:

    விநாயகர் சிலை ஊர்வலத்தில்  பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்தும் தகாத வார்த்தைகளால் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. எச்.ராஜா 4 வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

    இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் இல்லை என எச்.ராஜா தரப்பில் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்  ரமானியிடம் முறையிடப்பட்டது.



    தலைமை நீதிபதி அமர்வுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும், எச்.ராஜாவை ஆஜராக உத்தரவிடுவதற்கு நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வுக்கு அதிகாரம் இல்லை எனவும் எச் ராஜா தரப்பு வக்கீல் முறையிட்டார்.

    அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி தகில் ரமானி, உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் இதுபற்றி ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி செல்வம் அமர்வு பிறப்பித்த உத்தரவு மற்றும் தங்கள் தரப்பு கருத்துக்களை எச்.ராஜாவின் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
    ×