என் மலர்tooltip icon

    இந்தியா

    சீச்சீ..! குஜராத் உயர்நீதிமன்ற விசாரணைக்கு ஆன்லைன் மூலம் கழிப்பறையில் இருந்து ஆஜரான நபர் - வீடியோ
    X

    சீச்சீ..! குஜராத் உயர்நீதிமன்ற விசாரணைக்கு ஆன்லைன் மூலம் கழிப்பறையில் இருந்து ஆஜரான நபர் - வீடியோ

    • பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது.
    • நீதிமன்றத்தில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்து தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    குஜராத் உயர்நீதிமன்ற வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

    வைரலாகி வரும் வீடியோவில், அந்த நபர் காதில் புளூடூத் ஹெட்போன்களை அணிந்துகொண்டு கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.

    பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது. இது அனைவரையும் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

    கடந்த ஜூன் 20 ஆம் தேதி தன் மீதான எப்ஐஆர் ஒன்றை ரத்து செய்யக்கோரி அந்த நபர் அளித்த மனு மீது நீதிபதி நிர்சார் தேசாய் அமர்வில் நடந்த விசாரணையின்போது இந்த சம்பவம் நடந்ததாக தெரிய வருகிறது.

    இதுதொடர்பாக கமென்ட் செய்து வரும் நெட்டிசன்கள், நீதிமன்ற அவமதிப்பு செய்த அவரை நீதிமன்றத்தில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்து தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    Next Story
    ×