உயர்நீதிமன்ற விசாரணைக்கு ஆன்லைன் மூலம் கழிப்பறையில் இருந்து ஆஜரான நபருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.
உயர்நீதிமன்ற விசாரணைக்கு ஆன்லைன் மூலம் கழிப்பறையில் இருந்து ஆஜரான நபருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
Published on

குஜராத் உயர்நீதிமன்ற வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

வைரலான அந்த வீடியோவில், அந்த நபர் காதில் புளூடூத் ஹெட்போன்களை அணிந்துகொண்டு கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.

பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது. இது அனைவரையும் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

கடந்த ஜூன் 20 ஆம் தேதி தன் மீதான எப்ஐஆர் ஒன்றை ரத்து செய்யக்கோரி அந்த நபர் அளித்த மனு மீது நீதிபதி நிர்சார் தேசாய் அமர்வில் நடந்த விசாரணையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய குஜராத் உயர்நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com