திட்டக்குடியில் மின்வாரியத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் ஒப்பாரி வைக்கும் போராட்டம் அறிவிப்பு

அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது.
நடுரோட்டில் அமைந்து உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம்.
நடுரோட்டில் அமைந்து உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரிய துறையை கண்டித்து பாஜக சார்பில் ஒப்பாரி வைக்கும் போராட்டம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட கோழியூர் 8- வது வார்டில் சாலையின் நடுவே மின்கம்பத்தை வைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்வதும்,அப்பகுதியில் இறப்புகள் நேர்ந்தால் அவர்கள் தூக்கி செல்வது சிரமமாக உள்ளது.

அவசர காலத்தில் அவசர ஊர்தி உள்ளே வர முடியாத நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக பல கட்ட போராட்டங்கள் மனுக்கள் கொடுத்தும் திட்டக்குடி நகராட்சி மற்றும் மின்வாரியத்துறை சார்ந்த அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 8-ம் தேதி கோழியூர் 8- வது வார்டில் உள்ள மின் கம்பத்தின் முன்பு அப்பகுதி மக்களோடு சேர்ந்து பாஜக நகரத் தலைவர் செல்வ பூமிநாதன் தலைமையில் அவ்விடத்தில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com