என் மலர்

  நீங்கள் தேடியது "womens protest"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை அருகே உள்ள அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறக்க இருப்பதாகவும்,நேற்று இரவு கடைக்கு மது பாட்டில் வருவதாகவும் தகவல் வந்ததாக கூறி அதிசயபுரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போலீசார் மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

  சுரண்டை:

  வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை அருகே உள்ள அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறக்க இருப்பதாகவும்,நேற்று இரவு கடைக்கு மது பாட்டில் வருவதாகவும் தகவல் வந்ததாக கூறி அதிசயபுரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீ.கே.புதூர் போலீசார் மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கண்டிப்பாக மதுக்கடை திறக்கப்படாது என போலீசார் அவர்களிடம் உறுதி அளித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்தணி - நல்லாத்தூர் சாலையில் இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  பள்ளிப்பட்டு:

  பருவமழை கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது.

  ஏரி-குளங்களில் நீர் மட்டம் குறைந்ததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பல்வேறு இடங்களில் பொது மக்கள் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  திருத்தணி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

  திருத்தணியை அடுத்த கோதண்டராமபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

  இதுபற்றி திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை குடிநீர் கேட்டு திருத்தணி - நல்லாத்தூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

  கனகம்மாசத்திரம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  பெரியபாளையம் அருகே உள்ள மெய்யூர் ஊராட்சியில் மேட்டுக்காலனி, முஸ்லிம் நகர், புதிய காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.

  இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை பெரியபாளையம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேட்டு காலனி பகுதியில் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டம் ஆத்தூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதுபாட்டில்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் ஆத்தூர் லீ பஜார் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மூடக்கோரி இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கையில் மதுபாட்டில்களுடன் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த மறியலால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆண்கள் மதுக்கடைக்கு ஆதரவளித்து கோஷம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  கும்மிடிப்பூண்டி:

  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி கிராமத்தில் கடந்த 12-ந்தேதி அரசு மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

  இதனை அறிந்த அந்த பகுதி பெண்கள் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து மதுக்கடை திறப்பது கை விடப்பட்டது.

  ஆனால் கடந்த 17-ந்தேதி அந்த மதுக்கடை திறக்கப்பட்டது. கிராம பெண்கள் கடையை திறக்க கூடாது என முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மதுக்கடை மூடப்பட்டது.

  ஆனால் சில ஆண்கள் குடியிருப்புகள் இல்லாத இடத்தில் மதுக்கடையை திறக்க வேண்டும் என்று அங்கு வந்து கோ‌ஷம் போட்டனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றகோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

  இந்த நிலையில், மதுக்கடை வேண்டாம் என்று போராட்டம் நடத்திய பெண்கள், மதுக்கடை வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்கள் என இரு தரப்பினருக்கான சமாதானப்பேச்சு வார்த்தைக்கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.

  தாசில்தார் சுரேஷ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி முன்னிலை வகித்தார். இந்த பேச்சுவார்த்தையின்போது அரசாங்க விதிகளின்படி அமைக்கபட்டுள்ள மதுக்கடையை திறப்பதால் எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்று தாசில்தார் தெரிவித்தார்.

  இதனைக்கேட்ட பெண்கள், அந்த வழியாக பள்ளி மாணவர்களும், பெண்களும் செல்கிறார்கள். எனவே, மதுக்கடையை அந்த பகுதியை விட்டு வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோ‌ஷம் போட்டனர்.

  இதைகேட்ட ஆண்கள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கூட மதுக்கடையை வைக்க முடியாவிட்டால் வேறு எங்கு வைப்பது? நாங்கள் எங்கு சென்று குடிப்பது? என கேள்வி எழுப்பினர். இரு தரப்பினர்களும் ஆளுக்கொரு பேச்சாக பேசியவாறு கோ‌ஷம் போட்டதால் சமாதானக்கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

  இதையடுத்து மதுக்கடை அமைப்பது தொடர்பான சமாதானக்கூட்டத்தை தாசில்தார் ஒத்தி வைத்தார். இது தொடர்பான முடிவை பொன்னேரி கோட்டாட்சியர் எடுப்பார். அதுவரை மதுக்கடை திறக்கப்படாது எனவும் தாசில்தார் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயபுரம் அருகே கியாஸ் பங்க்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் கருப்பு துணிகட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  ராயபுரம்:

  காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் தனியார் சார்பில் ஆட்டோ கியாஸ் பங்க் அமைக்கப்படுகிறது.

  இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த பங்க் அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் அந்த பங்க் நேற்று திறக்கப்பட்டது.

  பங்க் அமைப்பதற்கு எதிராக ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

  இந்த நிலையில் நேற்று காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

  இன்று 2-வது நாளாக மீண்டும் போராட்டம் நடந்தது. இதில் ஒய்.எம்.சி.ஏ. குப்பம், சி.ஜி.காலனி, விநாயகர்புரம், அமராஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

  அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு அனுமதி அளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கியாஸ் பங்க்குக்கு எதிராகவும் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இடிகரை அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போராடி தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை அறிந்த பெண்கள் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  கவுண்டம்பாளையம்:

  கோவை இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்டது மணியக்காரம்பாளையம். இங்குள்ள சங்கர் நகர் 7-வது வார்டில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இது அந்த பகுதி பெண்களுக்கு நேற்று தெரியவில்லை.

  கூட்டம் அதிகமாக இருப்பதை அறிந்தபின்னரே அவர்களுக்கு தெரியவந்தது.

  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போராடி தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டதை அறிந்த பெண்கள் இன்று காலை டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  இது குறித்து பெண்கள் கூறும்போது, மேட்டுப்பாளையம்- அன்னூரை இணைக்கும் முக்கிய சாலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையால் ஏற்கனவே நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் இந்த வழியாகத்தான் செல்லவேண்டும். எனவே உடனே டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும் என்று கூறினர்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாராபுரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட கோரி பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கும் குடிமகன்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
  தாராபுரம்:

  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய்பட்டணம் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.

  இக்கிராமத்தில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோர்ட்டு உத்தரவிட்ட போது தளவாய் பட்டணம் கடை மூடப்பட்டது.

  இந்த நிலையில் நேற்று அங்கு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் 120-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.

  இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. மதுக்கடை திறந்தால் மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்கள். மேலும் இக்கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்கள் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து விடுவார்கள்.

  எனவே இங்கு டாஸ்மாக் கடை அமைக்ககூடாது என போராட்டம் நடத்தினார்கள். இதனை அறிந்த குடிமகன்கள் அங்கு வந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என கூறினர். இதனால் குடிமகன்களுக்கும்- போராட்டம் நடத்திய பெண்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இது குறித்து குடிமகன்கள் கூறியதாவது-

  நாங்கள் விவசாய வேலை செய்து வருகிறோம். உள்ளூரில் டாஸ்மாக் கடை இல்லாததால் தாராபுரம் அல்லது காரத் தொழுவு, சந்தராபுரம் கிராமங்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மது அருந்தி வந்தோம்.

  அவ்வாறு மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பியவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் உயிர் இழந்து உள்ளனர்.

  மேலும் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டி வரும் அனைவரையும் டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே போலீசார் வழி மறித்து பிடித்து விடுகின்றனர்.

  இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க தான் இப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என கூறுகிறோம். இந்த கடை யாருக்கும் இடையூறு இல்லாம்ல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கும் இடத்தில் தான் உள்ளது.

  இதில் யார் தலையிட்டாலும் கடையை மூட விடமாட்டோம்.

  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  பெண்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட இந்த டாஸ்மாக் கடை மாலை 6 மணிக்கு மேல் திறக்கப்பட்டது. #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  திருநாவலூர்:

  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சிக்குப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

  இன்று காலை அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை- திருவெண்ணைநல்லூர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

  போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் காலிகுடங்களுடன் பங்கேற்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதலிங்க கோஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

  விரைவில் ஆத்தூர் ஊராட்சிக்குப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்தணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  திருத்தணி:

  திருத்தணியை அடுத்த அகுர் கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளன. கடந்த 5 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.

  அதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். நீண்ட தூரம் சென்று பெண்கள் குடங்களில் தண்ணீர் பிடித்து தேவையை சமாளித்தார்கள்.

  இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 8 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்தணி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தண்ணீர் கிடைக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட் டோம் என ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வரிசையாக நின்றன.

  தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலர் லட்சுமணன், டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர். #Tamilnews
  ×