என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.
சுரண்டை அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இரவில் பெண்கள் போராட்டம்
- வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை அருகே உள்ள அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறக்க இருப்பதாகவும்,நேற்று இரவு கடைக்கு மது பாட்டில் வருவதாகவும் தகவல் வந்ததாக கூறி அதிசயபுரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சுரண்டை:
வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டை அருகே உள்ள அதிசயபுரம் கிராமத்தில் மது கடை திறக்க இருப்பதாகவும்,நேற்று இரவு கடைக்கு மது பாட்டில் வருவதாகவும் தகவல் வந்ததாக கூறி அதிசயபுரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இரவு நேரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீ.கே.புதூர் போலீசார் மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கண்டிப்பாக மதுக்கடை திறக்கப்படாது என போலீசார் அவர்களிடம் உறுதி அளித்தனர்.
Next Story






