search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TamilNadu"

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
    • பிப்ரவரி, மார்ச்சில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரை தடையின்றி திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவை வைத்துள்ள 3.5 டி.எம்.சி. நீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீரையும் தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. நீர் இருப்பு மற்றும் சூழலைக் கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

    • புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.
    • தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடோமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

    புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.

    ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டை போல ரசாயனம் சேர்க்கப்படாத வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. அதே போல், கடந்த வாரம் கோவாவில் உள்ள மபுசா நகரின், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு நகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடின.
    • ரஞ்சி கோப்பை வரலாற்றில் 47வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தியுள்ளது.

    ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மும்பை அணி முன்னேறியது.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 378 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    பின்னர் 232 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் தனது 2-வது இன்னிங்சில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 70 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது தமிழ்நாடு.

    இதன் மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் 47வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தியுள்ளது.

    • காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியைவீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி
    • தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

    கோவையில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்ட்ரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    முதல் இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது. தமிழக அணி சார்பில் பாபா இந்திரஜித் 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 155 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை சவுராஷ்டிரா அணி தொடங்கியது.

    2-வது இன்னிங்க்சை தொடங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால தமிழக அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது

    இப்போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 60 ரன்களையும் குவித்து அதிரடி காட்டிய தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தமிழகம் சார்பில் இந்திரஜித் 80 ரன், பூபதி குமார் 65 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    கோவை:

    89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

    ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    இந்நிலையில், 3-வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து 83 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டும், அஜித் ராம் 3 விக்கெட்டும், வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய தமிழகம் முதல் நாள் முடிவில் 1 விக்கெட்க்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தின் ஜெகதீசன் 37 ரன்னும், சாய் கிஷோர் 60 ரன்னும், பிர்தோஷ் பால் 13 ரன்னும் எடுத்தனர். பாபா இந்திரஜித், பூபதி குமார் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர்.

    இந்திரஜித் 80 ரன்னும், பூபதி குமார் 65 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

    இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை தமிழகம் 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விஜய் சங்கர் 14 ரன்னும், முகமது அலி 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.
    • 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து ‘சி’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி

    ரஞ்சி கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.

    சேலத்தில் நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் தமிழக அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.

    இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 435 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திரஜித் 187 ரன்களும், விஜய் சங்கர் 130 ரன்களும் அடித்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்மோல் மல்ஹோத்ரா 64 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் அஜித் ராம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கப்பட்டது.

    2-வது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 109 ரன்களை குவித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு தமிழக அணிக்கு 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணி 7 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து 'சி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி. இன்னும் ஒரு சில அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் விளையாடி வருவதால், அதன் முடிவுகளை பொறுத்தே காலிறுதி போட்டிக்கான அட்டவணை அமையும்.

    • காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது.
    • 3 மாதத்துக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடந்தது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. 3 மாதங்களுக்கு பிறகு இன்று இக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டி.எம்.சி. தண்ணீரை விநாடிக்கு 998 கன அடி வீதம் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தொடர்ந்து கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும் அது குறைவான அளவையே திறந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ம் தேதி தொடங்க வாய்ப்பு.
    • பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் என தகவல்.

    bu2024ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பிப்ரவரி 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி பிறகு பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
    • இதில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 26-ம் தேதி குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடந்தது. அதில் நாட்டின் பன்முக கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

    இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இவை தவிர மத்திய அமைச்சரவையின் 9 அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.

    இதற்கிடையே, சிறப்பான ஊர்திகளை இரு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்து பரிசு வழங்குவர். ஒன்றை நடுவர் குழுவினர் இறுதி செய்வர். இரண்டாவது பிரிவில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த ஊர்திகள் தேர்வு செய்யப்படும்.

    இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் இடம்பிடித்த, 'பழந்தமிழகத்தின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்' என்ற கருப்பொருள் அடிப்படையிலான அலங்கார ஊர்தி, நடுவர் குழுவினரால் 3-ம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    கைவினை மற்றும் கைத்தறித் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    டோர்டோ சுற்றுலா கிராமத்தை பிரதிபலித்த குஜராத்தின் அலங்கார ஊர்தி இரண்டாம் பரிசையும், மக்கள் தேர்வில் முதலிடமும் பிடித்தது.

    • இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர்.
    • தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் அஜோய்குமார் தெரிவித்துள்ளார்.

    வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அஜோய் குமார் மேலும் கூறியதாவது:-

    காங்கிரசுடன் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய கூட்டணியை அவர் வழிநடத்துவார். 

    பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு இன்னும இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.

    ராமர் கோயில் கட்டவும், பல திட்டங்களைத் தொடங்கவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் மத்திய அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிதி வழங்க மறுக்கிறார்கள். திருநெல்வேலி, சென்னை வெள்ளத்திற்கு தமிழக அரசு பலமுறை நிவாரண நிதி கேட்டு வருகிறது. ஆனால் பாஜக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இந்தியாவின் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் சொத்துக்களில் 76 சதவீதத்தை வைத்துள்ளனர். ஆனால் 50 சதவீத மக்கள் தொகை இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
    • கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.

    கோவில்பட்டி:

    1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பின்பு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க ஆலோசிக்கப் பட்டது. 1956 ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டது. அவரவர் மாநிலங்களுக்கு அவரவர் விரும்பிய பெயர்கள் சூட்டப்பட்டது.

    தமிழ்நாட்டுக்கு மதராஸ் என்ற பெயரே நீடித்தது. மதராஸ் மாகாணம் தமிழ்நாடு எனும் பெயர் சூட்ட பல போராட்டங்கள் நடைபெற்றது. தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். 1957-ல் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைக்க தி.மு.க. சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தது. பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் அது தோல்வியில் முடிந்தது.

    1967-ல் தி.மு.க. அரசு அமைந்த போது ஜூலை 18-ந் தேதி சட்டமன்றத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் அண்ணா பெரும்பான்மை ஆதரவுடன் மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறை வேற்றினார். அதனைத் தொடர்ந்து 1968-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி அதிகா ரப்பூர்வமாக மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என அறிவிக்கப் பட்டது.

    இதனை நினைவு கூறும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன்படி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு என்ற பிரமாண்ட எழுத்து வடிவில் அமர்ந்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், மேனாள் ஓவிய ஆசிரியர் வேல்முருகன் உள்பட பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    தமிழகத்தில் குட்கா புழக்கம் தாராளமாக உள்ளது என கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. குற்றச்சாட்டியுள்ளார்.
    தூத்துக்குடி:

    வல்லநாடு வெள்ளை யத்தேவன் மணிமண்டபத்திற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று வருகை தந்தார். 

    மணிமண்டபத்தில் குதிரையில் வெள்ளையத் தேவன் அமர்ந்திருப்பது போன்ற புதிய வெண்கல சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டபொம்மனின் படைத்தளபதி வெள்ளை யத்தேவனுக்கு மணிமண்டபம் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. முழு உருவ வெண்கலை சிலை அமைக்கவும் ரூ.39.75 லட்சம் அ.தி.முக. ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையிலும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குட்கா பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  குட்கா பொருட்கள் இந்த அளவுக்கு பறிமுதல் செய்யப்படுகிறது எனில் அந்த அளவிற்கு தாரளமாக புழக்கத்தில் உள்ளது.

    எம்,எல்.ஏ., உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தி.மு.க. மாவட்டக் கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்று கின்றனர். தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல் தான். 

    அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன், எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்- அமைச்சர் ஆக முடியும். தி.மு.க.வில் வாரிசுகள் தான் பதவிக்கு வர முடியும். சசிகலா அ.தி.மு.க.வுக்கு  வந்தால் வரவேற்போம் என பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சொல்லி உள்ளார். இதுகுறித்து சசிகலா தான் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

    அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், யூனியன் துணை சேர்மனும், ஒன்றிய செயலாளருமான லெட்சுமணப்பெருமாள், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துராமலிங்கம், அவ்வையார், முன்னாள் கவுன்சிலர் உடையார், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், பசும் பொன் மக்கள் இயக்க தலைவர் மாரிமுத்து, ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆதிநாதன், முன்னாள் அவைத்தலைவர் பிள்ளை முத்து, ஒன்றிய பொருளாளர் ஜேசிபி குமார், கிளைக் கழக தலைவர் தங்கபாண்டி, பல்க் மணி, திருமலை, சிவனு, வியாபாரிகள் சங்கத் தலைவர் பொன்.பாதர்வெள்ளை, எம்.ஜி.ஆர். மன்றம் பரம சிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×