search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபி மஞ்சூரியன்"

    • தமிழ்நாட்டில் குட்காவை தடை செய்துள்ளோம்.
    • பா.ஜனதாவின் எந்த அச்சுறுத்தலுக்கும் தி.மு.க. பயப்படாது.

    சென்னை:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனை தடை செய்தார்கள் என்பதற்காக தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என்று இல்லை. தமிழ்நாட்டில் குட்காவை தடை செய்துள்ளோம்.

     

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    ஆனால், கர்நாடகாவில் அதை தடை செய்யவில்லை. எந்த உணவு பொருளில் கெடுதல் இருக்கிறதோ அதை உணவுப்பொருள் பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்து தடை செய்வோம். ஏற்கனவே, பஞ்சுமிட்டாயில் கெடுதல் இருந்ததால் தடை செய்தோம். தமிழக கவர்னர் நாள்தோறும் அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முதலமைச்சர் முழுமையாக குறைத்துள்ளார். பா.ஜனதாவின் எந்த அச்சுறுத்தலுக்கும் தி.மு.க. பயப்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.
    • தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடோமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

    புற்றுநோய், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ரோடோமைன்-பி ரசாயனம் காரணமாக அமையும் என சொல்லப்படுகிறது.

    ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டை போல ரசாயனம் சேர்க்கப்படாத வெள்ளை பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யலாம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. அதே போல், கடந்த வாரம் கோவாவில் உள்ள மபுசா நகரின், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு நகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுகிறது.
    • ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

    காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் சுவையான உணவு வகை கோபி மஞ்சூரியன். உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமான உணவாக கோபி மஞ்சூரியன் விளங்குகிறது. இந்த நிலையில், கோபி மஞ்சூரியன் உணவிற்கு கோவா மாநிலத்தை சேர்ந்த நகரம் ஒன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மசாலா பொருட்கள் பூசப்பட்ட காலிஃபிளவரை எண்ணையில் பொரித்து, பிறகு பொரித்தெடுக்கப்பட்ட காலிஃபிளவரை காய்கறி வகைகள், பல்வித சாஸ் சேர்த்து சமைக்கப்படுவதே கோபி மஞ்சூரியன் என்ற பெயரில் காரசாரமாக பரிமாறப்படுகிறது. இந்த உணவில் செயற்கை நிறங்கள் அதிகளவில் கலக்கப்படுவதே இதற்கு தடை விதிக்க காரணமாக கூறப்பட்டுள்ளது.

     


    முன்னதாக 2022-ம் ஆண்டு கோவாவை சேர்ந்த மபுசா நகரில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி, இந்த உணவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும், கடைகளில் இந்த உணவு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ரெய்டுகளும் நடத்தப்பட்டன.

    மும்பையை சேர்ந்த நெல்சன் வாங் என்பவரே இத்தகைய உணவை கண்டறிந்தவர் என கூறப்படுகிறது. இவர் கோழி இறைச்சியை கொண்டு மஞ்சூரியன் செய்து 1970-க்களில் பரிமாறியதாக தெரிகிறது. பிறகு, இந்த உணவு காலிஃபிளவர் கொண்டும் சமைக்க துவங்கப்பட்டது. அந்த வகையில் கோபி மஞ்சூரியன், கோழி இறைச்சி வகைக்கு மாற்றான சைவ உணவாக மாறியது. 

    ×