search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "circulation"

    தமிழகத்தில் குட்கா புழக்கம் தாராளமாக உள்ளது என கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. குற்றச்சாட்டியுள்ளார்.
    தூத்துக்குடி:

    வல்லநாடு வெள்ளை யத்தேவன் மணிமண்டபத்திற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று வருகை தந்தார். 

    மணிமண்டபத்தில் குதிரையில் வெள்ளையத் தேவன் அமர்ந்திருப்பது போன்ற புதிய வெண்கல சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்டபொம்மனின் படைத்தளபதி வெள்ளை யத்தேவனுக்கு மணிமண்டபம் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. முழு உருவ வெண்கலை சிலை அமைக்கவும் ரூ.39.75 லட்சம் அ.தி.முக. ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தி.மு.க. ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையிலும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குட்கா பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  குட்கா பொருட்கள் இந்த அளவுக்கு பறிமுதல் செய்யப்படுகிறது எனில் அந்த அளவிற்கு தாரளமாக புழக்கத்தில் உள்ளது.

    எம்,எல்.ஏ., உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தி.மு.க. மாவட்டக் கழகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்று கின்றனர். தி.மு.க. என்றாலே வாரிசு அரசியல் தான். 

    அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன், எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்- அமைச்சர் ஆக முடியும். தி.மு.க.வில் வாரிசுகள் தான் பதவிக்கு வர முடியும். சசிகலா அ.தி.மு.க.வுக்கு  வந்தால் வரவேற்போம் என பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சொல்லி உள்ளார். இதுகுறித்து சசிகலா தான் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

    அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், யூனியன் துணை சேர்மனும், ஒன்றிய செயலாளருமான லெட்சுமணப்பெருமாள், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துராமலிங்கம், அவ்வையார், முன்னாள் கவுன்சிலர் உடையார், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், பசும் பொன் மக்கள் இயக்க தலைவர் மாரிமுத்து, ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆதிநாதன், முன்னாள் அவைத்தலைவர் பிள்ளை முத்து, ஒன்றிய பொருளாளர் ஜேசிபி குமார், கிளைக் கழக தலைவர் தங்கபாண்டி, பல்க் மணி, திருமலை, சிவனு, வியாபாரிகள் சங்கத் தலைவர் பொன்.பாதர்வெள்ளை, எம்.ஜி.ஆர். மன்றம் பரம சிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×