search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய் கிஷோர்"

    • குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
    • சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல்.-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சாய் கிஷோர். 2024 ஆசிய கோப்பை தொடர் மூலம் இந்திய அணியில் அறிமுகமான சாய் கிஷோர் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

    சென்னை சேர்ந்தவரான சாய் கிஷோர் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சித்தா படத்தில் இடம்பெற்ற "அமுத கடல் உனக்குத் தான்" பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சித்தார்த் நடித்து வெளியான சித்தா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த பாடலும் சமூக வலைதளங்களில் வைரலானது.



    • அரையிறுதியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
    • டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தமிழ்நாடு தோல்விக்கு முக்கிய காரணம் என பயிற்சியாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாடு அணி ஏழு வருடத்திற்கு பிறகு ரஞ்சி டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை அணிக்கெதிராக கடந்த 2-ந்தேதி மும்பையில் அரையிறுதி போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 146 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் மும்பை 378 ரன்கள் குவித்துவிட்டது. 106 ரன்னுக்குள் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் 9-வது வீரராக களம் இறங்கிய ஷர்துல் தாகூர் சதம் (109), 10-வது வீரராக களம் இறங்கிய தனுஷ் கோட்டியான் (89 நாட்அவுட்) சிறப்பாக விளையாட மும்பை அணி 378 ரன்கள் குவித்து விட்டது.

    பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 2-வது இன்னிங்சிலும் 162 ரன்னில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

    3 நாளில் போட்டி முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு அணியின் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம். நான் எப்போதும் நேரடியாகவே பேசுவேன். முதல் நாள் 9 மணிக்கே (டாஸ் சுண்டப்பட்ட நேரம்) நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என பயிற்சியாளர் குல்கர்னி தெரிவித்திருந்தார்.

    அணி தோல்வியடையும்போது கேப்டன் மற்றும் அணி வீரர்களும் பயிற்சியாளர் நிற்க வேண்டும். ஆனால், கேப்டனை குறை கூறுவது சரியல்ல என பயிற்சியாளர் குல்கர்னிக்கு எதிராக விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் குல்கர்னி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "இது மிகவும் தவறானது. பயிற்சியாளரிடம் இருந்து மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஏழு வருடங்களுக்குப் பிறகு அணியை அரையிறுதி வரை கொண்டு சென்ற கேப்டனுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக விமர்சனம் செய்துள்ளார். ஆனால் பயிற்சியாளர் முற்றிலுமாக கேப்டன் மற்றும் அணியை பஸ்க்கு கீழ் தள்ளி விட்டுள்ளார்" என்றார்.

    • மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடின.
    • ரஞ்சி கோப்பை வரலாற்றில் 47வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தியுள்ளது.

    ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மும்பை அணி முன்னேறியது.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 378 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    பின்னர் 232 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் தனது 2-வது இன்னிங்சில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 70 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது தமிழ்நாடு.

    இதன் மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் 47வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தியுள்ளது.

    • அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில், 353 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில், 353 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிகபடச்சமாகவே ஷர்துல் தாக்கூர் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 50 விக்கெட்டுக்குள் கடந்த ஒரே பந்துவீச்சாளராக மாறி அசத்தியுள்ளார். நடப்பு ரஞ்சிக்கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் சாய் கிஷோர் 6 முறை 4 விக்கெட்டுகளும், 3 முறை 5 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தியுள்ளார். 53 விக்கெட்டுகளை கைப்பற்றி நடப்பு ரஞ்சிக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

    • சாய் சுதர்சன் முதல் ஓவரிலேயே ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
    • என். ஜெகதீசன் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி சாய் சுதர்சன், என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். 4 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து பிரதோஷ் பால் களம் இறங்கினார். என். ஜெகதீசன் 4 ரன்னிலும், பிரடோஷ் பால் 8 ரன்னிலும் ஆட்மிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் தமிழ்நாடு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 5-வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப் பிடித்தது. ஆனால், நீண்ட நேரம் சமாளிக்க முடியவில்லை. பாபா இந்திரஜித் 11 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் இந்தியா 42 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. தமிழ்நாடு 31 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்க 68 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    விஜய் சங்கர் 56 பந்தில் 28 ரன்களும், வாஷிங்டன் சுந்தனர் 52 பந்தில் 15 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.

    • காலிறுதியில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
    • மும்பையை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது சவாலானதாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரும், முதல்தர கிரிக்கெட் தொருடருமான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    அரைஇறுதி ஆட்டங்கள் நாளை முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடக்கும் முதல் அரை இறுதியில் விதர்பா- மத்திய பிரதேசமும், மும்பையில் நடக்கும் 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகளும் மோதுகின்றன. இப்போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    7 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு முன்னேறியுள்ள தமிழ்நாடு அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சாய்கிஷோர் தலைமையிலான தமிழக அணியில் ஜெகதீசன், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், பூபதி குமார் சந்தீப் வாரியர், முகமது அஜித்ராய் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    ரகானே தலைமையிலான மும்பை அணியில் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், முஷீர் கான், ஷர்துல் தாகூர், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    ஒருவேளை போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தால் முதல் இன்னிங்சில் அதிக ரன்களை அடிக்கும் அணி வெற்றி பெற்றதாக கருதப்பட்டு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெறும்.

    எலைட் குரூப் சியில் இடம் பிடித்திருந்த தமிழ்நாடு ஏழு போட்டிகளில் 4-ல் வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா மூலம் காலிறுதிக்கு முன்னேறியது.

    தமிழ்நாடு அணி காலிறுதியில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 

    • காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியைவீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி
    • தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

    கோவையில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்ட்ரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    முதல் இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது. தமிழக அணி சார்பில் பாபா இந்திரஜித் 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 155 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை சவுராஷ்டிரா அணி தொடங்கியது.

    2-வது இன்னிங்க்சை தொடங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால தமிழக அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது

    இப்போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 60 ரன்களையும் குவித்து அதிரடி காட்டிய தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (245) அடிக்க தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது.
    • 2-வது இன்னிங்சில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் சிறப்பாக பந்து வீச ரெயில்வேஸ் அணி 114 ரன்னில் சுருண்டது.

    ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. கோவையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (245) அடிக்க தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வேஸ் அணி 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சாய் கிஷோர், வாரியார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    ரெயில்வேஸ் அணி 243 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. இதனால் தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 2-வது இன்னிங்சில் சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் சிறப்பாக பந்து வீச ரெயில்வேஸ் அணி 114 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ×