search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?- மும்பையுடன் நாளை மோதல்
    X

    ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?- மும்பையுடன் நாளை மோதல்

    • காலிறுதியில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
    • மும்பையை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது சவாலானதாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரும், முதல்தர கிரிக்கெட் தொருடருமான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

    அரைஇறுதி ஆட்டங்கள் நாளை முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. நாக்பூரில் நடக்கும் முதல் அரை இறுதியில் விதர்பா- மத்திய பிரதேசமும், மும்பையில் நடக்கும் 2-வது அரை இறுதியில் தமிழ்நாடு- மும்பை அணிகளும் மோதுகின்றன. இப்போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    7 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு முன்னேறியுள்ள தமிழ்நாடு அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சாய்கிஷோர் தலைமையிலான தமிழக அணியில் ஜெகதீசன், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், பூபதி குமார் சந்தீப் வாரியர், முகமது அஜித்ராய் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    ரகானே தலைமையிலான மும்பை அணியில் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், முஷீர் கான், ஷர்துல் தாகூர், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    ஒருவேளை போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்தால் முதல் இன்னிங்சில் அதிக ரன்களை அடிக்கும் அணி வெற்றி பெற்றதாக கருதப்பட்டு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெறும்.

    எலைட் குரூப் சியில் இடம் பிடித்திருந்த தமிழ்நாடு ஏழு போட்டிகளில் 4-ல் வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா மூலம் காலிறுதிக்கு முன்னேறியது.

    தமிழ்நாடு அணி காலிறுதியில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

    Next Story
    ×