search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thief"

    • கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து வைத்தார்
    • டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார்

    பிரிட்டனில் திருடப் போன வீட்டில் கூட்டிப் பெருக்கி, சாப்பாடு சமைத்து, துணிதுவைத்து காயப்போட்டுவிட்டு தப்பிய பலே திருடன் பற்றிய உண்மை வெளிவந்துள்ளது. பிரிட்டனில் கார்டிப் [Cardiff] நகரில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக டாமியன் வோஜ்னிலோவிச் [Damian Wojnilowicz] என்ற 36 வயது திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.

     

    பெண் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து நுழைந்த டாமியன், வீட்டில் சேர்ந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, சமையலறை, கழிவறையில் உள்ள பொருட்களைச் சீராக அடுக்கி வைத்து, கடையில் வாங்கி வைத்திருந்த பலசரக்கு பொருட்களை பிரிட்ஜில் அடுக்கி வைத்து , கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்து அதைக் காயப்போட்டு விட்டுச் சென்றுள்ளார்.

     

    வீட்டை விட்டு வரும்போது, 'டோன்ட் வொரி, பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்' என்று எழுதி வைத்துவிட்டும் வந்துள்ளார். வீட்டில் வசித்து வந்த அந்தப்பெண் திரும்பிவைத்தும் இதைப் பார்த்து அதிர்ந்துபோனார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபின், திருடனின் வினோத செய்கையால் பயந்து தனது வீட்டில் வசிக்காமல் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.

    இந்த சம்பவம் ஜூலை 16 ஆம் தேதி நடந்த நிலையில் ஒருவாரம் கழித்து ஜூலை 26 ஆம் தேதி மற்றொரு வீட்டில் திருடும்போது டாமியன் பிடிபட்டுள்ளார். டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார். இதுதொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து வரும் வேலையில் இந்த விசித்திர திருடனின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

    • திருடனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.
    • சாப்பாடு தாருங்கள் என அலறினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் எல்லா ரெட்டி கூடம் கிராமத்தில் நேற்று வாலிபர் ஒருவர் வீடுகள் மற்றும் அங்குள்ள ஒரு கோவிலை நோட்ட மிட்டபடி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்.

    அதைப் பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வாலிபர் திருட வந்துள்ளார் என்பதை ஊர்ஜிதம் செய்தனர். இதைத் தொடர்ந்து வாலிபரை பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். அவரை சிலர் அடித்து உதைத்தனர்.


    அப்போது வாலிபர் கதறி அழுதார். எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்கள். ஆனால் என்னால் பசி தாங்க முடியவில்லை. சாப்பாடு தாருங்கள் என அலறினார். இதை தொடர்ந்து பொதுமக்கள் தாக்குதலை நிறுத்தினர்.

    ஒரு வீட்டில் இருந்து புளியோதரை கொண்டு வந்தனர். கட்டி வைத்திருந்த திருடனை விடுவிக்காமல் அவர்களே ஊட்டி விட்டனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 21) என்பதும், வீடுகளில் திருட வந்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்தனர்.

    திருட வந்த வாலிபரை கட்டி வைத்து உணவு ஊட்டி விட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குழந்தை திருடன் எனக் கூறி அவ்னிஷ் குமார் என்பவரை கிராம மக்கள் துரத்தியுள்ளனர்.
    • அவ்னிஷ் குமார் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார்(31) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    குழந்தை திருடன் எனக் கூறி கிராம மக்கள் அவரை துரத்தியதால், பாலத்தில் ஏறி சுமார் 8 மணி நேரமாக அங்கும் இங்குமாக ஓடி போக்கு காட்டி வந்துள்ளார். அவரை மீட்பதற்காக போலீசார் பாலத்தில் ஏறியதும் அங்கிருந்து குதித்துள்ளார்.

    உடனே அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    • வீடியோ 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விருப்பத்தை பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரெயில்களில் உள்ள கழிப்பறையில் வாளி திருட்டை தடுக்க அது இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று ஒரு ஹோட்டலில் சோப்பை யாரும் எடுத்து போகாமல் இருக்க அதன் நடுவே ஒரு துளையிடப்பட்டு உள்ளது.

    பின்னர் கயிற்றால் கட்டப்பட்டு அங்கு தொங்க விடப்பட்டு இருக்கிறது. இதனை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்த வீடியோ 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விருப்பத்தை பெற்றுள்ளது. மேலும் சிலர் இந்த தொழில்நுட்பம் இந்தியாவை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கிண்டலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • நாராயண் சுர்வேவை பற்றி திருட்டில் ஈடுபட்டவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது.
    • கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் மரணம் அடைந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் நேரல் பகுதியில் சமீபத்தில் திருட்டு ஆசாமி ஒருவர் நோட்டமிட்டு வந்தார். அப்போது ஒரு வீடு சில நாட்களாக பூட்டிக் கிடப்பதை கவனித்தார். நைசாக பூட்டை உடைத்த ஆசாமி, உள்ளே புகுந்து எல்.இ.டி.டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார். மறுநாள் மீண்டும் அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை திருட வந்தார்.

    அப்போது வீட்டில் பிரபல மராத்தி எழுத்தாளரும், கவிஞருமான நாராயண் சுர்வேவின் புகைப்படம் இருப்பதை பார்த்தார். அப்போது தான் அது பிரபல கவிஞரின் வீடு என்பது திருட்டு ஆசாமிக்கு தெரியவந்தது.

    கவிஞர் நாராயண் சுர்வே அடிமட்டத்தில் இருந்து எழுத்தால் உயர்ந்தவர் ஆவார். அவர் மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக வாழ்ந்தவர். வீட்டு வேலை, ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை, குழந்தை காப்பாளர், நாய் பராமரிப்பாளர், பால் டெலிவிரி செய்பவர், சுமை தூக்குபவர் என பல்வேறு வேலைகளை செய்து பின்னாட்களில் பிரபல எழுத்தாளர், கவிஞராக மாறியவர். அவரது கவிதைகள் நகர்ப்புற தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை தெளிவாக சித்தரித்தன.

    நாராயண் சுர்வேவை பற்றி திருட்டில் ஈடுபட்டவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது. பிரபல கவிஞரின் வீட்டில் திருடி விட்டோமே.. என்ற குற்ற உணர்ச்சி அவரது மனதை உறுத்தியது.

    கவிஞரின் வீட்டில் திருடிய டி.வி. உள்ளிட்ட பொருட்களை அந்த திருடர் மூட்டை கட்டி மீண்டும் கவிஞரின் வீட்டில் கொண்டு வந்து வைத்தார். மேலும் வீட்டில் ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி சுவரில் ஒட்டிசென்றார். 

    அதில், ''மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்'' என குறிப்பிட்டு இருந்தார்.

    கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் மரணம் அடைந்தார். தற்போது அவரது வீட்டில் மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 10 நாட்களாக விராரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று இருந்தனர். அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டில் திருடன் எழுதி வைத்து சென்ற மன்னிப்பு கடிதத்தை பார்த்தனர். திருடனின் செயலை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

    இருப்பினும் திருட்டு செயலை ஏற்றுக்கொள்ள முடியாததால், அவர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். டி.வி. உள்ளிட்ட பொருட்களில் உள்ள கைரேகையை சேகரித்து கவிஞரின் வீட்டில் கைவரிசை காட்டிய திருடனை அடையாளம் காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருடன் ஒருவர் கவிஞரின் வீட்டில் திருடிய பொருட்களை திரும்ப வைத்து, மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 26-ந் தேதி செல்வி வழக்கம்போல, ஆசிரியர் வீட்டில் பராமரிப்பு பணி செய்ய வந்தார்.
    • பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், 1½ பவுன் தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் சித்திரை செல்வின், ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சித்திரை செல்வின் தனது மனைவியுடன் கடந்த 17-ந் தேதி சென்னை சென்றுவிட்டார். அப்போது இவரது வீட்டை அந்த பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் பராமரித்து வந்தார்.

    கடந்த 26-ந் தேதி செல்வி வழக்கம்போல, ஆசிரியர் வீட்டில் பராமரிப்பு பணி செய்ய வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து செல்வி, சென்னையில் உள்ள சித்திரை செல்வினுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு ஊருக்கு திரும்பி வந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், 1½ பவுன் தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசில் சித்திரை செல்வின் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன், எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

    அந்த கடிதத்தில், "என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் 1 மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால் தான்" என்று எழுதப்பட்டு இருந்தது. போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி அதில் பதிந்து இருந்த கைரேகையை பதிவு செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வாசல்களில் விட்டுச் செல்லும் செருப்புகள், ஷுக்கள் மாயமாகின.
    • சட்டை அணிந்த ஒருவர் வீட்டின் வெளியே கிடந்த செருப்புகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

    தாம்பரம்:

    தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து வீட்டு வாசல்களில் விட்டுச் செல்லும் செருப்புகள், ஷுக்கள் மாயமாகி வந்தன.

    சந்தேகம் அடைந்த பொதுமக்கள் தாம்பரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கடந்த ஒன்றாம் தேதி சட்டை அணிந்த ஒரு நபர், படிக்கட்டுகளில் ஏறி வருகிறார். வீடுகளிடின் வெளியே கிடந்த செருப்புகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

    அவர் செருப்புகளை சைஸ் பார்த்து திருடிச் செல்கிறார். திருடர்கள் நைசாக திருடிச் செல்வதை பார்த்திருப்போம், இது என்ன சைசாக பார்த்து எடுத்துச் செல்கிறார் என குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். திருடிச் செல்லும் செருப்புகளை வார சந்தையில் விற்பதாக கூறப்படுகிறது.

    • பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர்.
    • போலீசார் அவர்களை கைது செய்து, பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் விளந்திட சமுத்திரம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.

    இங்கு பெட்ரோல் விற்பனை நிலையம் பூட்டியிருந்த நேரத்தில் அங்கு வந்த 2 பேர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர்.

    இது குறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    உடனடியாக சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அதில் 2 நபர்கள் பேட்டரிகளை திருடி செல்வது தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் பேட்டரிகளை திருடி சென்றவர்கள் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்து மற்றும் விளந்திட சமுத்திரம் பகுதியை சேர்ந்த இலக்கியன் என்பது தெரிந்தது.

    உடனடியாக போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்து, திருடிச் சென்ற பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (வயது 24).

    சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சூர்யா (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சூர்யாவை பிடித்து போலீசார் கைது செய்தனர்.

    • திருடிய ஆட்டை சந்தையில் விற்கமுயன்ற திருடன் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்
    • அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது

     தொட்டியம்,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாப்பாபட்டி மேலக்கொட்டம் அம்பலக்காரர்த் தெருவை சேர்ந்த மணி மனைவி சுமதி (வயது 42). இவர் தனது வீட்டில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார் தனது ஆடுகளுக்கு இரவு உணவு மற்றும் தண்ணீர் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார் அடுத்த நாள் காலை ஆடுகளை பார்த்த போது அதில் ஒரு கிடா ஆட்டை காணவில்லை பல்வேறு இடங்களில் தேடி கிடைக்காததால் தொட்டியம் காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தொட்டியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரேசன் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தொட்டியம் அருகே உள்ள செவ்வந்திப்பட்டியில் நடைபெறும் ஆட்டு சந்தைக்கு முசிறி சிந்தாமணித் தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் மனோஜ் குமார் (36)என்பவர் தான் திருடிய ஆட்டை கொண்டு வந்து விற்க முற்பட்டார். அப்போது விசாரணை செய்ததில் மனோஜ்குமார் விற்க வந்த ஆடு சுமதி என்பவரிடம் திருடிய ஆடு என்பது கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனோஜ் குமார் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.
    • பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

    காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.

    இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவரிடம் போனை திருப்பி கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இமானுவேலா, திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள். இவர்களது பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், அன்பால் எதையும் சாதிக்க முடியும் எனவும், மற்றொருவர் இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது, ஆனால் உண்மையானது என பதிவிட்டுள்ளார்.

    • சரவணன் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார்.
    • பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் ரூ. 65 ஆயிரம் திருட்டு போனது.  விழுப்புரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன் (50). டாக்டர். இவர் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். மேலும் அங்கு மருந்தகமும் நடத்தி வருகிறார். நேற்று இரவு சரவணன் கிளிக்கை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை அதனை திறக்க வந்த போது மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தனர்.

    இதனால் சரவணன் அதிர்ச்சி அடைந்தார் உள்ளி சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 65 ஆயிரத்தை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விசாரணை செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். 

    ×