search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • ரத்தன் டாடா இறந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீபோல பரவியது.
    • தேசத்தின் அடையாளமான ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழில் அதிபருமானவர் ரத்தன் டாடா உடல் நலக்குறைப்பாடு காரணமாக நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் இசை நிகழ்ச்சி நடுவே ரத்தன் டாடாவின் மறைவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பையில் உள்ள நெஸ்கோ திறந்தவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி இரவு நடத்தப்பட்டது. குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இசை நிகழ்ச்சியை கண்டுகளித்து கொண்டிருந்தனர். அப்போது ரத்தன் டாடா இறந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீபோல பரவியது.

    டாடாவின் மறைவை அறிந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்து இசை நிகழ்வை பாதியிலேயே நிறுத்தினர். பின்னர் அவருடைய படத்தை திரையிட்டு டாடாவின் மரண செய்தியை அறிவித்தபோது பொதுமக்களும் தங்கள் கொண்டாட்டாங்களை உடனடியாக நிறுத்தியபடி மவுனமாக இருந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டும் இறுதி மரியாதை செலுத்தினர். தேசத்தின் அடையாளமான ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

    • குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் அந்த வயதான ஜோடியும் பங்கேற்று இருந்தது.
    • இளையவர்கள் சுற்றி நின்று கைதட்ட மூத்த ஜோடி துள்ளித் துள்ளி தாண்டியா ஆடுகிறார்கள்.

    பண்டிகை என்றாலே எல்லோருக்கும் உற்சாகம் பெருக்கெடுக்கும். நவராத்திரி பண்டிகையில் ஒரு வயதான ஜோடி மகிழ்ச்சியாக தாண்டியா நடனம் ஆடி இளசுகளையே மிரள வைத்திருக்கிறார்கள். அவர்களின் நடனம் சமூக வலைத்தளத்தில் 2 நாளில் 80 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.

    குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் அந்த வயதான ஜோடியும் பங்கேற்று இருந்தது. விழாவில் உற்சாகமான இசையைக் கேட்டதும் அவர்களுக்குள் இளமை பெருக்கடுத்துவிட ஆனந்தத்தில் தாண்டியா ஆட ஆரம்பித்துவிட்டனர்.

    உடனே அக்கம்பக்கத்தில் இருந்த இளம் ஜோடிகள்கூட, தாங்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு மூத்த ஜோடியின் ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். இளையவர்கள் சுற்றி நின்று கைதட்ட மூத்த ஜோடி துள்ளித் துள்ளி தாண்டியா ஆடுகிறார்கள். இணையவாசிகளின் இதயங்களையும் கவர்ந்து வைரலானார்கள்.

    • வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.
    • போலீசார் படேலை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அகமதாபாத்:

    அகமதாபாத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை ஈவிரக்கமின்றி தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வத்வாவில் உள்ள தனியார் பள்ளியில் கணிதம் கற்பித்து வந்த அபிஷேக் படேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    வைரலாகும் வீடியோவில், மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கு, ஆத்திரத்தில் வரும் கணித ஆசிரியர் ஒரு மாணவனின் கையை முறுக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து வந்து மாணவர்கள் முன்பு நிறுத்தி கன்னத்தில் பலமுறை அறையும் காட்சிகள்  இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.

    வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு ஆசிரியரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து போலீசார் படேலை கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    • வாலிபர் ஒருவர் இந்த ரோபோ நாயை அண்மையில் வாங்கி பூங்காவில் இயக்கி பார்த்தார்.
    • வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்வைகளை அள்ளி வருகிறது.

    வருங்காலங்களில் எல்லாத்துறைகளிலும் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. எந்திரங்களின் பயன்பாடு ஏற்கனவே உள்ள நிலையில் மனித சிந்தனைகள் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் முயற்சியும் உள்ளது. நாய் உருவம் கொண்ட ரோபோக்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டுமின்றி ராணுவத்திலும் மேலை நாடுகள் பயன்படுத்துகின்றன.

    இந்தநிலையில் ஜப்பானில் வாலிபர் ஒருவர் இந்த ரோபோ நாயை அண்மையில் வாங்கி பூங்காவில் இயக்கி பார்த்தார். அப்போது அங்கே தன் எஜமானர்களுடன் வந்திருந்த செல்லப்பிராணி நாய்கள் ரோபோ நாயை பார்த்து பயந்து குரைத்தன.

    பின்னர் அதனிடம் இருந்து விலகி தெறித்து ஓடின. இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்வைகளை அள்ளி வருகிறது. 'நாய்கள் ஓடுவதுபோல் எந்திர மனிதர்களுக்கு மனித இனம் பயப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை' என்பதான கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தெற்கு சீனாவின் நான்னிங் நகரில் கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக பணியாளர்கள் அழுத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செப்டிக் டேங்க் குழாய் திடீரென வெடித்துள்ளது. குழாய் வெடித்ததில் 33 அடி உயரத்திற்கு எழுந்த மலக்கழிவுகள் தூக்கி வீசப்பட்டு, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது படிந்தது.

    இந்த கழிவு சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகளை முழுவதுமாக நனைத்தது. அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் மனித கழிவுகளில் நனையாமல் தப்பினர். ஆனால் வேகமாக கழிவுகள் வந்து அடித்ததில் காரின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்பகுதியை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இச்சம்பவத்தில் சேதமடைந்த காரின் டிரைவர் ஒருவர், எனது கார் மஞ்சள் நிறத்தில் உள்ளது. அது நாற்றம் வீசுகிறது. என்னால் அதை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்றார். மற்றொருவர் கோபமாக, "நான் பூவில் நனைந்திருக்கிறேன்" என்றார்.

    இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த வீடியோவை ஒரு மாணவர் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
    • வீடியோவை பார்த்த பலரும் மருத்துவ படிப்புக்கு இவ்வளவுதான் செலவா என வியந்து உள்ளனர்.

    டாக்டர் ஆக வேண்டும் என்பது மாணவர்கள் பலரது கனவாக உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் நீட் தேர்வு எழுதுகின்றனர். எனினும் டாக்டர் படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

    இவ்வாறு போட்டி போட்டு சேரும் மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த வீடியோவை ஒரு மாணவர் வெளியிட அது சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

    அந்த வீடியோவில் இந்தியாவின் முதன்மை மருத்துவ கல்லூரியான எய்ம்ஸ் மாணவர் விடுதியை சுற்றிக் காண்பித்தார். அப்போது அவர் கூறுகையில், விசாலமான படுக்கை, மேஜை, அலமாரி மற்றும் சுழலும் நாற்காலி போன்ற வசதிகளுக்கு மாதம் ரூ.15 வாடகை, 24 மணி நேர மின்சாரத்துக்கு மாதம் ரூ.5 மட்டுமே செலவாகிறது என பேசினார்.

    இதனை பார்த்த பலரும் மருத்துவ படிப்புக்கு இவ்வளவுதான் செலவா என வியந்து உள்ளனர்.



    • குட்டி பென்குயின் தற்போது பூங்காவின் முக்கிய அங்கமாக மாறி உள்ளது.
    • ‘பெஸ்டோ’ விளையாடி மகிழுவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் அன்பை பெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் பிரபல உயிரியல் பூங்கா உள்ளது. வனவிலங்குகள் மட்டுமின்றி டால்பின்கள், கடல் சிங்கம், நீர்நாய் போன்ற அரியவகை நீர்வாழ் மிருகங்களும் இங்கு உள்ளன.

    குறிப்பாக அந்த பூங்காவில் வடதுருவங்களில் உள்ளது போல பனிக்கட்டிகளால் ஆன நிலப்பரப்பை உண்டாக்கி பென்குயின்களை பரமாரித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அங்கு பென்குயின் ஒன்று புதிதாக பிறந்தது. 'பெஸ்டோ' என பெயரிட்டு பூங்கா ஊழியர்களை அதை கருத்துடன் பராமரித்து வந்தனர். அந்த குட்டி பென்குயின் தற்போது பூங்காவின் முக்கிய அங்கமாக மாறி உள்ளது.

    இயல்பை மீறி அதிக எடையுடன் கூடிய இந்த குட்டி பென்குயின் செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கிறது. வயது வித்தியாசம் எதுமின்றி சக பென்குயின்களுடன் 'பெஸ்டோ' விளையாடி மகிழுவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் அன்பை பெற்று வருகிறது.

    • பெட்டியின் சைடு பெர்த்தின் இரும்பு பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது.
    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை:

    ஜபல்பூர்- மும்பை கரிப்ரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை கசாரா ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது அந்த ரெயிலில் உள்ள G-17 பெட்டியின் சைடு பெர்த்தின் இரும்பு பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. இதைப்பார்த்து பயணிகள் பீதியில் உறைந்தனர். இதனால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கசாரா வழித்தடத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் இது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.


    Snake On A Train! "Gareeb rath mein ameer kahan se aa gaya ye?" (How has this rich one come to Gareeb Rath (name of train). The sense of humour of Indians is legendary?. Jokes apart, a snake found in Jabalpur-Mumbai Garib Rath Express. #snake #snakeVideo pic.twitter.com/xLP9T2A3cD



    • வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வலைத்தளவாசிகளின் பாராட்டை அள்ளி உள்ளார்.
    • வீடியோவில் தாய், 10 வயதுடைய மகளுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, அதில் தாத்தாவுக்கு கடிதம் எழுத கற்றுத் தருகிறார்.

    கடிதம் எழுதுவது கடந்த காலம். ஆனால் இது இ-மெயில், வாட்ஸ்-அப் காலம். இன்ஸ்டாவிலும், ஸ்னாப்சாட்டிலும் அரட்டை அடிக்கிறது இன்றைய குழந்தைகள். அவர்கள் கடிதம் எழுதிப்படிப்பது பள்ளிப் பாடத்தில் மட்டுமே. அது அவர்களுக்கு விடுமுறை கடிதம் எழுதுவதற்குத்தான் பெரிதும் பயன்படுகிறது.

    ஆனால் உறவுமுறையை வளர்க்க ஒரு காலத்தில் கடிதம் மட்டுமே இருந்தது, அது அளவில்லா மகிழ்ச்சிப் பெட்டகமாக பாதுகாக்கப்பட்டது என்பதை இன்றைய குழந்தைகள் அறிய மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கும், கடிதத்திற்கும் தொடர்பே இல்லை. அவர்கள் பயன்படுத்துவதும் இல்லை.

    இந்த நிலையில் ஒரு இந்திய பெண், தனது மகளுக்கு கடிதம் எப்படி எழுதுவது, அதை எப்படி அனுப்புவது என்பதை நேரடியாக விளக்கி மகளின் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வந்துள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வலைத்தளவாசிகளின் பாராட்டை அள்ளி உள்ளார்.

    வீடியோவில் தாய், 10 வயதுடைய மகளுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, அதில் தாத்தாவுக்கு கடிதம் எழுத கற்றுத் தருகிறார். பின்னர் இருவரும் தபால் நிலைய வாசலுக்கு வந்து இறங்குகிறார்கள். உள்ளே சென்று அஞ்சல் வில்லைகளை வாங்கி கடிதத்தில் ஒட்டுகிறார்கள். பின்னர் தபால் பெட்டிக்குள் கடிதத்தை சிறுமி போட்டுவிட்டு மகிழ்ச்சி புன்னகை பூக்கிறாள். அது மறுநாள் தாத்தாவுக்கு கிடைத்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்கிறாள். தாத்தா கடிதத்தை பிரித்து புன்னகையுடன் படிப்பதாக வீடியோ முடிகிறது. வீடியோவின் பின்னணியில் தாய் பேசும் காட்சி இணைக்கப்பட்டு உள்ளது. வீடியோ வைரலானது.


    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • திடீரென பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புனேயில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகராட்சி வாகனம் ஒன்று விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    55 வினாடிகள் ஓடும் வீடியோவில் சாலையில் நின்று கொண்டிருக்கும் மாநகராட்சியின் தண்ணீர் டேங்கர் ஒன்று மெல்ல நகர்ந்த போது ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பின்பக்க சக்கரங்கள் முதலில் விழுந்தது. அதன்பின் வாகனம் முழுவதும் பள்ளத்தில் விழுந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளத்தில் மூழ்கிய டேங்கரை மீட்டனர். திடீரென பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • உண்மையென்று நம்பிய ஆசிரியை பதறியடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடி வருவதுபோல வீடியோ தொடங்குகிறது.
    • மாணவர்கள் குழு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட இதுவரை 5.4 கோடி பேர் ரசித்து உள்ளனர்.

    மாணவப் பருவம் இனிமையானது. மாணவ குறும்புகள் ரசிக்க வைக்கக்கூடியதாக இருக்கும். பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் ஆசிரியையை கவுரவிக்க, வித்தியாசமாக இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் தனியார் பள்ளியில், ஆசிரியர் அறையில் இருக்கும் ஆசிரியையிடம் ஒரு மாணவர் வந்து, வகுப்பில் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வதாகவும், விரைந்து வந்து விலக்கும்படியும் கூறுகிறார். இதை உண்மையென்று நம்பிய ஆசிரியை பதறியடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடி வருவதுபோல வீடியோ தொடங்குகிறது.

    அவர் வகுப்பறைக்குள் நுழைந்து சண்டையிடுவதுபோல நடித்த ஒரு மாணவரை கையைப் பிடித்து இழுத்து விலக்கிவிட்டதும், திடீரென பட்டாசு வெடித்து கரவொலி எழுப்பப்படுகிறது. அவர்கள் ஆசிரியையக்கு வாழ்த்துச் சொல்லி பரிசு தருகிறார்கள். அப்போதுதான் அது சண்டையல்ல, தன்னை மகிழ்விக்க மாணவர்கள் நடத்திய நாடகம் என்பதை அறிந்த ஆசிரியை நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சுவிட்டு புன்னகை பூக்கிறார். மாணவர்கள் பரிசுப் பொருட்களை நீட்டுகிறார்கள்.

    மாணவர்கள் குழு இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட இதுவரை 5.4 கோடி பேர் ரசித்து உள்ளனர். பல லட்சம் பேர் 'லைக்' தெரிவித்து உள்ளனர்.

    • அவரது மார்பு மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.
    • தொலைக்காட்சியில் விவாதத்தை நடத்திய நடுவர் விவாதத்தை நிறுத்தி விளம்பரங்களை ஒளிப்பரப்பு செய்தார்.

    பிரேசிலில் மேயர் பதவிக்கான விவாதம் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்றுக்கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்ப்டட நாற்காலியைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுள்ளது. 16 வினாடிகளே ஓடும் வீடியோவில், வேட்பாளரான பாப்லோ மார்கல் தனது உரையை ஆற்றிக் கொண்டிருந்தபோது, ஜோஸ் லூயிஸ் டேடெனா என்பவர் திடீரென நாற்காலியால் தாக்குகிறார். இதனை சற்றும் எதிர்பாராத பாப்லோ மார்கலுக்கு விலா எலும்பு முறிவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மார்பு மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.

    இதனிடையே தொலைக்காட்சியில் விவாதத்தை நடத்திய நடுவர் விவாதத்தை நிறுத்தி விளம்பரங்களை ஒளிப்பரப்பு செய்தார். பின்னர் பாப்லோ மார்கல் இல்லாமலே விவாதம் தொடர்ந்தது.

    ×