என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mysterious"

    • மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.
    • காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணி(வயது 49).ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மோகனூரில் நிலம் வாங்கியது சம்பந்தப்பட்ட ஒருவருக்கு கொடுப்பதற்காக நேற்று மதியம் பரமத்தி வேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.

    பணம் ரூ.20 லட்சத்தை காரிலேயே வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று உடையை மாற்றிக் கொண்டு மோகனூர் செல்வதற்காக மீண்டும் காரை எடுக்க வந்தார். அப்போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பாலசுப்பிரமணி பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பாலசுப்பிரமணி வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு காரில் ஏறி வீட்டுக்கு வந்து காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் செல்லும் வரை அவரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    ஸ்கூட்டரில் ஒரு நபரும், மோட்டார் பைக்கில் 2 நபரும் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணி உடைமாற்ற வீட்டிற்குள் சென்ற உடன் கண் இமைக்கும் நேரத்தில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்து உடைத்து காருக்குள் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

    பட்டபகலில்ரூ.20 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். மர்ம நபர்கள் கார் கண்ணா டியை உடைக்கும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம்.
    • சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்மநபர்களிடம் கொடுத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60). சம்பவத்தன்று இவர் மயிலாடுதுறை சென்று விட்டு தஞ்சைக்கு பஸ்சில் வந்தார்.‌

    பின்னர் தற்காலிக மார்க்கெட் அருகே உள்ள ஏ.ஓய். நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், சரஸ்வதியின் அருகில் மோட்டார் சைக்கிளில் நிறுத்தினர்.

    இங்கு திருட்டு சம்பவம் அதிகமாக நடக்கிறது. இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு செல்லாதீர்கள். உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம் என சரஸ்வதியிடம் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த மர்ம நபர்கள் நகைகளுக்கு பதிலாக ஒரு கல்லை அந்தப் பையில் மறைத்து வைத்து கொடுத்தனர். அந்தப் பையுடன் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி அவிழ்த்து பார்த்த போது நகைகளுக்கு பதிலாக கல்லை ஏமாற்றி வைத்து தன்னை மர்மநபர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த தே.மு.தி.க. நிர்வாகி மர்மச்சாவால் குற்றவாளியை கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி 2 சக்கர வாகனத்தில் சென்ற கலையரசன் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். தே.மு.தி.கவில் உறுப்பினராக உள்ளார். மேலும் மாவட்ட கவுன்சிலர் கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராகவும் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி 2 சக்கர வாகனத்தில் சென்ற கலையரசன் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் 31-ந்தேதி பூலாவரி ஏரியில் கலையரசன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் பிணத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கலையரசன் உடலில் காயங்கள் இருப்பதை அறிந்த பெற்றோர் இது குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில், தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் கமலா கருப்பண்ணன், கலையரசனின் தந்தை சீனிவாசன் , தாய் புஷ்பா உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    45 நாட்கள் ஆகியும் கலையரசன் மர்மமான இறப்பு குறித்து காவல்துறையினர் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. பணத்திற்காக சிலர் கொலை செய்திருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருத்தாசலம் அருகே முன் விரோதத்தில் மர்ம நபர்களால் முயல் கழுத்தை அறுக்கப்பட்டது.
    • காலையில் கண்விழித்த பிறகு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லபிராணிகளை பார்த்த மணிமாறன் அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ராமச்சந்திரன் பேட்டை ராமன் தெருவை சேர்ந்த மணிமாறன் . இவர் வீட்டில் முயல், கோழி என இருபதிற்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் வளர்த்து வந்தார். நேற்று இரவு மணிமாறன் மற்றும் அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் வீட்டில் வளர்க்கப்பட்ட முயல் மற்றும் கோழிகளின் கழுத்து அறுத்து போட்டுள்ளனர். காலையில் கண்விழித்த பிறகு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லபிராணிகளை பார்த்த மணிமாறன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மணிமாறன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் செயினை பறித்து தப்பி சென்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மங்களநாயகி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி மங்களநாயகி (வயது 51).

    இவர் நேற்று இரவு தஞ்சையில் உள்ள ஒரு பல் மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    வ.உ.சி. நகரில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மங்களநாயகி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    அதிர்ச்சியடைந்த மங்களநாயகி திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விமானங்கள் மற்றும் கப்பல்கள் மாயமாகும் பெர்முடா முக்கோணத்தின் மர்மம் தொடர்பாக பிரிட்டன் கடலியல் ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மர்மத்தினை உடைக்கும் விதமாக உள்ளது. #BermudaTriangle
    லண்டன்:

    பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் உள்ள மர்மமான கடல் பகுதி. பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் முக்கோணப்பகுதி தான் பெர்முடா முக்கோணம்.

    கடந்த 500 வருடங்களில் 50 கப்பல், 20 விமானம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் இந்த முக்கோணத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி  பெர்முடா முக்கோணத்திற்கு மேல் பறந்த அமெரிக்காவின் 5 போர் விமானங்கள் மாயமான பின்பு தான், பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் உலகம் முழுக்க பரவியது. 

    கடைசியாக கடந்த ஆண்டு 4 பேருடன் சிறிய ரக விமானம் ஒன்று காணாமல் போனது. அங்கே ஆண்டொன்றுக்குச் சராசரியாக 4 விமானங்கள் முதல் 25 க்கும் மேற்பட்ட படகுகள் வரை காணாமல் போகின்றன.  அவை ஏன் காணாமல் போகின்றன? எங்கே அவற்றை மீட்டெடுப்பது என்பது குறித்து இதுவரையிலும் கண்டறியப்படாமலே இருந்து வந்தது. 

    பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தாண்டி வான்வெளிகளையும், வேற்று கிரகங்களையும் அலசி பார்க்க முடிந்த நமது அதிநவீன அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியால், பூமியில் சுமார் 7,00,000 சதுர கிலோமீட்டர்களுக்கு மட்டுமே பரந்து விரிந்து கிடக்கும் கடல்பகுதியான பெர்முடா முக்கோணத்தை பற்றிய சரியான தெளிவை பெற முடியாமல் இருந்து வந்தது.



    விஞ்ஞானிகள் ஒரு பக்கம் மண்டையை உடைத்து யோசித்து கொண்டிருந்தாலும், அங்கு மர்ம சக்தி உள்ளது அதனாலே, கப்பல் மற்றும் விமானங்கள் காணாமல் போகின்றன என கதை கட்டியவர்களும் உண்டு. அறிவியலுக்கு விஞ்சியது உலகில் ஒன்றும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பிரிட்டனை சேர்ந்த கடலியலாளர்கள் இந்த மர்மத்தை உடைத்துள்ளனர். 

    டாக்டர் சைமன் போக்ஸால் என்பவரது தலைமையிலான குழு பெர்முடா முக்கோணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பெர்முடா முக்கோண கடல் பகுதியில் மற்ற கடல் பகுதிகளை விட மிகப்பெரிய அலைகள் எழுவதே கப்பல்கள் மூழ்குவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 100 அடி (30 மீட்டர்) உயர்த்துக்கு இயல்பாகவே அந்த பகுதியில் அலைகள் எழும்புகின்றன. 100 அடி உயரம் என்றால் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அந்த உயரத்தை எட்டும் வண்ணம் ராட்சச அலைகள் வெகு சாதாரணமாக முக்கோணப்பகுதியில் அடிக்கும். 

    மற்ற கடல் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட சீற்றத்தின் போது கூட இந்த அளவுக்கு அலைகள் உயர எழுந்தது இல்லை. ஆனால், பெர்முடா முக்கோண பகுதியில் எப்போதும் இதே உயரத்தில் அலை அடிக்கிறது. இந்த அலைகள் மத்தியில் கப்பல் மற்றும் படகுகள் செல்வது சாத்தியமே இல்லை. இதனால், அங்கு செல்லும் அனைத்துமே மூழ்குகின்றது.

    கடந்த 1995-ம் ஆண்டு முக்கோண பகுதியில் அலைகள் 18.5 மீட்டர் அளவுக்கு வீசியது சேட்டிலைட்டில் பதிவாகியிருந்தது குறிப்பிடதக்கது. மற்ற கடல் பகுதியை விட இந்த பகுதியில் கடல் நீரில் உள்ள அழுத்தம் அதிகமாக இருப்பது படகுகள் மற்றும் கப்பல்கள் உடைவதற்கு காரணமாக உள்ளது.



    12 மீட்டர் உயரத்தில் வீசக்கூடிய அலைகள் 8.5 பிஎஸ்ஐ அழுத்தத்தை கொண்டிருக்கும். இதனால், 21 பிஎஸ்ஐ அழுத்தத்தை தாங்கும் விதமாக படகு மற்றும் கப்பல்கள் கட்டப்படுகின்றன. ஆனால், பெர்முடா முக்கோணப்பகுதியில் உள்ள கடல் அலையின் அழுத்தம் 140 பிஎஸ்ஐ அளவாகும்.

    சராசாரி கடல் அலை அழுத்தத்தை விட பெர்முடா முக்கோணத்தில் 180 சதவிகிதம் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தமே கப்பல் மற்றும் படகுகள் நொறுங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. எவ்வளவு உறுதியாக கப்பல் கட்டினாலும் பெர்முடா முக்கோணத்தில் உள்ள அழுத்ததை தாங்க முடியாது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெர்முடா முக்கோண கடற்பரப்பில் நிலவும் சீதோஷன நிலை விமானங்கள் பறப்பதற்கு முற்றிலும் சரிவராத பகுதி எனவும் கூறப்பட்டுள்ளது.

    அலைகள் உயரமாக எழுவதற்கும் அழுத்தம் அதிகமாக இருப்பதற்கும் என்ன காரணம் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தின் இயல்பு காரணமாகவே மேற்கண்டவை நடக்கிறது. அப்பகுதியில் நிலவும் வானிலை மாற்றங்களும், கடலுக்கடியிலான நில அமைப்புமே காரணம் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
    ×