என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்மச்சாவு"

    • கண்ணன்ட அள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் முருகவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • இதனை பார்த்த அந்த வழியாக ெசன்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கூச்சூர் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 49). இவர் கண்டன்னஅள்ளி பகுதியில் மதுக்கடை பார் நடத்தி வந்தார். இவரது மனைவி காயத்ரி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று இரவு பாரை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை.

    இந்த நிலையில் கண்ணன்ட அள்ளி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் முருகவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இறந்து கிடந்த முருகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதையில் சுற்றித்திரிந்த பள்ளி ஆசிரியர் மர்மச்சாவு
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் வேலுச்சாமி (வயது 32). இவர் கொன்றைக்காடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் கடந்த 12-ந்தேதி முதல் பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துவிட்டு மது போதையில் ஆலங்குடி பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஆலங்குடி அரசமரம் அருகில் உள்ள சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். நகரின் மையப்பகுதியில் இறந்து கிடந்ததால் இன்று அதிகாலை மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டடர் அழகம்மை மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இறந்து கிடந்தது மது போதையில் சுற்றித்திரிந்த ஆசிரியர் வேலுச்சாமி என்பது உறுதியானது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை 

    • வேலூர் கோர்ட்டுக்கு வந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர்கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் தினகரன். துணை கலெக்டரான இவர் தற்போது பணியிடை நீக்கத் தில் உள்ளார். தற்போது சென் னையில் வசித்து வரும் இவர் இந்த வழக்கு விஷயமாக வேலூர் கோர்ட்டுக்கு ஆஜ ராக சென்னையில் இருந்து தனது சொந்த காருக்கு ஆக் டிங் டிரைவராக சென்னை பாடியில் உள்ள பால்பாண்டி (வயது 55) என்பவரை நிய மித்து சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து போளூரில் உள்ள தனது வீட்டில் தங்கி னார். வீட்டு மாடியில் பால் பாண்டி தங்கினார்.

    இந்த நிலையில் இரவு பால் பாண்டி போளூர் பஸ் நிலை யம் வந்து ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு, நடந்து வந்த போது குடிபோதையில் சாலையில் விழுந்ததில், தலை யில் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கு சிப்பந்தி பழனி என்பவர் அவரை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தார். சிகிச்சை பெற்ற பின் பால்பாண்டி தினகரன் வீட்டு மாடியில் படுத்து தூங்கினார்.

    நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் கதவைத் தட்டி யும் திறக்கப்படாததால் தினக ரன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பால் பாண்டி இறந்து கிடந்தார்.

    இதையடுத்து தினகரன் சென் னையில் உள்ள பால்பாண்டி யின் மகன் கணபதி பாண்டிய னுக்கு தகவல் கூறினார். இதுகு றித்து கணபதி பாண்டியன் போளூர் போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் இன்ஸ்பெக் டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இது சிவகலாவுக்கு தெரிய வரவே கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
    • தொட்டி குடிசை கிராமத்திற்கு கொண்டு வந்து கடந்த 8 தேதி அடக்கம் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தொட்டி குடிசை கிராமத்தைச் சேந்தவர் ரவீந்திரன் (வயது 45), இவரது மனைவி சிவகலா (வயது 38). இவர்களுக்கு சிவரஞ்சனி (வயது 19) என்ற மகளும், சிலம்பரசன் (வயது 17) என்ற மகனும் உள்ளனர், ரவீந்திரன் சென்னை குமணன்சாவடியில் உளள தனியார் பள்ளியில் டிரைவராக பணிசெய்வதால், இவர்கள் அனைவரும் சென்னை காட்டு ப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். .அதே பள்ளியில் அட்டெண்டராக பணிபுரியும் மாங்காடு பகுதியை சேர்ந்த பெண்ணுடன் ரவீந்திரனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது சிவகலாவுக்கு தெரிய வரவே கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ந்தேதி சிவரஞ்சனி கல்லூரிக்கு சென்று விட்டார். சிலம்பரசன் வெளியே சென்று விட்டார். கல்லூரி முடித்து மாலை 3 மணிக்கு சிவரஞ்சனி வீட்டுக்கு வந்தபோது தனது தாய் சிவகலா மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்களை உதவிக்கு அழைத்த சிவரஞ்சனி, தனது தாயை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். சிவகலாவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து சிவகலாவின் உடலை ரவீந்திரனின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தொட்டி குடிசை கிராமத்திற்கு கொண்டு வந்து கடந்த 8 தேதி அடக்கம் செய்தனர்.

    இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் சென்னை பூவிருந்தவல்லி போலீஸ் நிலையத்தில் சிவரஞ்சனி புகார் அளித்தார். புகாரின் பேரில் பூவிருந்தவல்லி போலீசார் வழக்கு பதிவு ரவீந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்,, புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ்-க்கு சென்னை போலீசார் தகவல் அனுப்பினர். அதன் பேரில் தாசில்தார் பாஸ்கரதாஸ் விழுப்புரம் முண்டிய ம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பிணைத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தர விட்டார். அதன்படி இன்று காலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் மதுவரதன், சண்முகம் தலைமையிலான மருத்துவ குழு தொட்டி குடிசை கிராமத்திற்கு வந்தனர். திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பாஸ்கரதாஸ், சென்னை பூவிருந்தவல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் முன்னிலையில் சிவகலாவை புதைத்த இடத்திலிருந்து உடலை தோண்டியெடுத்து அங்கேயே அமைக்கப்பட்ட தற்காலிக கூடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வட்டாட்சியர் வழியாக சென்னை போலீ சாரிடம் வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்த கவலறிந்து சுடுகாட்டிற்கு வந்த கிராம மக்களை திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் சுடுகாட்டினுள் விடாமல் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி அடுத்த வலியங்காடு ஓங்காளியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார்.
    • இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் செம்மண் திட்டு அருகே சாலையோரத்தில், தலையில் ரத்த காயங்களுடன் லோகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி அடுத்த வலியங்காடு ஓங்காளியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் லோகநாதன் (வயது 31). பிளம்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில், வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் லோகநாதன் வெளியே சென்றுள்ளார். ஆனால் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

    பிணமாக மீட்பு

    இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் செம்மண் திட்டு அருகே சாலையோரத்தில், தலையில் ரத்த காயங்களுடன் லோகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.

    இது குறித்த தகவலின் பேரில், இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த லோகநாதன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக இறந்து போன லோகநாதனின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொலையா?

    இதில், லோகநாதன் குடும்பத்தினருக்கு ஏற்கனவே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாகவும், முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறினர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லோகநாதன் எவ்வாறு இறந்தார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
    • தொட்டம் புதூர் பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மடம் பகுதியை சேர்ந்த கோவிந்தன். இவரது மகன் மிதுன்குமார் (வயது28). இவர் ஒகேனக்கல் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் பென்னாகரம் அருகே உள்ள பெரிய தொட்டம் புதூர் பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எவராவது அடித்து கொல்லப்பட்டாரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது கொல்லன் விளை. இங்கு புகழ் பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வார்கள். இன்று காலையும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் தங்களது பணிகளுக்காக கோவில் வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது கோவில் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.

    இதற்கிடையில் சாலை யில் கிடந்த பெண் தலை யில் காயம் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர்.

    தக்கலை போலீசார், மருத்துவக் குழுவுடன் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள், காயத்துடன் கிடந்த பெண்ணை பரிசோ தித்த போது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    தொடர்ந்து பெண் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பெண் வாகன விபத்தில் இறந்தாரா? அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரமும் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருமங்கலம் அருகே 14 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.
    • தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.கோபாலபுரத்தை சேர்ந்தவர் மார்கழி வாசகன் (வயது41). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் தனது 43-க்கும் மேற்பட்ட ஆடுகளை சம்பவத்தன்று தனது வீட்டு அருகே உள்ள கொட்டத்தில் அடைத்துள்ளார். அங்கு ஆடுகளுக்கு கழனி தண்ணீர் வைத்துள்ளனர். கழனி தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் 14 ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி இறந்துவிட்டது

    இதனால் அதிர்ச்சியடைந்த மார்கழிவாசகன் இச்சம்பவம் குறித்து வில்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆடுகள் எப்படி இறந்தது? தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

    • சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்த வர் தனலட்சுமி. இவரது மகள் அருகே சுகந்தி. இவர் ஆற்காடு தாஜ்புரா கூட்ரோட்டில் கணவர் பாலாஜியுடன் வசித்து வந்தார். பாலாஜி செங்கல் பட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சுகந்தி ஆற்காடு தனியார் பள்ளியில் ஆசிரியையாகவேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

    பாலாஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் சுகந்தியை அடிக்கடி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 4-ந் தேதி சுகந்தியை அவரது தாய் தனலட்சுமி, மருமகன் பாலாஜியிடம் சொல்லிவிட்டு மழையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மழையூரில் இருந்து சுகந்தி வேலைக்கு சென்றுள்ளார்.

    கடந்த 11-ந்தேதி பள்ளியில் ஆண்டு விழா நடப்பதாக சுகந்தி கூறிவிட்டு சென்றுள்ளார். இரவில் ஊருக்கு வர பஸ் இல்லாததால் மற்றொரு பஸ்சில்வந்து கணியனூரில் இறங்கி உள்ளார்.

    அவரை ஏழுமலை என்பவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் சாப்பிட்டுவிட்டு குழந் தையுடன் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் சுகந்தி மயங்கிய நிலையில் இருந்தார்.

    அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.

    இதுகுறித்து சுகந்தியின் தாய் தனலட்சுமி கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருக்கிறார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    அவினாசி :

    அவிநாசி அருகே தெக்கலூரில் நாய்கள் கடித்த நிலையில் கிடந்த ஆண் உடலை மீட்டு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தெக்கலூா்-கோவை சாலையில் தனியாா் நூற்பாலைக்கு அருகே உள்ள வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு நாய்கள் கடித்த நிலையில் கிடந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இறந்த நபா் யாா், அவா் கொலை செய்யப்பட்டரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • முனியப்பன் வீட்டின் வாசலில் நெற்றியில் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கள்ளாங்காட்டானூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 65). கூலித்தொழிலாளி.

    சம்பவத்தன்று முனியப்பனின் மனைவி தோட்டத்திற்கு சென்று விட்டார். இவர்களது 2 மகன்களும் வேலைக்காக வெளியூர் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் முனியப்பன் வீட்டின் வாசலில் நெற்றியில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த மனைவி மற்றும் மகன்களும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியப்பன் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மதிகோண்பாளையம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பனை யாராவது அடித்து விட்டு வீட்டின் வாசலில் போட்டு சென்று விட்டனரா? அல்லது அவர் அதிகளவில் மது குடித்து விட்டு வீட்டு வாசலில் மயங்கி கிடந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி கிணற்றின் அருகில் அஜீத்குமாரின் செருப்பு, செல்போன் ஆகியவை கிடந்தது.
    • கிணற்றில் அஜீத்குமார் நீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஏர்ரபையனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத்குமார் (வயது23). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அண்ணாத்துரை என்பவருக்கு சொந்தமான விவசாயி கிணற்றின் அருகில் அஜீத்குமாரின் செருப்பு, செல்போன் ஆகியவை கிடந்தது.

    இது குறித்து பென்னாகரம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் அஜீத்குமார் நீரில் முழ்கி இறந்தது தெரியவந்தது. அவரை உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×