என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே முன் விரோதத்தில் முயல்  கழுத்தை அறுத்த மர்ம நபர்கள்
    X

    விருத்தாசலம் அருகே முன் விரோதத்தில் முயல் கழுத்தை அறுத்த மர்ம நபர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருத்தாசலம் அருகே முன் விரோதத்தில் மர்ம நபர்களால் முயல் கழுத்தை அறுக்கப்பட்டது.
    • காலையில் கண்விழித்த பிறகு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லபிராணிகளை பார்த்த மணிமாறன் அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ராமச்சந்திரன் பேட்டை ராமன் தெருவை சேர்ந்த மணிமாறன் . இவர் வீட்டில் முயல், கோழி என இருபதிற்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் வளர்த்து வந்தார். நேற்று இரவு மணிமாறன் மற்றும் அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் வீட்டில் வளர்க்கப்பட்ட முயல் மற்றும் கோழிகளின் கழுத்து அறுத்து போட்டுள்ளனர். காலையில் கண்விழித்த பிறகு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லபிராணிகளை பார்த்த மணிமாறன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மணிமாறன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×