search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் ரியல் எஸ்டேட் அதிபரின் காரில்   ரூ.20 லட்சம் கொள்ளையடித்த   மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை
    X

    பரமத்தி வேலூர் ரியல் எஸ்டேட் அதிபரின் காரில் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை

    • மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.
    • காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணி(வயது 49).ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மோகனூரில் நிலம் வாங்கியது சம்பந்தப்பட்ட ஒருவருக்கு கொடுப்பதற்காக நேற்று மதியம் பரமத்தி வேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.

    பணம் ரூ.20 லட்சத்தை காரிலேயே வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று உடையை மாற்றிக் கொண்டு மோகனூர் செல்வதற்காக மீண்டும் காரை எடுக்க வந்தார். அப்போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பாலசுப்பிரமணி பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பாலசுப்பிரமணி வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு காரில் ஏறி வீட்டுக்கு வந்து காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் செல்லும் வரை அவரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    ஸ்கூட்டரில் ஒரு நபரும், மோட்டார் பைக்கில் 2 நபரும் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணி உடைமாற்ற வீட்டிற்குள் சென்ற உடன் கண் இமைக்கும் நேரத்தில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்து உடைத்து காருக்குள் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

    பட்டபகலில்ரூ.20 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். மர்ம நபர்கள் கார் கண்ணா டியை உடைக்கும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×