search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pulyotharai"

    • அ.தி.மு.க. மாநாட்டு புளியோதரை விவகாரத்தில் அஷ்டலட்சுமியே நேரில் வந்தாலும் குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. வீர வரலாற்றில் எழுச்சி மாநாடு கடந்த 20-ந் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டு வெற்றிக்காக உழைத்த மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களுக்கு பாராட்டு விழாவும், சிறப்பு அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, பீடா ஆகிய வற்றுடன் இரவு விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா கட்டி காத்த இயக்கத்தை இன்றைக்கு நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமையேற்று நடத்தி வருகிறார்.

    மதுரை மண்ணில் முதல் மாநாட்டை நடத்தி தி.மு.க. விற்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி திகழு கிறார். இந்த ஆட்சி எப்போது முடியும். மு.க.ஸ்டாலின் எப்போது வீட்டுக்கு செல்வார் என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

    விரைவில் தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி யார் பதவி ஏற்பார். அதற் காக நாம் அயராது உழைக்க வேண்டும். இன்றைக்கு 2 கோடி உறுப்பினர்களை கொண்ட மகத்தான இயக்க மாக அ.தி.மு.க. உருவெடுத்து உள்ளது. வருகிற பாராளு மன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெரும் வகை யில் இந்த மதுரை மாநாடு நமக்கு முதல் புள்ளியாக அமைந்திருக்கிறது .

    மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் திரண்டனர். பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆற்றிய வீர உரை தமிழக அரசியலில் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியிலும் பெரும் வர வேற்பு பெற்றுள்ளது.

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு இந்திய அரசியல் வரலாற்றில் முக்கி யத்துவம் பெற்றுள்ளது அந்த அளவுக்கு பல லட்சம் மக்கள் குவிந்து மதுரையில் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய எழுச்சி அலையை உரு வாக்கி தந்துள்ளனர்.

    அஷ்டலட்சுமி

    மாநாட்டில் தொண்டர்க ளுக்கு பசியாற உணவு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் சிறப்பாக ஏற்பாடு செய்தார். 300 கவுண்டர்களில் உணவு வழங்கப்பட்ட நிலையில் ஒரு கவுண்டரில் 10 அண்டா புளியோதரை மீதமானதை பெரிதாக பேசுகிறார்கள் குறை சொல்பவர்கள் என்றைக்குமே குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அதை பெரிது படுத்த தேவை யில்லை.

    அஷ்டலட்சுமியே நேரில் வந்து காட்சி அளித்தாலும் மூக்கு சரியில்லை, முடி சரியில்லை என்று குற்றம் கண்டுபிடித்து குறை கூறு பவர்கள் தமிழகத்தில் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறார்கள்.

    எனவே அ.தி.மு.க.வின் வெற்றி மாநாட்டை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் இது போன்ற நயவஞ்சக செயலை நாம் பெரிது படுத்தாமல் அ.தி.மு.க. மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் ஏறும் வகை யில் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராட்டு கூட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ×