என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டை திருடி விற்க முயன்ற திருடன் கைது

- திருடிய ஆட்டை சந்தையில் விற்கமுயன்ற திருடன் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்
- அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாப்பாபட்டி மேலக்கொட்டம் அம்பலக்காரர்த் தெருவை சேர்ந்த மணி மனைவி சுமதி (வயது 42). இவர் தனது வீட்டில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார் தனது ஆடுகளுக்கு இரவு உணவு மற்றும் தண்ணீர் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார் அடுத்த நாள் காலை ஆடுகளை பார்த்த போது அதில் ஒரு கிடா ஆட்டை காணவில்லை பல்வேறு இடங்களில் தேடி கிடைக்காததால் தொட்டியம் காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தொட்டியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரேசன் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தொட்டியம் அருகே உள்ள செவ்வந்திப்பட்டியில் நடைபெறும் ஆட்டு சந்தைக்கு முசிறி சிந்தாமணித் தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் மனோஜ் குமார் (36)என்பவர் தான் திருடிய ஆட்டை கொண்டு வந்து விற்க முற்பட்டார். அப்போது விசாரணை செய்ததில் மனோஜ்குமார் விற்க வந்த ஆடு சுமதி என்பவரிடம் திருடிய ஆடு என்பது கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனோஜ் குமார் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.