விழுப்புரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் 65 ஆயிரம் திருட்டு

சரவணன் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் 65 ஆயிரம் திருட்டு
Published on

விழுப்புரம்:

விழுப்புரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் ரூ. 65 ஆயிரம் திருட்டு போனது.  விழுப்புரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன் (50). டாக்டர். இவர் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். மேலும் அங்கு மருந்தகமும் நடத்தி வருகிறார். நேற்று இரவு சரவணன் கிளிக்கை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை அதனை திறக்க வந்த போது மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தனர்.

இதனால் சரவணன் அதிர்ச்சி அடைந்தார் உள்ளி சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 65 ஆயிரத்தை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விசாரணை செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com