search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல்"

    • தன்னைப் பார்த்து குறைத்த நாயை பார்த்து தானும் குறைக்கும்விதமாக குரல் எழுப்பியுள்ளான்
    • சிறுவனை தரையில் தூக்கி வீசி, காலால் எட்டி மிதித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் தனது வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்ததாக 5 வயது சிறுவனை நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 சிறுவர்கள் டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சிறுவர்களைப் பார்த்து நாய் குறைக்கத் தொடங்கியுள்ளது.

    அதில் ஒரு 5 வயது சிறுவன் நாய் தன்னை பார்த்து குறைப்பதுபோல் தானும் நாயை பார்த்து குறைக்கும்விதமாக குரல் எழுப்பியுள்ளான். தனது செல்லப் பிராணி கேலிசெய்யப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாத நாயின் ஓனர், சிறுவன் என்றும் பார்க்காமல் வெறி பிடித்ததுபோல் அவனை பிடித்து சரமாரியாக அடித்துள்ளார். சிறுவனை தரையில் தூக்கி வீசி, காலால் எட்டி மிதித்துள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சிறுவனை தாக்கிய நாய் ஓனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசும் தெரிவித்துள்ளது.

    • வகுப்பறை உள்ளே நுழைந்த ஆசிரியர் அந்த மாணவனைக் கூப்பிட்டு சட்டையை ஏன் டக்-இன் செய்யவில்லை என்று கேட்கிறார்.
    • போலீஸ் முன்னிலையிலே ஆசிரியரை சிறுவனின் பெற்றோர் தாக்கினர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் பள்ளியொன்றில் 6 வகுப்பு மாணவன் [11 வயது] சட்டையை இன்- பண்ணி வரவில்லை என்று ஆசிரியர் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், வகுப்பறை உள்ளே நுழைந்த ஆசிரியர் அந்த மாணவனைக் கூப்பிட்டு சட்டையை ஏன் டக்-இன் செய்யவில்லை என்று கேட்கிறார். அந்த சிறுவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சிறுவனை கன்னத்தில் அறைந்து சரமாரியாகத் தாக்கியது பதிவாகியுள்ளது.

    அன்றைய தினம் வீட்டுக்கு வந்த சிறுவன் நடந்ததை பெற்றோரிடம் கூறிவே உடனே மருத்துவமனைக்கு அவனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுவனின் செவிப்பறை [eardrum] நிரந்தரமாகச் சேதமடைந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி நடவடிக்கை எடுக்காததை அடுத்து போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் போலீஸ் முன்னிலையிலே ஆசிரியரை சிறுவனின் பெற்றோர் தாக்கினர்.இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது.

    • லெஸ்டர் கடீல் என்ற நபர் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் புதிதாக பஸ் சேவையை தொடங்கியிருந்தார்
    • பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கர்நாடகாவில் இஸ்ரேல் என்ற பெயரில் ஓடிய தனியார் பஸ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரில் மூட்பித்ரி[Moodbidri]-முல்கி [Mulki] ரூட்டில் தனியார் டிராவல்ஸ் பஸ் ஒன்றின் பெயர் இணையத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்தது.

    அதாவது லெஸ்டர் கடீல் [Lester Kateel] என்ற நபர் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரில் புதிதாக பஸ் சேவையை தொடங்கியிருந்தார். 12 வருடமாக இஸ்ரேலில் வேலை பார்த்த லெஸ்டர் கடீல் அதை நினைவுகூரும் விதமாக இஸ்ரேல் டிராவல்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். ஆனால் இஸ்ரேல் என எழுதப்பட்டிருக்கும் பஸ்ஸின் புகைப்படம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் விட்டால் போதும் என்று தனது பஸ்ஸின் பெயரை கடீல் மாற்றியுள்ளார்.

    பாலஸ்தீன நகரங்களின் மீது கடந்த 1 வருட காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை காசாவில் மசூதி மற்றும் பள்ளியின் மீது நடந்த தாக்குதலில் 26 பேர் பலியானார்கள்.

    மேலும் லெபானானிலும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த சூழலில் இஸ்ரேல் டிராவல்ஸ் என்று பெயர் வைப்பது பலரின் மனதையும் புண்படுத்தும் வகையில் உள்ளதாக இருப்பதால் கடீலுக்கு கண்டங்கள் எழுந்தது.

    எனவே இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயரை ஜெருசலேம் டிராவல்ஸ் என்று மாற்றியுள்ளார் ஓனர் கடீல். ஜெருசலேம் என்பது புனிதமான இடமாக கருதப்படுவதால் யாருக்கும் படிப்பில்லை என்ற வகையில் அவர் இந்த பெயர் மாற்றத்தை செய்துள்ளார்.

     

    • கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து வைத்தார்
    • டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார்

    பிரிட்டனில் திருடப் போன வீட்டில் கூட்டிப் பெருக்கி, சாப்பாடு சமைத்து, துணிதுவைத்து காயப்போட்டுவிட்டு தப்பிய பலே திருடன் பற்றிய உண்மை வெளிவந்துள்ளது. பிரிட்டனில் கார்டிப் [Cardiff] நகரில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக டாமியன் வோஜ்னிலோவிச் [Damian Wojnilowicz] என்ற 36 வயது திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.

     

    பெண் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து நுழைந்த டாமியன், வீட்டில் சேர்ந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, சமையலறை, கழிவறையில் உள்ள பொருட்களைச் சீராக அடுக்கி வைத்து, கடையில் வாங்கி வைத்திருந்த பலசரக்கு பொருட்களை பிரிட்ஜில் அடுக்கி வைத்து , கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்து அதைக் காயப்போட்டு விட்டுச் சென்றுள்ளார்.

     

    வீட்டை விட்டு வரும்போது, 'டோன்ட் வொரி, பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்' என்று எழுதி வைத்துவிட்டும் வந்துள்ளார். வீட்டில் வசித்து வந்த அந்தப்பெண் திரும்பிவைத்தும் இதைப் பார்த்து அதிர்ந்துபோனார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபின், திருடனின் வினோத செய்கையால் பயந்து தனது வீட்டில் வசிக்காமல் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.

    இந்த சம்பவம் ஜூலை 16 ஆம் தேதி நடந்த நிலையில் ஒருவாரம் கழித்து ஜூலை 26 ஆம் தேதி மற்றொரு வீட்டில் திருடும்போது டாமியன் பிடிபட்டுள்ளார். டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார். இதுதொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து வரும் வேலையில் இந்த விசித்திர திருடனின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

    • பாகிஸ்தானில் இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜாகிர் நாய்க் ஆச்சார்யரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்ல வந்தார்.

    தொலைக்காட்சி நேரலைகளில் எதிரெதிர் கருத்து கொண்டவர்கள் காரசாரமாக விவாதிப்பதை பார்த்திருப்போம். சில நேரங்களில் அவை வார்த்தைப் போராக வெடித்து கைகலப்பாக மாறும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது. அப்படி ஒரு விவாத நிகழ்ச்சி அடிதடியில் முடிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆச்சார்யா விக்ரமாதித்யா என்ற அந்த உள்ளூர் பிரபலம், நாங்கள்[இந்து மாதத்தில்] அனைவரையும் மனிதர்களாக மாற்ற சொல்லித் தருகிறோம், மிருகங்களாக மாற்ற அல்ல.

    ஒரு மனிதன் மற்றொருவரிடம் எப்போதும் தவறாக நடக்கவே கூடாது என்று பேசிக்கொண்டிருந்தார் . அப்போது எதிர் விவாதம் செய்யும் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாய்க் உடனே அவரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்லி முடிக்கும் முன்னர் அவர் மீது பாய்ந்த ஆச்சார்யா விக்ரமாதித்யா கன்னத்தில் அரைந்து சரமாரியாகத் தாக்கினார்.

    பின் இருவரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சமாதானம் செய்தார். புராணக் கதை ஒன்றின்படி கிருஷ்ணருக்கு 16,000 மனைவிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜாகிர் பேசியதே ஆச்சார்யர் பொறுமையிழக்க காரணம் ஆகும். 

    • வீட்டில் இருந்த பெண் அதை கவனித்து அவர்கள் உள்ளே வராதபடி கதவு அடைத்து நின்று போராடுகிறார்.
    • ஒற்றை ஆளாக திருடர்களை தடுத்து நிறுத்திய பெண்மணிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவித்து வருகிறது.

    பஞ்சாபில் பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைய முயன்ற மூன்று திருடர்களை பெண் ஒரே ஆளாக தடுத்து நிறுத்திய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டுக்குள் நுழைய முயன்ற திருடர்கள் உள்ளே வராமல் கதவைப் பிடித்துக்கொண்டு பெண் போராடும் சிசிடிவி வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கடந்த வாரம் வியாழக்கிழமை பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் உள்ள வெர்கா பகுதியில் பட்டப்பகலில் வீடு ஒன்றில் 3 கொள்ளையர்கள் நுழைய முயன்றுள்ளனர். உள்ளூர் நகை வியாபாரி ஒருவர் வீட்டில் இல்லாததை நோட்டம் விட்ட அந்த மூவர் வீட்டுக்குள் வர முயன்ற நிலையில் அவர்களை அந்த வீட்டில் இருந்த பெண் அதை கவனித்து அவர்கள் உள்ளே வராதபடி கதவு அடைத்து நின்று போராடுகிறார்.

    இறுதியில் சோபாவை இழுத்து வழியை அடைத்ததாலும் பெண் கூச்சலிட்டதாலும் உள்ளே நுழையும் முயற்சியைக் கைவிட்டு திருடர்கள் வெறுங்கையுடன் திரும்பினர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பேரின் போலீசார் திருடர்களை தேடி வருகிறனர். இதற்கிடையே ஒற்றை ஆளாக திருடர்களை தடுத்து நிறுத்திய பெண்மணிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவித்து வருகிறது.

    • கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
    • 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்'

    திருமணங்களின் எண்ணிக்கையை விட விவகாரத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சீனாவை சேர்ந்த லீ [Li] மற்றும் சென் [Chen], ஆகிய இருவர் 20 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

    ஆனால் கணவர் லீ மனைவியை பிரிய துளியும் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டது சிறிய பிரச்சனைதான் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறி நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. ஆனால் தனக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டும் என்று மனைவி சென் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

     

    இதுதொடர்பான விசாரணைக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், விசாரணையை நடக்கவிடாமல் செய்ய தனது மனைவி கணவர் துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தை விட்டு வெளியே ஓட முயற்சித்துள்ளார்.

    மனைவியை கையில் ஏந்திக்கொண்டு சத்தமாக கூச்சலிட்டபடி சென் நீதிமன்றத்தை விட்டு ஓட முயற்சித்ததை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கணவனின் காதலை பார்த்து வியந்த நீதிபதி, இனிமேல் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அதனபடி, 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்' என்று கணவர் லீ  எழுதிக்கொடுத்துள்ளார்.

    • 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி முகத்தை மூடி அமர்ந்துள்ளனர்
    • பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    உ.பியில் ஸ்கூல் ஃபீஸ் கட்டாத 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொளுத்தும் வெயிலில் அமர வைத்து பிரின்சிபல் வீடியோ எடுத்துள்ளார். ஃபீஸ் கட்டவில்லை என்றால் இதுதான் நிலைமை என்று உணர்த்தும் வகையில் அந்த வீடியோவை அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பிவைத்து மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாரத்நகரில் இயங்கி வரும் சியாம்ராஜி தனியார் பள்ளியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 50 க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பள்ளியின் கதவுக்கு அருகில் வெயிலில் கூனிக் குறுகி தங்களது முகத்தை மூடி அமர்ந்திருக்கும்போது பிரின்சிபல் எடுத்த அந்த 2 நிமிட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

    மேலும் கல்விக் கட்டணம் செலுத்தாதவர்களை இந்த முறை மன்னிப்பேன் என்றும் ஆனால் இனிமேலும் கட்டவில்லை என்றால் அவர்கள் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் வீடியோ மூலம் பெற்றோர்களுக்கு அந்த பிரின்சிபல் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வாரத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் ஐ- போன் 16 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • ரூ.1.5 லட்சம் மதிப்புடைய ஐ-போன் 16 மொபைலை வாங்கி பரிசளித்துள்ளார்.

    குப்பை வியாபாரி ஒருவர் தனது மகனுக்கு சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஐ- போன் 16 போனை பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் ஐ- போன் 16 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த போனை வாங்க இளைஞர்கள் வரிசையில் காத்துக்கிடந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்நிலையில் குப்பைகளை வாங்கி விற்கும் வியாபாரி ஒருவர் தனக்கென ரூ.85,000 மதிப்புடைய ஐ-போனை வாங்கிக்கொண்டு தனது மகன் நன்றாக படிப்பதை பாராட்டும் வகையில் ரூ.1.5 லட்சம் மதிப்புடைய ஐ-போன் 16 மொபைலை வாங்கி பரிசளித்துள்ளார்.

    அந்த வியாபாரி தனது கையில் ஐ-போனை வைத்துக்கொண்டு நெகிழ்ச்சியுடன் பேட்டியளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • கார் ஷோ ரூமில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
    • டெல்லி விமான நிலையம் அருகே இருக்கும் உணவகத்தில் துப்பாக்கிசூடு நடந்துள்ளது

    டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக டெல்லியில் கேங் வார் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் தலைநகரில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

    முதல் சம்பவத்தில் டெல்லி நரைனா பகுதியில் காவல் நிலையத்தின் அருகே உள்ள கார் ஷோ ரூமில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் விற்பனைக்கு இருந்த சொகுசு கார்கள் சேதமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அடையாளம் கண்டு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    இரண்டாவதாக டெல்லி விமான நிலையம் அருகே மஹிபல்பபூர் நகர் பகுதியில் இருக்கும் உணவகத்தில் இன்று காலை 2.30 மணியளவில் பைக்கில் வந்த 6 நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பணம் கேட்டு மிரட்டி ஹோட்டல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மூன்றாவதாக இன்று காலை 9.30 மணியளவில் நாங்லோய் [Nangloi] பகுதியில் அமைந்துள்ள சுவீட் கடை ஒன்றில் பணம் கேட்டு மிரட்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. முகத்தை மூடிக்கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இந்த ஸ்வீட் ஷாப் மீது நான்கு ரவுண்டுக்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மூன்று சம்பவசங்களும் காசு கேட்டு மிரட்டுவதற்காகவே நடந்துள்ளதால் இதை செய்தது ஒரே கும்பல்தானா என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது.

    • இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
    • வெளிப்புற கண்ணாடியை டிராலியில் நின்றபடி பணியாளர்கள் இருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் பணியின்போது டிராலி அறுந்து இரண்டு பணியாளர்கள் அந்தரத்தில் தொங்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. தலைநகர் நொய்டாவில் செக்டார் 62 பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வானுயர காட்டம் ஒன்றில் உயரத்தில் வெளிப்புற கண்ணாடியை டிராலியில் நின்றபடி பணியாளர்கள் இருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது டிராலியின் கயிறு அறுந்துவிழுந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு ரோப் மூலம் அவர்கள் கீழே விழாமல் உயிர்தப்பியுள்ளனர். அவர்களின் இடுப்புப் பகுதியில் பாதுகாப்பு ரோப் கட்டப்பட்ருந்த நிலையில் அதன் பேலன்சில் இருவரும் அந்தரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

    அவர்கள் இருவரும் உதவி கேட்டு கத்தும் சத்தம் கேட்டு சக பயணிகள் அவர்களை மேலே இழுத்து காப்பாற்றியுள்ளனர். இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கணவர்கள் சோம்பேறிகள், திறனற்றவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது
    • அந்த வீடியோ பிக் பில்லியன் டேஸ் ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சிறப்பு தள்ளுபடி நாட்களை அறிவித்து நடத்துவது வழக்கம். அவ்வாறு பிக் பில்லியன் டேஸ் சேல் என்ற தள்ளுபடி ஆஃபர் வாரத்தை அறிவித்துள்ளது. இந்த பிக் பில்லியன் டேஸ் ஆஃபர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை இருக்கும்.

    இந்நிலையில் இந்த பிக் பில்லியன் டேஸ் வியாபாரத்துக்கு பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள ப்ரோமோஷனல் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த அனிமேஷன் வீடியோவில் கணவர்கள் சோம்பேறிகள், துரதிஷ்டம்பிடித்தவர்கள், முட்டாள்கள் என்று சித்தரித்துள்ளதே சர்ச்சைக்குக் கரணம்.

    கணவர்களுக்குத் தெரியாமல் மனைவிகள் எப்படி ரகசியமாக ஹேண்ட் பேக் - களை வாங்குகின்றனர் என்பது தொடர்பாக அந்த வீடியோ பிக் பில்லியன் டேஸ் ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டங்கள் எடுத்தது. ஆண்கள் நலச் சங்கமும் கண்டனங்களை தெரிவித்தது. இதனையடுத்து அந்த வீடியோவை நீக்கி பிளிப்கார்ட் நிறுவனம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டுள்ளது.

    ×