என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையில் பேட்டரி திருடியவர்கள் கைது
    X

    கைது செய்யப்பட்டவர்கள்.

    கடையில் பேட்டரி திருடியவர்கள் கைது

    • பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர்.
    • போலீசார் அவர்களை கைது செய்து, பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் விளந்திட சமுத்திரம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.

    இங்கு பெட்ரோல் விற்பனை நிலையம் பூட்டியிருந்த நேரத்தில் அங்கு வந்த 2 பேர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பேட்டரிகளை திருடி சென்றனர்.

    இது குறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    உடனடியாக சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அதில் 2 நபர்கள் பேட்டரிகளை திருடி செல்வது தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் பேட்டரிகளை திருடி சென்றவர்கள் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்து மற்றும் விளந்திட சமுத்திரம் பகுதியை சேர்ந்த இலக்கியன் என்பது தெரிந்தது.

    உடனடியாக போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்து, திருடிச் சென்ற பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×