search icon
என் மலர்tooltip icon
    • போட்டியானது செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
    • 6:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை யின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நேற்று தொடங்கியது.

    தொடக்கவிழா

    தொடர்ந்து வருகிற 28-ந்தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. போட்டிகளை கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் தலைமையில் மின்சார வாரிய விளையாட்டு அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

    முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ். சண்முகவேல் வரவேற்று பேசினார். இதில் கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி. சங்கரநாராயணன், நிர்வாகக்குழு உறுப்பினர் ராமசாமி, நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் கே. காளிதாஸ முருகவேல், கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். மதிவண்ணன் மற்றும் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எ. ராஜேஸ்வரன், ஆடிட்டர் பாலசுப்பிரமணி, வக்கீல் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    டெல்லிஅணி வெற்றி

    நேற்று நடைபெற்ற போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், மும்பை யூனியன் பேங்க் அணியும் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றிப் பெற்றது.

    2-வது லீக் ஆட்டத்தில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியுடன், பெங்களூர் ெரயில் வீல் பேக்டரி அணி மோதின. இதில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வெற்றிப் பெற்றது. மேலும் 3-வது லீக் ஆட்டத்தில் ஹூப்பள்ளி சவுத்வெஸ்டர்ன் ரெயில்வே அணியுடன் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி மோதின. இதில் 6:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

    இன்னறய போட்டிகள்

    போட்டிக்கான ஏற்பாடு களை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் ரகு, ராம்குமார் மற்றும் சிவராஜ் மற்றும் ஆக்கி பயிற்சி யாளர்கள் செய்திருந்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் போட்டிகளில் முதல் லீக்கில் சவுத் சென்ட்ரல் ரெயில்வே, செகந்திராபாத் மற்றும் கனரா பேங்க், பெங்களூரு அணிகளும், 2-வது லீக்கில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு, புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு போலீஸ், சென்னை அணிகளும், 3-வது லீக்கில் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா, புதுடெல்லி மற்றும் சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே, ஹூப்பள்ளி அணிகளும் மோத உள்ளன.

    • அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மரக்கன்றுகள் நட்டு கரையைப் பலப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தில் கீழமுடிமன், வெள்ளாரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி நீர்வடிப்பகுதிகளில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் ஆய்வு

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, நீர்வடிப்பகுதிகளில் உள்ள 24 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான்கள், 39 விவசாயிகளுக்கு தார்ப்பாய்களும், நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு 24 பயனாளிகளுக்கு 24 தையல் எந்திரங்கள் என 87 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் ஆகிய பஞ்சாயத்துகளில் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்து கால்வாய் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    91 நீர்வடிப்பகுதி

    குழுக்கள்

    அப்போது கலெக்டர் செந்தில் ராஜ் கூறிய தாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 91 நீர்வடிப்பகுதி குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஓட்டப்பிடாரம் தாலுகாவில் மொத்தம் ரூ.2 கோடியே 67 லட்சம் நிதியில் தடுப்பணை அமைத்தல், ஊரணி சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அமிழ்வுக்குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. மேலும் ரூ.ஒரு கோடி 96 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிகாரிகளுக்கு அறிவுரை

    தொடர்ந்து அவர், சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீரமைக்கப்பட்ட வரத்துக்கால்வாய் ஓரங்களிலும், அமிழ்வுக்குட்டையை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு கரையைப் பலப்படுத்தவும் விவசாயத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படும் மினி பாரஸ்ட் காடுகள் மற்றும் நர்சரி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

    கலந்துகொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சிகளில் வேளாண்மை திட்ட அலுவலரும், வேளாண்மை இணை இயக்குநருமான பழனிவேலாயுதம், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின்ராணி, வேளாண்மை துணை இயக்குநர் சாந்திராணி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வேளாண்மை உதவிப் பொறியாளர் தமிம்அன்சாரி, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் முத்துராமன், வெண்ணிலா மற்றும் சில்லாநத்தம், பாஞ்சாலங்குறிச்சி, கீழமுடிமண் நீர்வடிப்பகுதி குழுத்தலைவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 11-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் கீழவைப்பார் கிராமத்தை சேர்ந்த ஜெனிபர், ஆரோக்கியம், எக்லிண்டன், திருமூர்த்தி ஆகியோர் கடந்த 11-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக படகு விபத்துக்குள்ளாகியது. பின்னர் அவர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவர்களை, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதி உதவி மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாதவடியான், ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் ராஜ், கிளைச் செயலாளர்கள் சூசைபூபாலராயர், ரீகன், வில்லியம் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சந்தன கருப்பசாமி தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
    • மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.

    கயத்தாறு:

    விருதுநகர் மாவட்டம் ரெட்டி இனாம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் சந்தன கருப்பசாமி (வயது 17). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சந்தன கருப்பசாமி கயத்தாறு அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்திற்கு தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். தளவாய்புரம் நாற்கர சாலையில் வந்தபோது மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சந்தன கருப்பசாமி படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு நெல்லைஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நோயாளிகளுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி உள்ள வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது
    • காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்காக முகாமிற்கு அழைத்து வந்தனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புளியநகர் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் ஏரல் வட்டார காச நோய் பிரிவு மற்றும் செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமினை புளியநகர் ஊர்நலக் கமிட்டி தலைவரும், சாயர்புரம் கூட்டுறவு வங்கி தலைவருமான அறவாழி தொடங்கி வைத்தார். நல்லாசிரியர் ஞானராஜ், தி.மு.க. வார்டு செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நோயாளிகளுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி உள்ள வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மலைவிக்னேஷ், கண்ணன், செல்வராஜ், சுரேஷ், சுகாதார செவிலியர் ஷீலா, சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, சரவணன், இடைநிலை சுகாதார செவிலியர், முத்துலட்சுமி, பூர்ண கலையரசி, காசநோய் சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை ஆகியோர் காசநோய் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    முன்னதாக சுகாதார தன்னார்வலர்கள் சங்கரி, வெள்ளையம்மாள், விஜயா, உமா, மகேஸ்வரி ஆகியோர் புளியநகரில் வீடு, வீடாக சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்காக முகாமிற்கு அழைத்து வந்தனர். முகாமில் இருட்டறை உதவியாளர் எட்டையா மற்றும் ஹரி பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜனனி முகாமினை ஆய்வு செய்தார்.

    • ராஜா டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • காயம் அடைந்த ராஜாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து சோரீஸ்புரம் பேச்சியம்மன் கோவில் அருகில் நடந்து வரும் போது அவரை வழிமறித்த தூத்துக்குடி தெற்கு சங்கரபேரியை சேர்ந்த லாரி டிரைவர் வெற்றிவேல் முருகன்( 35) மற்றும் உத்தண்டு ராஜ் (21) ஆகியோர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

    அதற்கு அவர் மறுக்கவே 2 பேரும் அரிவாளால் ராஜாவை வெட்டினார்கள். இதில் காயம் அடைந்த ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெற்றிவேல் முருகன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் பெயர் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 43). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி ஆனந்தவள்ளி விசாரிக்க தொடங்கினார். அப்போது சாட்சி கூண்டில் நின்று கொண்டிருந்த வழக்கின் அப்போதைய விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனை எதிர் கூண்டில் நின்ற கணேசன் அவதூறாக பேசி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    விசாரணையின் போது நீதிபதி முன்பு வைத்தே இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசிய கணேசனிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலீசாரும், கணேசனிடம் இனி இந்த தவறு நடக்காது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

    • 2023-2024-ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி சேர்க்கைக்காக விளையாட்டு விடுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.
    • ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    தென்காசி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டம் சார்பாக 2023-2024-ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ-மாணவி களுக்கான விளையாட்டு விடுதி சேர்க்கைக்காக விளையாட்டு விடுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

    6, 7, 8, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பிற்கு விளையாட்டு விடுதி சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கான விளையாட்டு விடுதி தேர்வும் நடைபெற உள்ளது.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தி னை www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பி க்கலாம்.

    ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 23-ந் தேதி மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந்தேதி காலை 7 மணியளவில் ஆலங்குளம் தாலுகா, சிவலார்குளம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மினி விளையாட்ட ரங்கில் நடத்தப்பட உள்ளதால் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலும் தகவல்களுக்கு 04633-212580 மற்றும் 9786918406 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்த தக வலை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்து ள்ளார்.

    • ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடந்தது.
    • கூட்டத்தில் சாலை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாதாரண கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான் ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரவிக்குமார், அன்னத்தாய், ஆரோக்கியமேரி, பபிதா, உமாதேவி, அன்னக்கிளி, சுபாஷ்சந்திர போஸ், சுந்தரம், வென்சிராணி, சாலமன் ராஜா, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் துணைத்தலைவர் ஜான்ரவி நன்றி கூறினார்.

    • சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததால் அஜித் சோகமாக இருந்து வந்துள்ளார்.
    • நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தனியாக இருந்த இவர் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை வீரமாமுனிவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அஜித் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் குத்துக்கல்வலசையில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை

    இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததால் அஜித் சோகமாக இருந்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவில் வீட்டில் தனியாக இருந்த இவர் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.

    நேற்று மதியம் அருகில் இருந்த மற்றவர்கள் வீடு பூட்டி இருந்ததை சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அஜித் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று அஜித் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவரது தற்கொ லைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
    • 44-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் புதிதாக 1,050 உறுப்பினர்களை அபிராமிநாதன் சேர்த்துள்ளார்.

    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100-வது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். அதில் மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று அக்கட்சியினருக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

    அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதனையடுத்து தூத்துக்குடி 35, 36, மற்றும் 44 ஆகிய வார்டுகளுக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், நியமிக்கப்பட்டிருந்தார். அவர் 44-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் புதிதாக 1,050 உறுப்பினர்களை சேர்த்துள்ளார். அதற்கான உறுப்பினர் படிவத்தை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதாஜீவனிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மேகநாதன், வட்ட செயலாளர் சுப்பையா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 19 வாகனங்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • வாகன சோதனையில் 160 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின் போது அபாயகரமாகவும், பொது மக்களுக்கு தீங்கு விளை விக்கும் வகையில் விதிமுறை களை மீறி செயல்பட்டதாக தட்டப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கனரக வாகனம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மீதும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 2 இரு சக்கர வாகனங்கள் மீதும், ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒரு இரு சக்கர வாகனமும், ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் ஒரு கனரக வாகனம் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் மீதும் என மொத்தம் 2 கனரக வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 19 வாகனங்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி உட்கோட்டத்தில் 7 இடங் களிலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 7, திருச் செந்தூர் உட்கோட்டத் தில் 6, ஸ்ரீவைகுண்டம் உட்கோட் டத்தில் 7, மணியாச்சி உட்கோட்டத்தில் 6, கோவில் பட்டி உட்கோட்டத்தில் 9, விளாத்திகுளம் உட்கோட் டத்தில் 9 மற்றும் சாத்தான் குளம் உட்கோட்டத்தில் 6 இடங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 57 இடங்களில் 8 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வை யில் 8 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 68 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 160 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையில் போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

    ×