search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle Checkup"

    • அழகுசுந்தரம் ஒட்டி வந்த டாரஸ் லாரியை பணகுடி வருவாய் ஆய்வாளர், உதவி கலெக்டர் ஆகியோர் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • லாரியில் அதிக அளவு குண்டு கற்களை ஏற்றி வந்தது சோதனையில் தெரியவந்தது.

    வள்ளியூர்:

    தெற்கு வள்ளியூர் பகுதியில் பணகுடி வருவாய் ஆய்வாளர் அழகு முத்து ரேகா மற்றும் உதவி கலெக்டர் கிஷோர் குமார் (பயிற்சி) ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மருதப்பபுரம், தெற்கு தெருவை சேர்ந்த அழகுசுந்தரம் (வயது41) என்பவர் ஒட்டி வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கொண்ட குண்டு கற்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பணகுடி வருவாய் ஆய்வாளர் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப் படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அழகுசுந்தரத்தை கைது செய்தனர்.

    • கோவில்பட்டி சுற்றுப்பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது.
    • பறிமுதல் செய்யப்பட்ட 4 வாகனங்களுக்கும் அபராத தொகை ரூ.73 ஆயிரம் மற்றும் சாலை வரி ரூ.7ஆயிரத்து 100 விதிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நகர பகுதியில் மினி பஸ்கள் முறைப்படி இயக்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்து இயக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று கோவில்பட்டி சுற்றுப்பகுதி களில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

    அப்போது செண்பகவல்லி அம்மன் கோவில் முதல் செண்பகப்பேரி வரை இயக்கப்பட வேண்டிய மினிபஸ் கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் வரை அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயங்கி கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டு பிடிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனும திக்கப்படாத வழிதடத்தில் வாகனத்தை இயக்கக் கூடாது என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மினிபஸ்சின் ஆவணம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டு அபராதம் நிர்ணயிக்கப்படும். வாகன உரிமையாளர் அபராத தொகையை செலுத்திய பிறகு வாகனம் விடுவிக்கப்படும்.

    மேலும் 2 லோடு வேன், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு சரக்கு லாரி ஆகியவை முறையான ஆவணங்கள் இல்லாமலும், சாலை வரி இல்லாமலும் இயங்கிய தற்காக பறிமுதல் செய்யப்ப ட்டது. இந்த 4 வாகனங்க ளுக்கும் அபராத தொகை ரூ.73 ஆயிரம் மற்றும் சாலை வரி ரூ.7ஆயிரத்து 100 விதிக்கப்பட்டுள்ளது.

    அபராத தொகையை அந்தந்த வாகன உரிமையாளர்கள் செலுத்திய பின்பு வாகனங்கள் விடுவிக்கப்படும். மோட்டார் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான அனுமதிச்சீட்டு, சாலை வரி, தகுதி சான்று, காப்பு சான்று மற்றும் புகைச்சான்று ஆகியவை நடப்பில் இருந்தால் மட்டுமே வாகனத்தை பொது சாலையில் இயக்க வேண்டும். மீறி இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தெரி வித்துள்ளார்.

    • 19 வாகனங்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • வாகன சோதனையில் 160 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின் போது அபாயகரமாகவும், பொது மக்களுக்கு தீங்கு விளை விக்கும் வகையில் விதிமுறை களை மீறி செயல்பட்டதாக தட்டப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கனரக வாகனம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மீதும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 2 இரு சக்கர வாகனங்கள் மீதும், ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒரு இரு சக்கர வாகனமும், ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்தில் ஒரு கனரக வாகனம் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் மீதும் என மொத்தம் 2 கனரக வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 19 வாகனங்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி உட்கோட்டத்தில் 7 இடங் களிலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 7, திருச் செந்தூர் உட்கோட்டத் தில் 6, ஸ்ரீவைகுண்டம் உட்கோட் டத்தில் 7, மணியாச்சி உட்கோட்டத்தில் 6, கோவில் பட்டி உட்கோட்டத்தில் 9, விளாத்திகுளம் உட்கோட் டத்தில் 9 மற்றும் சாத்தான் குளம் உட்கோட்டத்தில் 6 இடங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 57 இடங்களில் 8 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வை யில் 8 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 68 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 160 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையில் போதைப் பொருள் கடத்தல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

    • நெல்லை மாநகர பகுதி களில் போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாக கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
    • இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி களில் விபத்துகளை குறைக்க வும், போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாகவும் கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

    அபராதம்

    அதன்பேரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்கும் பொருட்டு மாநகரின் பல்வேறு இடங்களிலும் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி விதிமு றைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றார். இதனைப்பார்த்த போலீசார் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    20 இடங்களில் வாகன சோதனை

    இந்நிலையில் விடுமுறை நாளான இன்று மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பழையபேட்டை சோதனை சாவடி, வழுக்கோடை முக்கு, நயினார்குளம் குளக்கரை சாலை, டவுன் ஆர்ச் பகுதி, ஈரடுக்கு மேம்பால கீழ்பகுதி, சந்திப்பு, வண்ணார்பேட்டை, புறவழிச்சாலை, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தப் பட்டது.

    அப்போது ஏராளமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலும், காரில் சென்றவர்கள் சீட் பெல்ட் அணியாமலும் சென்றதை போலீசார் பார்த்தனர். உடனே அவர்களை பிடித்து அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர்.

    வண்ணார்பேட்டையில் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

    • சில நாட்களுக்கு முன்பு மாநகர் பகுதி முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுபவர்களையும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களையும் கண்டறிந்து அபராதம் விதித்தனர்.
    • வாகனத்தில் முறையாக நம்பர் பிளேட் பொருத்தாதவர்கள். விதிமுறைகளை மீறியவர்கள், 2-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் உள்பட விதிகளை மீறி சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் பகுதிகளில் மோட்டார் சைக்களில்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போது போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    வாகன சோதனை

    இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மாநகர் பகுதி முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுபவர்களையும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களையும் கண்டறிந்து அபராதம் விதித்தனர். 2 வாரங்களாக கடுமையாக பின்பற்றப்பட்ட இந்த வாகன சோதனை கடந்த சில நாட்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் மாநகர் பகுதிகளில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    50 இடங்களில்...

    அதன்படி பழைய பேட்டை சோதனை சாவடி, வழுக்கோடை முக்கு, நயினார்குளக்கரை, டவுன் ஆர்ச், மாநகராட்சி அலுவலகம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதி, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட 50 இடங்களில் இன்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை மறித்து அபராதம் விதித்தனர். ரூ.100 முதல் ரூ.1,000 வரை வாகன ஓட்டிகளிடம் அபராதமாக வசூலித்தனர்.

    இதேபோல் வாகனத்தில் முறையாக நம்பர் பிளேட் பொருத்தாதவர்கள். விதிமுறைகளை மீறியவர்கள், 2-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் உள்பட விதிகளை மீறி சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

    ஒருசில இடங்களில் போலீசார் மறித்த போது சில வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் தப்பி சென்ற சம்பவமும் நடந்தது.

    ×