என் மலர்

  நீங்கள் தேடியது "Alankulam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேதாள செல்வத்தின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அங்கிருந்த ரூ.30 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
  • வேதாள செல்வம் கடையில் பணியாற்றி வரும் 12 தொழிலாளர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ஆலங்குளம்:

  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் அலகாபுரி கீழத்தெருவை சேர்ந்தவர் வேதாள செல்வம் (வயது 38). இவர் அப்பகுதியில் சொந்தமாக இரும்புக்கடை நடத்தி வருகிறார்.

  கொள்ளை

  நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அங்கிருந்த ரூ.30 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

  இதுதொடர்பாக மதுவிலக்கு டி.எஸ்.பி. சுப்பையா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் வேதாள செல்வம் இதுவரை ரூ.14 லட்சத்திற்கான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்துள்ளார். இதனால் ரூ.14 லட்சம் மட்டும் தான் கொள்ளை போனதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  கைரேகைகள் ஆய்வு

  தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் வேதாள செல்வம் கடை யில் பணியாற்றி வரும் 12 தொழிலாளர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  மேலும் அவரது கைரேகைகள் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளுடன் ஒத்துபோகிறதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.

  இதற்கிடையே இரும்பு வியாபாரி வீட்டில் கொள்ளை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் தெரிவித்து, அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார்.
  • இன்று முதல் 3 நாட்களுக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

  ஆலங்குளம்:

  பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

  அனுமதி மறுப்பு

  இந்த ஆண்டும் கால்நாட்டுதல் வைபவத்துடன் திருவிழா தொடங்கி உள்ளது. வழக்கமாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதிக அளவில் அங்கு சென்று தங்கி இருந்து வழிபடுவார்கள்.

  இந்த ஆண்டு அங்கு செல்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே தனியார் வாகனங்களுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் குறைந்தது 3 நாட்களாவது தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

  அமைச்சரிடம் கோரிக்கை

  தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் தெரிவித்து, அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார்.

  தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியாவிடம் பேசியதன் பேரில் இன்று முதல் 3 நாட்களுக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

  இதனைத்தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கால்நடை பராமரிபுத்துறையில் பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
  • தமிழகத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் 1089 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டது.

  ஆலங்குளம்:

  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கலங்கல் கிராம ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடந்தது.

  மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்தார்.

  எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார் , ராஜா, சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

  முதல்-அமைச்சர் ஆணைக்கினங்க கால்நடை பராமரிபுத்துறையில் பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனடிப்படையில் இன்றைய தினம் கீழக்கலங்கல் ஊராட்சியில் சுமார் 5,000 கால்நடைகள் வளர்ப்போர் பயனடையும் வகையில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

  மேலும், சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தாது உப்புக்கலவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

  மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாட்டு கோழி வளர்ப்பு தற்போது அதிக அளவில் வளர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது.

  தமிழகத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் 1089 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டது. இதனால் கால்நடை வளர்ப்பு துறை முன்னேற்ற பாதையில் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றது.

  அதேபோல ஒன்றியத்திக்கு உட்பட்ட இளம் விதவைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைய 5 ஆடுகள் வழங்கப்படுகிறது. எனவே கால்நடைத்துறை மூலமாக வழங்ககூடிய அனைத்து திட்டங்களையும் பெற்று பயன் அடையலாம்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) தியோபிலஸ் ரோஜர், ஆலங்குளம் யூனியன்

  தலைவர் திவ்யா மணிகண்டன், உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை)முருகேஷ்வரி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்செல்வக்கொடி ராஜாமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கீழக்கலங்கல் ஊராட்சி மன்றத்தலைவர், சந்திரசேகர், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, மாரியப்பன், பொன்மோகன், தினேஷ், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி துரிதமாக விசாரணை நடத்தி அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முன்னிலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
  • நிலத்தை மீட்டெடுத்த போலீசாருக்கு முருகம்மாள் கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தார்.

  தென்காசி:

  தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவலார்குளம் பகுதியில் வசித்து வரும் முருகம்மாள். இவருக்கு சொந்தமான ரூ.1,50,000 மதிப்புள்ள 1 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த அழகம்மாள் மற்றும் முத்துக்குட்டி ஆகியோர் போலி ஆவணங்கள் தயார் செய்து தன்னிடம் இருந்து அபகரித்ததாக கடந்த மே 10-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.

  இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முன்னிலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

  உரிய விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டெடுத்த போலீசாருக்கு முருகம்மாள் கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய அரசு வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் நாளை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.
  • வரியின் மூலம் அரிசியின் விலையானது உயர வாய்ப்பு உள்ளது.

  ஆலங்குளம்:

  அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நாளை அரிசி கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் ஆலங்குளம் வட்டார அரிசி ஆலை அதிபர்கள் சங்க தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா கூறிய தாவது:-

  நமது நாட்டை பொறுத்தவரை ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் அன்றாட உணவில் அரிசி மற்றும் கோதுமையை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த இரண்டு உணவு பொருட்களும் மக்களுக்கு தரமான தாகவும், சுத்தம் மற்றும் சுகாதாரமானதாகவும் கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்தியஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


  இந்த கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மத்திய அரசு இப்போது பேக்கிங் செய்யப்பட்டுள்ள உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்து இருப்பது ஏற்புடையதாக இல்லை. இந்த வரியின் மூலம் அரிசியின் விலையானது உயர வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

  எனவே மத்திய அரசு இந்த வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் நாளை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.

  இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து அரிசி ஆலைகளும் பங்கேற்று ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  மேலும் நாளை நடக்க விருக்கும் வேலை நிறுத்தத்தின் மூலம் மத்திய அரசு கண்டுகொள்ள வில்லை என்றால் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடு வோம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கேபிள்கள் மற்றும் பேட்டரிகள் திருட்டு போயிருந்தது.
  • ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம்-அம்பை சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது.

  திருட்டு

  மொத்தத்தில் 5 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ள இந்த அலுவலகத்தில் இரவு காவலாளி கிடையாது. மேலும் சி.சி.டி.வி. காமிராவும் வைக்கப்படவில்லை.

  நேற்று பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்தில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது தகவல் தொடர்பு கேபிள்கள் மற்றும் பேட்டரிகள் திருட்டு போயிருந்தது.

  ரூ.5 லட்சம் மதிப்பு

  இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர். திருட்டுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

  இதே அலுவலகத்தில் கடந்த மே மாதம் 28-ந்தேதியும், மாறாந்தை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதியும் திருட்டு போனது. அப்போதே போலீசார் திருடர்களை கண்டுபிடித்து இருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விதிகளை மீறி அந்த குவாரிகள் செயல்படுகின்றன என்பதை தெரிவித்தும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய முன்வரவில்லை.
  • கடந்த 5-ந்தேதி ஆலங்குளம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.

  நெல்லை:

  தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் மற்றும் தொழில்துறை செயலாளர் ஆகியோருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  விதி மீறல்

  ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளால் அந்த கிராமம் மற்றும் ஆண்டிபட்டி ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

  விதிகளை மீறி அந்த குவாரிகள் செயல்படுகின்றன என்பதை தெரிவித்தும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய முன்வரவில்லை. அதனை ஆய்வு செய்து விதிமீறல் நடந்திருந்தால் குவாரியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நடவடிக்கை

  கடந்த 5-ந்தேதி ஆலங்குளம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் குவாரிகள் அதற்கான உரிமம் பெற்ற காலம் வரை செயல்படும் என்றும், வெடி வைப்பதை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் தெரிவித்து பொதுமக்களை அனுப்பி வைத்து விட்டனர்.

  இந்த குவாரிகளில் சக்தி வாய்ந்த வெடி மருந்து கையாளப்பட்டு போர்வெல் எந்திரங்கள் மூலம் துளையிடப்பட்டு பாறைகள் தகர்க்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சர்வதேச அளவில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இலவசமாக 5 ஏக்கர் நிலம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்திலோ அல்லது சிவலார்குளத்திலோ வழங்கிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
  • 5 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க முன்வந்த பூங்கோதை ஆலடி அருணாவை பலதரப்பட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர்.

  தென்காசி:

  தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாசை அவரது அலுவலகத்தில் சந்தித்து தென்காசி மாவட்ட பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கை அடங்கிய மனுக்களை வழங்கினார்.

  அதில், சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்திற்கு தேவையான உதவிகளை ஏற்படுத்திட கோரியும் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பாக சர்வதேச அளவில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இலவசமாக 5 ஏக்கர் நிலம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்திலோ அல்லது சிவலார்குளத்திலோ வழங்கிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

  தென்காசி மாவட்டத்தில் சர்வதேச தளத்தில் அமையவுள்ள விளையாட்டு அரங்கத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்க முன்வந்த பூங்கோதை ஆலடி அருணாவை பலதரப்பட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓடை பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
  • கைதானவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

  நெல்லை:

  ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் நேற்று கடங்கநேரி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது அங்குள்ள ஓடை பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அப்போது அதில் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த மகாராஜன்(வயது 18) என்பவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 1 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய நெட்டூர் பஜனைமட தெருவை சேர்ந்த சுப்புக்குட்டி, முப்புடாதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து சிறுவன் பலியானார்.
  • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆலங்குளம்:

  தென்காசி மலையன் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 35). இவர் நேற்று ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையில் நடைபெற்ற கோவில் கொடைவிழாவிற்கு சென்றார்.

  அப்போது தனது உறவினரான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் குணசீலன்(17) என்பவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். கோவில் கொடைவிழாவை பார்த்துவிட்டு 2 பேரும் தென்காசிக்கு நள்ளிரவில் திரும்பி உள்ளனர்.

  மோட்டார் சைக்கிளை ராஜேஷ் ஓட்டி சென்றுள்ளார். ஊத்துமலை அருகே உள்ள ரதமுடையார்புரத்தில் சென்றபோது அங்கிருந்த வளைவான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

  இதில் தூக்கி வீசப்பட்ட குணசீலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ஊத்து மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசீலன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  படுகாயம் அடைந்த ராஜேசுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×