search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே போலி பத்திரம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் 2 மாதத்திற்குள் மீட்பு
    X

    அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

    ஆலங்குளம் அருகே போலி பத்திரம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் 2 மாதத்திற்குள் மீட்பு

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி துரிதமாக விசாரணை நடத்தி அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முன்னிலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
    • நிலத்தை மீட்டெடுத்த போலீசாருக்கு முருகம்மாள் கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவலார்குளம் பகுதியில் வசித்து வரும் முருகம்மாள். இவருக்கு சொந்தமான ரூ.1,50,000 மதிப்புள்ள 1 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த அழகம்மாள் மற்றும் முத்துக்குட்டி ஆகியோர் போலி ஆவணங்கள் தயார் செய்து தன்னிடம் இருந்து அபகரித்ததாக கடந்த மே 10-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முன்னிலையில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    உரிய விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டெடுத்த போலீசாருக்கு முருகம்மாள் கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தார்.

    Next Story
    ×