ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு-பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கைவரிசை காட்டிய கும்பல் யார்?

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கேபிள்கள் மற்றும் பேட்டரிகள் திருட்டு போயிருந்தது.ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு-பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கைவரிசை காட்டிய கும்பல் யார்?
Published on: 

ஆலங்குளம்:

ஆலங்குளம்-அம்பை சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது.

திருட்டு

மொத்தத்தில் 5 ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ள இந்த அலுவலகத்தில் இரவு காவலாளி கிடையாது. மேலும் சி.சி.டி.வி. காமிராவும் வைக்கப்படவில்லை.

நேற்று பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்தில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது தகவல் தொடர்பு கேபிள்கள் மற்றும் பேட்டரிகள் திருட்டு போயிருந்தது.

ரூ.5 லட்சம் மதிப்பு

இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி மர்ம கும்பலை தேடி வருகின்றனர். திருட்டுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதே அலுவலகத்தில் கடந்த மே மாதம் 28-ந்தேதியும், மாறாந்தை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதியும் திருட்டு போனது. அப்போதே போலீசார் திருடர்களை கண்டுபிடித்து இருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com