search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாட்டில் கால்நடை பராமரிப்பு துறை முன்னேற்ற பாதையில் செல்ல நடவடிக்கை-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.


    தமிழ்நாட்டில் கால்நடை பராமரிப்பு துறை முன்னேற்ற பாதையில் செல்ல நடவடிக்கை-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • கால்நடை பராமரிபுத்துறையில் பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
    • தமிழகத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் 1089 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கலங்கல் கிராம ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்அனிதா ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார் , ராஜா, சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆணைக்கினங்க கால்நடை பராமரிபுத்துறையில் பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனடிப்படையில் இன்றைய தினம் கீழக்கலங்கல் ஊராட்சியில் சுமார் 5,000 கால்நடைகள் வளர்ப்போர் பயனடையும் வகையில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிறப்பாக கால்நடை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தாது உப்புக்கலவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாட்டு கோழி வளர்ப்பு தற்போது அதிக அளவில் வளர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது.

    தமிழகத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் 1089 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டது. இதனால் கால்நடை வளர்ப்பு துறை முன்னேற்ற பாதையில் செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    அதேபோல ஒன்றியத்திக்கு உட்பட்ட இளம் விதவைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைய 5 ஆடுகள் வழங்கப்படுகிறது. எனவே கால்நடைத்துறை மூலமாக வழங்ககூடிய அனைத்து திட்டங்களையும் பெற்று பயன் அடையலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) தியோபிலஸ் ரோஜர், ஆலங்குளம் யூனியன்

    தலைவர் திவ்யா மணிகண்டன், உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை)முருகேஷ்வரி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்செல்வக்கொடி ராஜாமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கீழக்கலங்கல் ஊராட்சி மன்றத்தலைவர், சந்திரசேகர், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, மாரியப்பன், பொன்மோகன், தினேஷ், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×