என் மலர்
நீங்கள் தேடியது "Minister Geethajeevan"
- சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
- எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட நியமண அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்று பேசினார். ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவுரையாற்றினார்.
பாரம்பரிய உணவு திருவிழாவை பார்வையிட்டு சமூக நலன் மற்றும் பெ ண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். அதற்கு பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சத்தான ஆகாரம் எது என்று பார்த்து சாப்பிட வேண்டும். இதுபோன்ற சில குறைபாடுகள் இருப்பதால் 51சதவீத பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.
தற்போது கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் ரத்தம் ஏற்றி கொள்கின்ற னர். இது போன்ற குறை பாடுகள் வராமல் இருப்பதற்கு காய்கறி வகைகள் நவதானிய வகைகள் அதிக அளவில் சாப்பிட வேண்டும்
அங்கன்வாடி பணியாளர்கள் கழிவு பொருட்களில் இருந்து பல தத்ரூபமான பொருட்களை தயாரித்திருக்கிறார்கள். மேலும் ஊட்டச்சத்து உணவுகள் தயாரிப்பதிலும், குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளுக்கான பயிற்சி எடுத்தவர்கள், கைதேர்ந்தவர்களாக உள்ளார்கள். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தை களுக்கு திறமையாக கற்றுக்கொடுக்கிறார்கள். குழந்தைகளை அறிவாற்றல் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும். முதல்-அமைச்சர் இதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
சமூக நலத்துறை சார்பாக ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளையும், குறை வான குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதற்காக ஒரு செயலி உருவாக்கி அங்கன்வாடிகளில் உள்ள 38 லட்சம் குழந்தைகளின் வயது, எடை, முகவரி மற்றும் எல்லா பிரச்சனையையும் பதிவேற்றும் செய்து வைத்துள்ளோம். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைவா னவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் விரைவில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளார். கல்லூரி மாணவ, மாணவிகள் காலை உணவை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் ஊட்டச்சத்து அங்கன்வாடி பணி யாளர்கள் சிறப்பான முறையில் பணி யாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, ஹோலிகிராஸ் கல்லூரி போராசிரியர் மாரிதங்கம், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இளங்குமரன், செயலாளர் ஜீவன் ஜேக்கப், குழந்தை வளர்ச்சி திட்ட ஊரகம் அலுவலர் திலகா, உள்பட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக்ராஜா நன்றி கூறினார்.
- தூத்துக்குடி தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று இருந்ததால் இது போன்ற தசரா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன. சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் 9-ம் நாள் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு தேர்வு முறையில் சிறப்பு பரிசை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று இருந்ததால் இது போன்ற தசரா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு எல்லா பகுதிகளிலும் சிறப்பாக நடைபெறுகிறது. இதை கண்டு அனைத்து தரப்பினரும் மனமகிழ்ச்சி யோடு உள்ளனர். சில கவலைகளை போக்கு வதற்கும் இதுபோன்ற இன்னிசை கச்சேரிகளும் தேவைப்படுகின்றன. எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும், தொழில்வளம் பெருகி அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையோடு
ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகர மாணவரணி அமைப்பாளர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரபு, கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், வட்டச்செயலாளர் பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா மற்றும் சுப்பையா, கணேசன், சிவக்குமார், ராஜசேகர், வரதன், முத்துமாரியப்பன், ஜெயக்குமார், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
- கீதாஜீவன், மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- வீடு இல்லாமல் மக்கள் இருக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெச்சிலா புரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மாலதி முன்னிலை வகித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு அழை ப்பாளராக கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது;-
இக்கிரமம் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இலவச கழிப்பிடம், பேவர் பிளாக் சாலை, குளம் தூர் வார்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.64 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. 15-வது நிதி குழு திட்டம் படி ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடு இல்லாமல் மக்கள் இருக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் அடிப்படையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் உள்ள 15 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி தரப்பட உள்ளது முதல்-அமைச்சருடைய நோக்கம் எல்லோருக்கும் வீடு கட்டி தர வேண்டியது என்பது தான்.இவ்வாறு அவர் பேசி னார்.
பின்னர் கிராம சபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு குறித்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரி விக்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்க வேல், முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், மாரிமுத்து, சமூகவலைதள பொருப்பாளர் ஸ்ரீதர் உட்பட அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கனிமொழி எம்.பி.அமைச்சர் கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி ஆகியோரை நேரில் சந்தித்து சுபாஷ் பண்ணையார் அழைப்பிதழ் வழங்கினார்.
- பனங்காட்டு மக்கள் கழக மாநில வக்கீல் அணி செயலாளர் சிலுவை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி:
அகில இந்திய நாடார்கள் பாதுகாப்பு பேரவை நிறுவனர் மூலக்கரை என். வெங்கடேஷ் பண்ணையார் 19-ம் ஆண்டு வீரவழிபாடு நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) தூத்துக்குடி அருகேயுள்ள மூலக்கரை அம்மன்புரத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில தி.முக.மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோரை நேரில் சந்தித்து பனங்காட்டு மக்கள் கழகம் நிறுவனத்தலைவர் சுபாஷ் பண்ணையார் அழைப்பிதழ் வழங்கினார்.
அப்போது பனங்காட்டு மக்கள் கழக மாநில வக்கீல் அணி செயலாளர் சிலுவை, தென்மண்டல செயலாளர் சொர்ணவேல்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஓடை செல்வம், வடக்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜோதிராஜா, தி.மு.க. பகுதி செயலாளர் ஜெயக்குமார், மற்றும் லிங்கராஜா, அல்பட், படப்பை சுரேஷ், தங்கராஜ், அருண் உள்பட பலர் உடனிருந்தனர்.
- இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஸ்டேட் பாங்க் காலணியில் நடைபெற்றது.
- அமைச்சர் கீதாஜீவன் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
தூத்துக்குடி:
மாநில தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஸ்டேட் பாங்க் காலணியில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் அந்த அந்த பகுதி நிர்வாகிகளுடன் இணைந்து மாநகரம் முழுவதும் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை எழுச்சியுடன் சேர்க்க வேண்டும்.
நம்மோடு இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்களை அரவணைத்து கொண்டு செல்ல வேண்டும். தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். ஆட்சியின் சாதனைகளை எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இளைஞர் அணியில் இருந்து வந்த நமது முதல்-அமைச்சரை போல் சுறுசுறுப்புடன் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், துணை அமைப்பாளர்கள் முத்துராமன், அருண்சுந்தர், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, சூர்யா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், பகுதி மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி, வட்டச்செயலாளரும் கவுன்சிலருமான தெய் வேந்திரன், வட்டசெயலாளர் சந்தனமாரிமுத்து, வட்டப்பிரதிநிதி ராஜன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் கருணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான நாற்காலி, மின்விசிறி, பாய் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி அய்யன் கோவில் தெரு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 54-வது வார்டுக்கு உட்பட்ட அய்யன் கோவில்தெரு, நாடார் தெரு, வைகோ தெரு அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான நாற்காலி, மின்விசிறி, பாய் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி அய்யன் கோவில் தெரு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகர தி.மு.க. கவுன்சிலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, நிர்வாகிகள் சிராஜுதீன், அன்சார், கங்கசேகர், தீபக், ராஜேஷ், அசோக், கவுன்சிலர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்றார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.






