search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரோக்கியமான வாழ்வுக்கு பாரம்பரிய உணவு அவசியம் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன், சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் உள்ளனர். 

    ஆரோக்கியமான வாழ்வுக்கு பாரம்பரிய உணவு அவசியம் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
    • எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட நியமண அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்று பேசினார். ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவுரையாற்றினார்.

    பாரம்பரிய உணவு திருவிழாவை பார்வையிட்டு சமூக நலன் மற்றும் பெ ண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். அதற்கு பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சத்தான ஆகாரம் எது என்று பார்த்து சாப்பிட வேண்டும். இதுபோன்ற சில குறைபாடுகள் இருப்பதால் 51சதவீத பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.

    தற்போது கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் ரத்தம் ஏற்றி கொள்கின்ற னர். இது போன்ற குறை பாடுகள் வராமல் இருப்பதற்கு காய்கறி வகைகள் நவதானிய வகைகள் அதிக அளவில் சாப்பிட வேண்டும்

    அங்கன்வாடி பணியாளர்கள் கழிவு பொருட்களில் இருந்து பல தத்ரூபமான பொருட்களை தயாரித்திருக்கிறார்கள். மேலும் ஊட்டச்சத்து உணவுகள் தயாரிப்பதிலும், குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளுக்கான பயிற்சி எடுத்தவர்கள், கைதேர்ந்தவர்களாக உள்ளார்கள். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தை களுக்கு திறமையாக கற்றுக்கொடுக்கிறார்கள். குழந்தைகளை அறிவாற்றல் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும். முதல்-அமைச்சர் இதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    சமூக நலத்துறை சார்பாக ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளையும், குறை வான குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதற்காக ஒரு செயலி உருவாக்கி அங்கன்வாடிகளில் உள்ள 38 லட்சம் குழந்தைகளின் வயது, எடை, முகவரி மற்றும் எல்லா பிரச்சனையையும் பதிவேற்றும் செய்து வைத்துள்ளோம். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.

    ஊட்டச்சத்து குறைவா னவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் விரைவில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளார். கல்லூரி மாணவ, மாணவிகள் காலை உணவை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் ஊட்டச்சத்து அங்கன்வாடி பணி யாளர்கள் சிறப்பான முறையில் பணி யாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உதவி சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, ஹோலிகிராஸ் கல்லூரி போராசிரியர் மாரிதங்கம், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இளங்குமரன், செயலாளர் ஜீவன் ஜேக்கப், குழந்தை வளர்ச்சி திட்ட ஊரகம் அலுவலர் திலகா, உள்பட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக்ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×