search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தசரா திருவிழா: எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி.

    தூத்துக்குடியில் தசரா திருவிழா: எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • தூத்துக்குடி தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன.
    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று இருந்ததால் இது போன்ற தசரா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன. சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் 9-ம் நாள் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு தேர்வு முறையில் சிறப்பு பரிசை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று இருந்ததால் இது போன்ற தசரா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு எல்லா பகுதிகளிலும் சிறப்பாக நடைபெறுகிறது. இதை கண்டு அனைத்து தரப்பினரும் மனமகிழ்ச்சி யோடு உள்ளனர். சில கவலைகளை போக்கு வதற்கும் இதுபோன்ற இன்னிசை கச்சேரிகளும் தேவைப்படுகின்றன. எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும், தொழில்வளம் பெருகி அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையோடு

    ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பேசினார்.

    விழாவில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகர மாணவரணி அமைப்பாளர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரபு, கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், வட்டச்செயலாளர் பொன்ராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா மற்றும் சுப்பையா, கணேசன், சிவக்குமார், ராஜசேகர், வரதன், முத்துமாரியப்பன், ஜெயக்குமார், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×