என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை -அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
    X

    முகாமில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய போது எடுத்தபடம்.


    தூத்துக்குடியில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை -அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

    • இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஸ்டேட் பாங்க் காலணியில் நடைபெற்றது.
    • அமைச்சர் கீதாஜீவன் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    தூத்துக்குடி:

    மாநில தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட இளைஞர் அணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஸ்டேட் பாங்க் காலணியில் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் அந்த அந்த பகுதி நிர்வாகிகளுடன் இணைந்து மாநகரம் முழுவதும் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை எழுச்சியுடன் சேர்க்க வேண்டும்.

    நம்மோடு இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்களை அரவணைத்து கொண்டு செல்ல வேண்டும். தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். ஆட்சியின் சாதனைகளை எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இளைஞர் அணியில் இருந்து வந்த நமது முதல்-அமைச்சரை போல் சுறுசுறுப்புடன் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், துணை அமைப்பாளர்கள் முத்துராமன், அருண்சுந்தர், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, சூர்யா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், பகுதி மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி, வட்டச்செயலாளரும் கவுன்சிலருமான தெய் வேந்திரன், வட்டசெயலாளர் சந்தனமாரிமுத்து, வட்டப்பிரதிநிதி ராஜன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் கருணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×