முத்தையாபுரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு உபகரணங்கள்-அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினர்

அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான நாற்காலி, மின்விசிறி, பாய் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி அய்யன் கோவில் தெரு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
அய்யன் கோவில் தெரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.
அய்யன் கோவில் தெரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 54-வது வார்டுக்கு உட்பட்ட அய்யன் கோவில்தெரு, நாடார் தெரு, வைகோ தெரு அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான நாற்காலி, மின்விசிறி, பாய் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி அய்யன் கோவில் தெரு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநகர தி.மு.க. கவுன்சிலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, நிர்வாகிகள் சிராஜுதீன், அன்சார், கங்கசேகர், தீபக், ராஜேஷ், அசோக், கவுன்சிலர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்றார். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியில் அங்கன்வாடி குழந்தைகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com