search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும்- கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி. அருகில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்ளார்

    கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும்- கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • கீதாஜீவன், மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • வீடு இல்லாமல் மக்கள் இருக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெச்சிலா புரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மாலதி முன்னிலை வகித்தார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு அழை ப்பாளராக கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது;-

    இக்கிரமம் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இலவச கழிப்பிடம், பேவர் பிளாக் சாலை, குளம் தூர் வார்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.64 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. 15-வது நிதி குழு திட்டம் படி ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வீடு இல்லாமல் மக்கள் இருக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் அடிப்படையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் உள்ள 15 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி தரப்பட உள்ளது முதல்-அமைச்சருடைய நோக்கம் எல்லோருக்கும் வீடு கட்டி தர வேண்டியது என்பது தான்.இவ்வாறு அவர் பேசி னார்.

    பின்னர் கிராம சபை கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு குறித்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரி விக்கப்பட்டது. இதில் விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்க வேல், முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், மாரிமுத்து, சமூகவலைதள பொருப்பாளர் ஸ்ரீதர் உட்பட அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×