search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sawyerpuram"

    • பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிநடைபெற்றது.
    • புளியநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் நடந்தது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் தூய்மையை சேவை பணி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார்.

    இதில் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்கள், மஸ்தூர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தூய்மை சேவை பணி உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து புளியநகர், நடுவக்குறிச்சி, மாசிலாமணிபுரம் மற்றும் செபத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் நடந்தது. பின்னர் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • கொடை விழாவில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம், வில்லிசை கச்சேரி நடைபெற்றது.
    • திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள், சிறுமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள முள்ளன்விளை கருப்பசாமி கோவில் கொடை விழா நடந்தது. இதில் அலங்கார பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை, அன்னதானம், வில்லிசை கச்சேரி நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள், சிறுமிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை கருப்பசாமி கோவில் தர்மகர்த்தா பாலமோகன் செய்து இருந்தார்.

    • நோயாளிகளுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி உள்ள வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது
    • காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்காக முகாமிற்கு அழைத்து வந்தனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புளியநகர் டி.என்.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் ஏரல் வட்டார காச நோய் பிரிவு மற்றும் செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமினை புளியநகர் ஊர்நலக் கமிட்டி தலைவரும், சாயர்புரம் கூட்டுறவு வங்கி தலைவருமான அறவாழி தொடங்கி வைத்தார். நல்லாசிரியர் ஞானராஜ், தி.மு.க. வார்டு செயலாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நோயாளிகளுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி உள்ள வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மலைவிக்னேஷ், கண்ணன், செல்வராஜ், சுரேஷ், சுகாதார செவிலியர் ஷீலா, சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, சரவணன், இடைநிலை சுகாதார செவிலியர், முத்துலட்சுமி, பூர்ண கலையரசி, காசநோய் சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை ஆகியோர் காசநோய் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

    முன்னதாக சுகாதார தன்னார்வலர்கள் சங்கரி, வெள்ளையம்மாள், விஜயா, உமா, மகேஸ்வரி ஆகியோர் புளியநகரில் வீடு, வீடாக சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதனைக்காக முகாமிற்கு அழைத்து வந்தனர். முகாமில் இருட்டறை உதவியாளர் எட்டையா மற்றும் ஹரி பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செபத்தையாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜனனி முகாமினை ஆய்வு செய்தார்.

    • கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சாயர்புரம்:

    நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பண்டாரம் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், வார்டு உறுப்பினர்கள் ஜான்சிராணி, சரோஜா, பண்டாரம், மணி மந்திரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஜோதிகனி, உச்சிமாகாளி, தேவிகலா டிவிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பாக செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளச்சாமி பணித்தள பொறுப்பாளர்கள் எஸ்தர், மருதவள்ளி, மேரி ஆனந்தி மற்றும் ஊராட்சி பொதுமக்கள், சுயஉதவிக்குழுவினர் 100 நாள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டிற்கான வரவு-செலவுகள், 2021-22 ஊராட்சி தணிக்கை அறிக்கை, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, அனைவருக்கும் வீடு திட்டம் கணக்கெடுப்பு ஒப்புதல், நெகிழி ஒழிப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், 15-வது நிதிக்குழு மானிய பணிகள் ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முத்துராஜ் செய்திருந்தார்.

    • 10 நாட்கள் நடைபெற்ற முகாமின் கடைசி நாளில் மாணவ, மாணவிகள் 1,000 செம்மரங்கள் நட்டனர்.
    • விழாவை ஏரல் தாசில்தார் கண்ணன் தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் உள்ள டாக்டர் ஜி.யு. போப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் திருப்பணி செட்டிகுளத்தில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற முகாமின் கடைசி நாளில் நலப்பணி மாணவ, மாணவிகள் 1,000 செம்மரங்கள் நட்டனர்.

    நிகழ்ச்சிக்கு தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜாபிந்த் முன்னிலை வகித்தார்.

    விழாவை ஏரல் தாசில்தார் கண்ணன் தொடங்கி வைத்தார். வளசகாரன்விளை டாக்டர் ஜெபராஜ் மற்றும் திருப்பணி செட்டிகுளம் ஊராட்சி தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதில் ரஜினி, எபனேசர், கமலேஷ், திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் சரளா, செயலாளர் இந்துமதி, மற்றும் மாணவ- மாணவிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் மற்றும் உதவி பேராசிரியர் டென்னிசன் செய்திருந்தார்.

    • கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
    • முகாமில் மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள15-வது வார்டில் செபத்தையாபுரம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நட்டாத்தி பஞ்சாயத்து துணை தலைவர் பண்டாரம், சுப்பிரமணியபுரம் சேகர குரு டேவிட் ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் பொதுமக்கள் அனைவருக்கும் பொதுமருத்துவம் நீரழிவு நோய்,கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் லேப் கண் சிகிச்சை ஹோமியோபதி, சித்தா மருத்துவம் டெங்கு பற்றி விழிப்புணர்வு, தொழுநோய் சிகிச்சை, மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பணி செட்டி குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், தூய மேரி நர்சரி பள்ளி தாளாளர் சுதாகர் மைக்கேல், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், சுப்பிரமணிய புரம் சேகர பொருளாளர் தேவ ஆசிர்வாதம், செயளாலர் ஜோசப் மாசில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பொற்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை ஏரல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் செய்து இருந்தார்.

    • சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை சங்க தலைவர் அறவாழி வழங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கி, 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்து 849 மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் வங்கி மேலாளர் பெருமாள், காசாளர் கிருபாகரன் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

    • திருப்பணி செட்டிகுளத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள திருப்பணி செட்டிகுளத்தில் செபத்தையபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இந்த முகாமிற்கு திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரளா முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜான், உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், கால்நடை உதவி மருத்துவர் வேல்மாணிக்கவல்லி, கால்நடை ஆய்வாளர்கள் சாந்தி , சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கோமதி, லெட்சுமி, பேச்சியம்மை ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை சுகாதாரமாக பராமரிப்பு பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்பட்டது.சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிப்பவர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கால்நடை வளர்க்கும் மக்கள் தங்கள் கால்நடைகளுடனும், பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் நீதியின் சூரியன் உட்பல பலர் பாராட்டினார்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான ஜிம்கானா மற்றும் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 35-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபாரமாக விளையாடி ஜீனியர் பிரிவு மற்றும் சீனியர் பிரிவில் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினர்.

    வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் நீதியின் சூரியன், உடற்கல்வி இயக்குநர் பெஞ்ஜமின் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் எட்வின் தேவதாஸ் ஆகியோரையும், பள்ளியின் தாளாளர் பிரேம்குமார் ராஜாசிங், பள்ளியின் தலைமை ஆசிரியர் அகஸ்டின் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.


    ×