என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாயர்புரம் பேரூராட்சியில் தூய்மையே சேவை பணி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
- பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிநடைபெற்றது.
- புளியநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் நடந்தது.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சியில் தூய்மையை சேவை பணி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார்.
இதில் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்கள், மஸ்தூர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தூய்மை சேவை பணி உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து புளியநகர், நடுவக்குறிச்சி, மாசிலாமணிபுரம் மற்றும் செபத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் நடந்தது. பின்னர் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
Next Story






